Friday, July 10, 2026

O K -2

 SPECIAL POSTING SATUR DAY BLOG 

              சிறப்பு ப்பதிவு

                                            கா  கோ

  கா  கோ  என்றால் புகழாரம் என்று நினைத்து விடாதீர்கள். மாறாக இதன் பொருள் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஓடிப்போன கோமாளிகளும்  என்பதே. .  எப்போதெல்லாம் கா இல் குழப்பம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உடனே இதை நா சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்று பாக் .அரசியல் தலைமை முயல உடனே ஜிங் ஜிங் என்று தாளமிட்டு ஒலியெழுப்ப ஒரு கூட்டம் அம்புலன்ஸைவிட அவசரமாக இயங்க தயாராக இருந்துவந்தது. அதன் பின்னணியில் இருந்த முனைப்பு மதம் சார்ந்தது என்பதையும் விட இந்தியாவை ஒரு கையாலாகாத நாடு அங்கும் பசியும் பஞ்சமும் வேலை இன்மையும் , சுகாதார சீர்கேடுகளும் விரிந்து விரவிக்கிடப்பன என்று ஓயாமல் லாவணி பாடி இந்தியாவை மட்டம் தட்டி ஏதோ அவர்கள் வாழும் இடங்கள் தேவபுரியில் இருப்பது போல் பசப்பி வந்தனர்

இதெல்லாம் கறிக்குதவாத பேச்சு என்று இந்தியா எண்ணியது மட்டுமல்ல முனைந்து விரைந்து செயல் பட்டு பல நிலைகளிலும் சர்வதேச அரங்கில் வலிமையான இடத்தை எட்டிவிட்டதுஇன்னும் தன்னையும் தனது பெருமைகளையும் சற்றும் மங்காமல் காத்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. இவற்றை புரியாமலோ அல்லது புரியாதது போல் நடித்துக்கொண்டோ அவ்வப்போது ஏதாவது புரளி பேசிவந்தவர்கள் இந்தியா உள்பட பல தேசங்களிலும் இருந்து கொண்டு இந்திய நிந்தனை செய்வதை வேள்வியாகவே அரங்கேற்றி அதை உள்நாட்டில் வேரூன்றச்செய்ய பல வித நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள் என்ற போர்வையில் இயங்குவதை பலரும் அறிவர். இதன் ஒரு அங்கமாகவே அவ்வப்போது இந்திய விரோத விமரிசனங்கள் பிரிட்டனில் பேசப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கா வில் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி போராடுவதையும், அங்கே உணவுப்பஞ்சம், குழந்தைகளுக்கு பால் தட்டுப்பாடு மருந்துகள் சரிவர கிடைக்காத நிலை என பாக் அரசின் மெத்தனம் மற்றும் மக்களை ராணுவம் கொண்டு தாக்குவது மேலும் மக்கள் பாகிஸ்தான் எங்களுக்கு தேவை இல்லை என போர் முழக்கம் செய்வதை அந்நாட்டு எம் பி . ஒருவர் சபையினுள் பேச , நீண்டகாலமாக இந்தியாவை கேவலமாக சித்தரித்த கோமாளிகள் இப்போது ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டு அவர்கள் ஓடி ஒளிந்தவர்கள் என்று பலரும் விமரிசிக்கின்றனர்.

இதற்கிடையே கா வின் ராயல்கோட் பகுதியில் மாபெரும் போராட்டத்திற்கு கா மக்கள் குவிந்துள்ளனர். மிகப்பெரும் போராட்டம் வெடிக்கப்போவது தெரிகிறது. இந்த பொதுமக்களை சமாளிக்க பாக் ராணுவத்தினர் பெருமளவு ஆயுதங்களுடன் குவிக்கப்படுவது கண்டனத்திற்கு உள்ளாவதையும் செய்திகள் வாயிலாக அறிகிறோம்.இருக்கும் நிலையை பார்த்தால் இரண்டில் ஒன்று என்ற நிலை நோக்கி நகர்கிறது எனலாம்

. காஷ்மீரில் நிலைமை தீவிரமாகி வருவதையும், உணவு, மருந்து பால் விநியோகம் இவற்றை அரசு முடக்கி இன்னல் விளைவிப்பதாக பெரும் போராட்டம் நிகழ்கிறது. அவர்கள் இப்போது இந்தியாவின் தலையீட்டையும் முன்னெடுப்பையும் விரும்புவதும் இந்தியாவுடன் இணைவதற்கு ஆயத்தப்படுவதையும் செய்திகள் மூலம் அறியலாம்.

'காலம் ஒரு நாள் மாறும் , நம் கவலைகள் யாவும் தீரும்" என்று கண்ணதாசன் பாடினார். இது அது போன்ற ஒரு நிலையோ. ?  வீடியோக்களை பாருங்கள் 

https://www.youtube.com/watch?v=3OeRVbV63d8 POK IN LONDON PARLIAMENT

https://www.youtube.com/watch?v=lOHRQnjQYWo pok boils

rawalakot

https://www.youtube.com/watch?v=zmjvQCL1dZ0 pok  food crisis

நன்றி       அன்பன்

No comments:

Post a Comment

O K -2

  SPECIAL POSTING SATUR DAY BLOG                சிறப்பு ப்பதிவு                                            ஆ   கா   ஓ கோ ஆ   கா   ...