Sunday, February 15, 2026

MADURAI -2

 MADURAI -2

மதுரை-2

மதுரை குறித்த எனது முந்தைய  பதிவு சுமார்  65க்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்துள்ளது. சமீப நாட்களில் இதுவே உயர்ந்த எண்ணிக்கை . அன்றாடம் 15-20 பேர் மட்டுமே வாசகர்கள்

என் எழுத்தின் தலை எழுத்து புரிகிறது.

திடீரென இவ்வளவு வாசகர்கள் என்றால் அது மதுரையின் பெருமை எனது எழுத்தினால் அல்ல. இந்த சூழலில் தான் பேராசிரியர் டாக்டர் கண்ணன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார் [Dr.Kannan is a retired Prof and Head Dept. of Sociology , Madurai Kamaraj University , Madurai and he is now a resident of Chennai.]

எதையும் ஆழ்ந்து அலசும் திறனும் எழுத்து வலிமையையும் மிக்கவர். அவரது ஆங்கில புலமைக்கு பல விசிறிகள் உளர் -அடியேன் உட்பட. . அவரது கருத்து அப்படியே தரப்பட்டுள்ளது

Madurai happens to be the ‘Writers’ delight. No wonder Prof.Raman has chosen to write his impressions about Madurai, which are so vivid.

The city happens to be the choice of  pilgrims, tourists,and general public in view of a host of attractions like places of worship, picnic spots,availability of cost-effective goodsand services,The geographical location  of the city makes it all the more advantageous  for the visitors.

Prof.Raman’s inimitable style is an object lesson for fellow writers. The visual pepresentations he has presented ( links) lend substance and speak volumes about the treatment of the theme.

Kudos Prof.Raman

Thank you  Dr. Kannan

Dr. R Rangarajan has posted a nostalgic  recall of Madurai in the ‘comments’ section of the posting.

As ever, Mr.Ashok had expressed his response through WA  and another was from Dr.K.Vwnkataraman who had said  மதுரை மணம் எங்கும் வீசட்டும்

I profusely  thank all respondents

மதுரை-2  தொடர்கிறது

மதுரை 

இத்தொடரின் இரண்டாம் பதிவும் கூட மதுரை நகரின் எண்ணற்ற உணவு வழங்கும் எளிய கடைகள், தள்ளு வண்டிகள் , மற்றும் தாற்காலிக இருக்கைகள், ம ள ம ள என கேட்டதைத்தரும் கரங்கள் கூடவே யார் என்ன சாப்பிட்டார்கள் என்ற பிழையில்லா மனக்கணக்கு ; பணம் செலுத்தும்போது வந்தவர் தவறா கச்சொன்னால் ஐயா 4 வடை கணக்கு விட்டுப்போயிருக்கும்போல இருக்கு , வீட்டம்மா வை கலந்துக்கிட்டு நான் சொல்றது சரின்னா  பணம் கொடுங்க, இல்லைன்னா நாளை பின்ன வந்தா குடுங்க இப்ப என்ன நட்டக்களுதையா போச்சு உங்கள மாதிரி நாலு பேர் வந்தாதான் எங்க பொ ள ப்பு ஓடும் என்று கோபம் காட்டாமல்  பேசும் மதுரை மண்ண வரின் நேர்த்தி சொல்லி மாளாது.  வந்தவர் வெளியூர்வாசி என்றால் , கையெடுத்துக்கும்பிட்டு போயிட்டு வாங்கய்யா  என்று புன்னகைத்து அனுப்பும் மதுரைப் பண்பு இவை வேறிடங்களில் காண்பது எளிதன்று. இவை ஒரு புறம் புதுமுகங்களுக்கு கிடைக்கும் அனுபவம் எனினும்,தொடர்ந்து அன்றாடம் வந்து உணவு கஸ்டமர்கள் "இங்க நான் 30 வருஷமா சாப்பிடுறேன் உடம்புக்கு தொந்தரவே செய்யாது, வீட்டில சாப்பிடுவது போலவே இருக்கு" [உள்ளூர குமுறல் வீட்டுல சாப்புடுறாப்பிலயா இருக்கு என்று புலம்பி தானே இங்கே வருகிறார் ] . இப்படி பலரின் நேரடி அனுபவ முத்திரைகளுடன் வீடியோ பார்ப்பது ஒரு சுகானுபவம்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேல பட்டர் மார் தெருவில் [வடக்கு கோபுரம் எதிரே] இயங்கி வரும் KMS ஐயர் டிபன் சென்டர் பற்றி எண்ணற்ற வீடியோக்கள் வலம் வருகின்றன. பொருட்களின் விலைகளைப்பாருங்கள் -மக்கள் ஏன் இப்படி ஈ போல் மொய்க்கின்றனர் என்பது நன்கு விளங்கும். ஐயரின் மகன் தனி ஆளாக கடை திறந்து வாசல் தெளித்து கோலம் போட்டு ,சுலோகம் சொல்லி இறைவனை வணங்கி , இயந்திர வேகத்தில் வடைகளை  செய்து குவிக்க கேட்டவருக்கு கேட்டபடி பூரி , அவ்வப்போது பார்சல் இடைஇடையே சட்னி வையுங்க சாம்பார் ஊத்துங்க என்ற வேண்டுகோள்களுக்கும் ஈடு கொடுத்து , முக மலர்ச்சியுடன் உணவளிக்கும் ஆன்மாவை அனைவரும் வாழ்த்துவதில் வியப்பென்ன? 

https://www.youtube.com/watch?v=-2iLEpu5ljc&t=389s KMS DAILY CHORE

https://www.youtube.com/watch?v=gnuSYn_sJtw KMS IYER E A M  ST

இந்த ஐயர் கடைக்கு டூரிஸ்ட்கள் கேரளா, உபி , பிஹார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, அன்றாடம் படை எடுப்பது கண்கூடு ஞாயிறு மட்டும் ஐயருக்கு  ஓய்வு. அன்று வேறெங்கோ போகவேண்டி இருக்கும். இதில் மலையாள வீடியோ இருக்கிறது . விலையைப்பார்த்தவன்  தேடிப்பிடித்து இங்கு வரத்தான் செய்வான். விலைதான் குறைவே தவிர தரம் உயர்தரம் என்று எல்லோரும் பாராட்டுகின்றனர்

https://www.youtube.com/watch?v=G9r4prS152w KMS MALAYALAM

சென்ற பதிவில் வந்த வட இந்திய அன்பர் இப்போதும் மதுரையின் எண்ணற்ற உணவு வகைகளை சுவைத்தபடி பேருவகை கொண்டு உலாவரும் வீடியோவைப்பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=4Xxa5aW48k8&t=113 North Tourist on MDU FOOD

மதுரையின் எண்ணற்ற உணவு விவரங்களை நான் சொல்வதை விட வீடியோக்கள் மூலம் பாருங்கள் பரோட்டா இங்கே பறக்கிறது என்பதே உண்மை. பறக்கும் பரோட்டா, தரம் தராமல் இங்கே காலம் தள்ள முடியாது, 5/- ரூபாயோ  50/- ரூபாயோ வாங்குபவன்  1000 கேள்வி கேட்பான் என்பதை சொல்லாமல் சொல்லும் உரிமையாளர்கள் -புரிகிறதா ஏன் மதுரைக்கு நிகர் மதுரை தான் என்று. வீடியோ இதோ

https://www.youtube.com/watch?v=d-32CWCaCgQ

இவை ஒரு புறம் இருக்க நான் இங்கேயே தான் இருக்கிறேன் என்று வீரமுழக்கமிடும் நாராயணா ரெஸ்டாரண்ட் , பீபீ குளம் [வடமலையான் மருத்துவமனை அருகில் ] இன்றும் பீடு நடைபோடுகிறது. தரமான சைவ உணவு இவர்களின் சிறப்பு. இது நகரின் வெளிப்புற காலனியில் இயங்கி 50 ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் பேராதரவோடு உயிர்ப்புடன் இயங்கு கிறது. டாக்டர் சார் -உங்களுக்காகவே இந்த வீடியோ , பழைய நினைவுகளில் மூழ்கி முத்தெடுங்கள்

https://www.youtube.com/watch?v=xj6NoV_36VE Narayana Restaurant bibikulam  Madurai

உள்நாட்டு உணவுப்பிரியர்கள் தான் மதுரையின் சுவையில் மயங்கித்திரிகிறார்கள் என்றால் மேலை நாட்டவர் அமெரிக்கர் ஒருவர் ஒன்று விடாமல் சுவைப்பதுடன் வேட்டி அணிந்து நகர் எங்கும் உணவுச்சாலைகளில் , கடைகளில் புகுந்து புறப்பட்டு முகமலர்ச்சியுடன் சுற்றுவதை என்ன சொல்ல?

மதுரை சுற்றிய கழுதை கூட வேறெங்கும் போகாது என்பது அனுபவ மொழி அல்லவா ? அது பொய்க்குமா ?  

https://www.youtube.com/watch?v=LeELY7MlCeo WESTERN TOURIST-MDU

இன்னும் வரும்,       அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MADURAI -2

  MADURAI -2 மதுரை-2 மதுரை குறித்த எனது முந்தைய   பதிவு சுமார்  65 க்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்துள்ளது . சமீப நாட்களில் இது...