Tuesday, October 31, 2023

GEOLOGY opportunities

 GEOLOGY

புவியியல்

புவியியல் எனப்படும் ஜியாலஜி , பலவகை விஞ்ஞான கூற்றுகளை உள்ளடக்கிய ஒரு துறை எனில் மிகை அன்று. இந்த அறிவியலில், பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி, தாவரவியல், விலங்கியல், ஜியாக்ராபி [பூமி சார் விளக்கம்] , தொல்லியல் [PALEONTOLOGY] என அமைந்த அடிப்படைக்கூறுகளை உள்ளடிக்கியது. மேலும் பூமியின் அங்கங்களாகிய, கல் மண் , ஆறுகள் ,காடுகள் , கனிம வளங்கள் பற்றிய நுணுக்கங்களை ஆய்வு செய்ய/ வகைப்படுத்த தேவையான தொழில் முறை பயிற்சியும் கொண்டது. எனவே, ஜியாலஜி ஒரு இன்றியமையாத நுண் அறிவியல் எனில் மிகை அன்று. எதிர்காலத்தில், இத்துறை பெரும் முக்கியத்துவம் பெறவுள்ளது மற்றும் பெற வல்லது என்பது நன்றாக தெரிகிறது.  ஒரு சில கல்வி மையங்களில், இத்துறைக்குத்தேவையான, கம்பியூட்டர் தகவல் ஆய்வு பயிற்சி அளிக்கிறார்கள். அந்த திறன் கொண்டோர்,சாட்டிலைட் தகவல்களை தொகுத்து ஆய்வும் செய்யவல்லவர்கள். இந்தக்கல்வி படைத்தோருக்கு பல முக்கிய துறைகளின் கதவுகள் திறந்தே உள்ளன.  அவற்றில் பெரும்பாலும் அரசுத்துறைகளும், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களும் வேலைவாய்ப்புகள் மிகுந்தவை. இவற்றை அடிப்படையில் மூன்று வகையினதாக பார்க்கலாம் .

 அவை கார்ப்பொரேட் நிறுவனங்கள் 2] அரசுத்துறை அமைப்புகள் ,3] கல்வித்துறை . இவை நீங்கலாக NON -PROFIT எனும் நலம் சார்ந்த அமைப்புகள். இவை ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மனித நலம் காப்பன.

பல கார்ப்பொரேட் நிறுவனங்கள் , உலகளாவிய ஒப்பந்தங்களை பெற்று தொழில் முன்னற்றத்தில் பங்கு கொள்கின்றன. சுரங்கப்பணிகள் வாயிலாக , நிலக்கரி வைரம், தங்கம் , வெள்ளி மற்றும் எண்ணற்ற கற்கள், வைடூரியம், கோமேதகம் மற்றும் பிற நவ இரத்தின வகைகளை வெளிக்கொணர்ந்து பெரும் மார்க்கெட்டை நிர்வகிக்கின்றன.

இவை தவிர , பெட்ரோலியம் வகை மூலப்பொருட்களை பூமிப்பகுதி மற்றும் கடலின் ஆழ்நிலை கிணறுகளில் இருந்து வெளிப்படுத்தி பொருள் ஈட்டும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களில் சாத்தியக்கூறுகளை முன் கூட்டியே அறிய ஜியாலஜி விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள் .

அரசுத்துறை அமைப்புகளிலும் ஜியாலஜி பட்டம் பெற்றோர் உயர் பதவிகளில் இடம் பெற்று ஆலோசகர், அறிவுரையாளர் போன்ற பதவிகளில் பணியாற்றும் வாய்ப்புகள் ஏராளம் . இவை நீங்கலாக இப்போதெல்லாம் அரசுகளே பிற நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இது போன்ற 'பெரும் ' திட்டங்களை நிறைவேற்ற உயர் கல்வி கற்ற ஜியாலஜி விற்பன்னர்க;ளை பணியமர்த்திக்கொள்கின்றனர்.

ஆசிரியப்பணியில் குறிப்பாக உயர் கல்வித்துறையில் ஜியாலஜி யினருக்கு பல வாய்ப்புகள் உள்ளன.

அன்பன் ராமன்  

Monday, October 30, 2023

SEENU IYENGAAR IN CINEMA SHOOTING

 SEENU IYENGAAR IN CINEMA SHOOTING

சினிமா ஷூட்டிங்கில் சீனு ஐயங்கார்

இந்த தலைமுறை சினிமா ஷூட் [SHOOT ] என்று எழுதி இதில் தப்பு ஒன்றும் இல்லை என்று வாதிடும் -வாதிராஜ் கூட்டம் . ஆனால் நமக்கு ஷூட்டிங் என்று எழுதினால் தான் மனம் அமைதி கொள்ளும். சரி யார் திடீரென்று ஒரு சீனு அய்யங்கார் என்போருக்கு எனது பதில். சீனுவின் பெயர் ஸ்ரீனிவாசன் ;அவர் ஐயங்கார் என்பதால் சீனு அய்யங்கார் என்று அழைக்கிறோம்.. சீனு அய்யங்கார் [சீ . ] ஒரு தஞ்சையம்பதி வைஷ்ணவ சிரேஷ்டர். அவர் பேச்சில் வசவு வார்த்தைகள் சும்மா பீறிட்டு பொங்கும்  அதிலும் ஒழுக்கம், கெளரவம் கண்ணியம் நாசுக்கு என்று அளவுகோல் பிசகாமல் நடந்து கொள்வார். தவறு கண்டால் கொந்தளிப்பார் .அது தான் சீனுவின் காரக்டர்..

அவரது அடுத்த வீட்டு நண்பன் ரகு என்னும் ரகுநாதன் -இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திருச்சி பிரிவில் டிராபிக் கண்ட்ரோலர். சீனு வின் நண்பன் ரகு ஆனால் ரகு ரொம்ப மாடர்ன், சீனு கேட்கவே வேண்டாம் பயங்கர கட்டுப்பெட்டி, நாமம் வெற்றிலைபாக்கு சாரி வெற்றிலை சீவல் ட்ச் ட்ச் என்று குதப்பிக்கொண்டு ராக ஆலாபனை வேறு. பற்களில்  பெரும்பாலானவை விழுந்து விடை பெற்றுவிட, பேச்சு ஓட்டை ஹார்மோனியம் போல பிஷ் துஷ் ற்ற ற்ற போன்ற ஒலிகளின் கூட்டமைப்பு. ழகு ழகு என்றல் ரகு ரகு என்றும் திப்புஷ சுந்தழு என்றால் திரிபுரசுந்தரி என்றும்  பொருள். எனவே ரகு ஒருவனால் தான் சீனுவை சமாளிக்கவோ, கையாளவோ இயலும். ஜே ழகு மெடடாஷ் போழ்ச்சே  ஷொல்லு நானும் வழேன். என்றார் ஷீனு ரகு மிரண்டான் .

ரகுவுக்கு FLIGHT இந்தியாவுக்குள் இலவசம் + 1 GUEST அனுமதி உண்டு. ஆனால் திடீரென்று மெடாஷ் என்கிறாரே இவரை அங்கே கொண்டுபோய் சமாளிப்பது எளிதா என்ன? இத்தனையும் ரகுவின் கவலை.மெட்றாஸ்ல என்ன, அங்க யாரையாவது சொந்தக்காராள பாக்கணுமா என்றான் ரகு .. நேக்கு ஏது ஷொந்தம் அதுவும்மெட்டாஷ்ல" --ஷீனு .

பின்ன ? -ரகு .

ஒன்னோத வந்தா ஊர ஷுத்திப்ட்டு , ஷினிமா ஷூட்திங் பாட்துட்டு    ஒரு ரெண்டுமூணு நாள் நீ கூஷ்டிந்து போ மாட்டயான்ன ? என்று தீர்மானித்து   ரகு பேசமுடியாமல் மடக்கிவிட்டார் ஷீனு.

மெட்ராஸ் போணுமாம் மெட்றாஸ் அதுல ஷூட்டிங் வேற -- கிழம் லேசுப்பட்டதல்ல என்று உள்ளூர குமுறினான் ரகு .[கிழமாவது பழமாவது -பல்லு  தான் இல்லையேதவிர லொள்ளு ஜொள்ளு ரெண்டும்  இம்மி  குறையாம  உடலெங்கும் களி நடனம் புரிகிறது சீனிவாச ஐயங்காருக்கு].

என்ன யோஜனை? ஒன் ப்ரெந்த் சந்தரனோ, இந்தரனோ டைரக்டர் னு அதிக்கதி  [அடிக்கடி ] மொழங்கிண்டுப்பியே அவன்ட்ட ஷொல்லி   ஏஷ்பாடு பண்ணு நீ யமகாதகனாஷ்க்ஷே ஜமாஷ்சுப்பிடுவ , நேக்கு தெழியும் என்று அட்டையாக ஒட்டிக்கொண்டார் ஷீனு.  

ராகு தனது காலை சுற்றிக்கொண்டுள்ளது என்று ரகுவிற்கு தெரியும். எனவே சந்திரனிடம் போன் பேசி அடுத்தவாரம் 6 நாளும் ஷூட்டிங் என்றும் ஒவ்வொரு நாள் ஒவொரு இடத்தில் என்றும் கேட்டு தெரிந்து கொண்டான். ஆனால் கிழத்துக்கு சொன்னால் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் பார்க்க வா என்று ஆரம்பித்தால் - ஐயோ  -நம் பாடு ஆபத்து என்று முடிவு செய்து சரி ஒரு 3 நாள் விடுமுறையில் பிளைட் டிக்கட் போட்டான்.

ஆமாம் உங்க மாமனார் மெட்றாஸ் தானே என்று சீனு ஐயங்காரிடம்  ஆரம்பிக்க முகம் சிவந்தார் சீனு. ஏனெனில் வெகுநாட்களாக மாமனார் குடும்பத்துடன் நல்லுறவு இல்லை ;மேலும் 4 ஆண்டுகளுக்கு முன் மாமனார் மறைந்துவிட்டார்; மைத்துனர்கள் எங்கே என்று தேடும் நிலையில் இல்லை . 18 மாதங்களுக்கு முன், Mrs சீனு மறைந்தார்.    .எனவே, சீனு இப்போது வான் பறவை.

முகம் சிவந்த சீனு "கபோதிப்பயக .ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாத மரமண்டையனுக. ஒருத்தனுக்கும் மூளை ங்கறதை தொட்ட கையால  கூட தொடல்ல, அவனு களப்பத்தி பேசாத   என்று ரகு வின் வாயை அடைத்தார்.

ரகு பயணதகவல்களை முடிவு செய்து கொண்டு தன்னுடைய பெரியப்பா வீட்டில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து விட்டு சீனுவிடம் தெரிவிக்க, சீனு வாயெல்லாம் பல் மைனஸாக சிரித்தார் இன்று புதிதாய்ப்பிறந்த    பொக்கை வாய் போல சிரித்து, நீ சூழன் [சூரன்]டா பேஷ் பேஷ் என்று சென்னைக்கனவில் மூழ்கினார்.

தொடரும்

அன்பன் ராமன்

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...