Wednesday, September 30, 2026

I PERCEIVED THE SONG -2

 I PERCEIVED THE SONG-2

Naan unnai cherndha selvam  KD VR PBS PS ‘KALAIKOIL’ 1964

நான் உன்னை சேர்ந்த செவ்ல்வம் [கலைக்கோயில் -1964] கண்ணதாசன், வி- ரா , பிபி ஸ்ரீனிவாஸ் , சுசீலா

62 ஆண்டுகள் முன்னர் வந்து இன்றும் குன்றாத இளமையுடன் ஒலிக்கும் மாசில்லாத வர்ணனை. சொல்லில் கெளரவம் , பொருளில் ஆழ்ந்த கம்பீரம், உவமைகளில் காவியத்தன்மை ,  உள்ளார்ந்த காதலின் தூய்மை இவை தவிர காட்சியின் மனிதர்கள் குறித்த நளினமான சொல்லாடல் இவை கண்ணதாசனின் சொத்து எனில் மிகை அல்ல. முதலில் கவி அரசர் சொல்வதென்ன அதை உணர்ந்து ரசிப்போம்

நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்  சிறிதும் விரசமில்லா உரையாடல் -காதலர் மனங்களின் ஒலியாக .                              சரி

தன்னிலை பேசும் மன விளக்கம் [சரணம் 1]

பெண் மனம்

நம் காதல் உள்ளம் கலைக்கோயில்

இரு கண்கள் கோயிலுக்கு வாசல்

நமதாசை கோயில் மணி ஓசை

அதில் அன்பு வண்ண மல ர் பூஜை 

ஆண்

ஸ்ரீ ராமன் நெஞ்சில் நின்ற சீதை

மலர்  கண்ணன் தேடிக்கொண்ட ராதை

மனம் உருகி சூட்டிக்கொண்ட கோதை

ஒன்று சேர்ந்து வந்தது இந்தப்பாதை /இந்த ப்பாவை என்றும் சிலர் சொல்வதுண்டு தனது மனைவியை தெய்வீக நாயகிகளுக்கு இணையாகப்பேசும் ஆண் மனம்

பெண் மன   மென்மை /மேன்மை  இரண்டும் தோன்ற கவிதை யாத்த கண்ணதாசன்

உன் விரல்கள் என் அழகை    மீட்டும்

உன் விழிகள் என் உயிரை வாட்டும் 

உன் குரலும் என் பெயரைக்கூட்டும்

அது கோடி கோடி இன்பம் காட்டும்  

ஆண்  என்ன சளைத்தவனா ?

உன் அச்சம் நாணம் என்ற நாலும் [ 4 ]

என் அருகில் வந்தவுடன் அஞ்சும்  [5]

இதழ் பருகும் போது  நெஞ்சம் ஆறும் [6]

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்    [7] 

 என்று எண்  வரிசையில் 'அவளை'  வர்ணிக்க பாடல் நேர்த்தியாக மீண்டும் பல்லவியை இரு குரல் வடிவில் ஒலித்து நம்மை சிறிது நேரம் ஆட்கொள்கிறது.

இசையின் வீச்சு

இதில் கவிதை பேசும் நேர்த்தியை இசையும் பேச ஒரு அற்புத கவிதை இது. அவ்விடத்தில் விஸ்வநாதன் விஸ்வரூபம் காட்டுவதைக்காணலாம். சும்மா சொல்லக்கூடாது டூயட் வகைப்பாடல்களுக்கு அவர் வகுத்த எல்லைகளும் இசைக்கூறுகளும் தனித்துவமானவை . 

எவ்வளவு மென் குரலில் ஆண் பாட பாடல் நம்மை ஈர்க்கிறது

நன்கு கவனியுங்கள். ஒவ்வொரு பாடல் வரியிலும் இறுதிச்சொல்லை  எவ்வளவு நெளிவு சுளிவு வைத்து இசை அமைத்திருக்கிறார் எம் எஸ் வி அவர்கள்.

நான் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு இடைத்தை யும்   திரும்ப திரும்ப வீடியோ பார்த்து ஊன்றிக்கேளுங்கள் ஏன் அவரை இவ்வளவு ரசிக்கிறோம் என்பது புலனாகும்

நம் காதல் உள்ளம் கலைக்கோயில்

இரு கண்கள் கோயிலுக்கு வா--சல்

நமதாசை கோயில் மணி ஓசை

அதில் அன்பு வண்ண மல ர் பூ   ஜை  என்ற அளவில் குரலில் ஏற்ற இறக்கங்களைக்காணலாம்

உன் விரல்கள் என் அழகை    மீ ட்டு ம்

உன் விழிகள் என் உயிரை   வா  ட்டு ம் 

உன் குரலும் என் பெயரைக்  கூட்டு  ம்

அது கோடி கோடி இன்பம்       காட் டும்  

என்ற காலப்ரமாணத்தில் பாட வைத்துள்ளார். ஒலிப்பதிவில்  மிகுந்த கவனம் செலுத்தி இந்த இறுதி சொற்கள் ஒரு எதிரொலிப்புடன் பதிவிடப்பட்டுள்ளது அது பி சுசீலாவின் குரலுக்கு மேலும் மெருகேற்றியுள்ளது கேட்க ஆனந்தமான பகுதி. விரல்கள் மீட்டும் என்று 'அவன்' வீணை வித்துவான் என உணர்த்தியுள்ளார் கவிஞர். இவை தவிர பாடலின் சிறப்பு என்ன என்றால் அற்புதமான குழல் வாசிப்பும் ஒவ்வொரு சொல்லுக்கும் துணை நிற்கும் போங்கோ ஒலி யும்  [திரு கோபாலக்ருஷ்ணனின்வாசிப்பு என்று நினைக்கிறேன்] மற்றுமோர் அம்சம், குரல்கள் மெல்ல பாடி பயணிக்க, இடை இசை துரித கதியில் இயங்கி ஒரு புதிய பரிமாணம் காட்டியுள்ளது.

என் சிற்றறிவுக்கு எட்டிய விவரங்களை நான் உணர்ந்தேன் ரசித்தேன் பாடலுக்கு இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=WEh867LwouE&t=5s

நான் உணர்ந்த சில பண்புகளை நீங்களும் அறிய, இப்பாடலின் இசைத்தட்டு கேளுங்கள். இசையின் / குரலின் மென் இயக்கங்கள் அற்புதமாக விளங்கும் . குரலைத்தொட்டு தொடர்ந்து வரும் போங்கோ ஒலியை நன்கு பின்பற்றலாம் கேளுங்கள் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=KhBRvs6-jCc record version

இதே பாடல் குறித்த QFR பதிவும் இணைத்துள்ளேன் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=YS0lxEOnx8o&t=47s QFR 658  

 நன்றி அன்பன் ம வ

 

Tuesday, September 29, 2026

INDIA’S NEW DRONES

INDIA’S NEW DRONES 

இந்தியாவின் புதுவகை டிரோன்கள் [drones ]

போர் நடை முறைகளும் உத்திகளும் வெகுவாக மாறி விட்டன . வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கும் போர் முறைகள் -சினிமாவில் மட்டுமே சாத்தியம். இன்றைய நடை முறை மறைந்திருந்து தாக்கும் 'வாலி வதம்'  போன்ற அணுகுமுறையே. அதையும் தாண்டி எல்லைதாண்டிய போர் என்பதே லாபகரமானது. உயிரிழப்பு இல்லாமல் ஆளில்லலா போர் விமானம்,  ஏவுகணைகள் , ராடாரை ஏய்த்து ஏமாற்றி உள்ளே சென்று தாக்கும் ஏவுகணை மற்றும் டிரோன்கள் .இவை வேட்டை நாய்கள் போன்றன . அதாவது குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் துல்லியமும் கடமை மாறாத செயல் திறனும் கொண்டவை. இலக்கை அழிக்காமல் விடாது என்பதே இவ்வகை கருவிகளின் சிறப்பு. கோடிகளில் கொட்டி விமானம் ஒன்றை வாங்குவதை விட அதே செலவில் ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஏவி பல வித இலக்குகளை தகர்த்தால் சமாளிக்க முடியாது. இவற்றிற்கான எதிர்வினை ஆற்றவல்ல மோப்பம் பிடிக்கும் நாய்கள் போன்ற ராடார்களே. அவற்றை பிரத்யேகமாக வடிவமைத்தல் மட்டுமே தேசபாதுகாப்புக்கு உகந்தது. பிற நாட்டில் வாங்கும்  ராடார்களில் ரகசியத்தன்மை /உதிரி பாக தட்டுப்பாடு போன்ற நடை முறை இடையூறுகளால் 'கையேந்தும் நிலை' நிச்சயம் உருவாகும் . அவற்றை தவிர்ப்பது தன்னிறைவு மட்டுமல்ல தற்காப்புக்கும் அவசியம். இதன் உள்ளார்ந்த திட்ட வடிவே 'மேக் இன் இந்தியா' என்ற உள்நாட்டு அணுகுமுறை. ஒட்டு வங்கி அரசியலும் நோட்டு வாங்கி வாக்களிக்கும் முறைக்கும் ஆதரவு தரும் மக்கள் 'மேக் இன் இந்தியா'   .  திட்டத்தை கிண்டல் செய்து பெரும் அறிவாளிகள் போல் புலம்பித் திரிந்தனர். பல நிறுவனங்கள் இதில் சேர்ந்து தத்தம் பங்களிப்பை 'தரம் குன்றாமல் செய்ய' இந்திய தொழில் வளர்ச்சி ஆயுத தளவாட மேம்பாடு, உற்பத்தி, ஏற்றுமதி என அசுரர் வேகம் பெற்று உலகே மிரளும் நிலை தோன்றியுள்ளது. அப்படி ஒரு உருவாக்கம் தான் மலிவு விலை தொலைதூர தாக்கும் திறன் கொண்ட டிரோன்நொய்டா வில் ஒரு நிறுவனம் சென்ற 20 ம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்து நமது எதிரிகளை கதி கலங்க வைத்துள்ளது .

இந்த ட்ரொன் ஒரு கார் மீதிருந்து ஏவப்படும் அளவிற்கு எளிய ஆனால் துல்லிய செயல்பாடு கொண்டது. மற்றுமோர் நிறுவன, 'நியூ ஸ்பேஸ் ' - தயாரிக்கும் ட்ரொன் களும் முழுத்திறன் கொண்டவை. இப்படி ஸ்டார்ட்  அப்  அமைப்புகள் மேலும் பங்கு கொள்ள எதிரிகளை அழித்தொழிப்பது எளிதில் ஈடேறும். இது குறித்த பல்வேறு தகவல்களை மேஜர் திரு மதன் குமார் வழங்கியுள்ளார். வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=sPGAQSg1JoE MAJ MADHAN KUMAR

நன்றி

அன்பன் ம வ

Who is he ?

  Who is   he ? யார் இவர் ? எலன் மஸ்க் என்ற பெயர் உலக அரங்கில் பிரபலம் . பிறப்பால் தென்னாப்ரிக்கர் , பின்னர் கனடா நாட்டு க...