Saturday, May 31, 2025

Teacher Orientation [Teacher Ethics]- 5

 Teacher Orientation [Teacher Ethics]- 5

Class-room efficacy:

Efficacy is based on how well students perceive what the teacher says. More or less it is how easily the teacher reaches the student minds without the latter striving to grasp. Reaching the audience has to occur as a routine.  Little or no effort of students [in gathering the message] is the yardstick for efficacy. i.e., gap reduction at its best in T/L. Besides the voice and vocabulary suggested earlier, eye-contact helps to establish better control over the situation while interacting. Errant inclinations stay relegated in student minds and a readiness to listen comes about. When the two [T/L] have a meeting ground, it is the best ambience to discuss ideas. Dispassionate reviews of subject help students to learn better by interaction while the fear of learning gets wiped out.   

Sympathy in teaching:

It is extremely important that teachers are sympathetic while teaching. It can be developed by considering the learner difficulties for comprehension. The right approach to this end comes by the teacher placing self in the slot of recipient and trying to see if the approach convinces self. Unbiased reading would reveal lacunae to be sealed. Review of our own formulations for teaching would show gaps and the need to consolidate all ideas. Only by firmly recognizing the learner hurdles, teachers can teach with sympathy. But, sympathy has no place in evaluation. Sympathetic evaluation generates pathetic students. This is the reason for tall scorers proving hollow in ‘real test’ situations. Sympathy must confine itself to the realm of shalping  comprehensive learning. Comprehension can take care of competitions. 

Avoidance of bias:

Teachers must scrupulously avoid any ‘label’ of bias. These can be to gender, region, religion, language, community, creed and so on. Once some label manages to stick to a teacher [s]he loses the image of neutrality; thereafter students tend to view the individual with suspicion. Suspicion is a very strong disincentive for students to respect the utility of the teacher. Teachers of unconvincing image suffer ‘non-acceptance’ even if talented. Therefore, bias /partisan attitudes must be eliminated from daily functions of teachers.        

Why all these tips?

Teachers should recognize that everyone is evaluated irrespective of our claims of experience and ability. The entire game is that of the individual however big the Department or College may be. So, every individual faces the audience and ordeal individually. There is no collective evaluation or collective judgments. Good or bad is our own; none else can help our image. Any attempt to tarnish images by others would decimate in no time provided we are deeply anchored to the cause of utility to students. Purposeful teaching must equip the learner for analytic approaches. Analysis is an essential outfit of mental equipment for trouble shooting. 

When our attempts are honest, if our approaches stay clean, time will elevate us to the pinnacle of glory. Only determination and unflinching dedication matter the most

                                       **************************.

Friday, May 30, 2025

MEMORY AND LEARNING

 MEMORY AND LEARNING

There is a misconception among some of us that learning and memory are more or less the same. The two [m/l] are related but, are different domains; memory relates to ‘remembering’ while learning pertains to ‘clear grasp of a concept/ idea /event /process to the extent of what we learned. For instance certain names like ‘ammunition’ or war are more remembered than are understood.  However, to understand something, one has to proceed step by step and in right sequence; but memory does not have any rigid sequence.

Does it mean that memory is something of ready ‘acceptance’?  It is not that simple.  To remember a thing [retaining in memory] two things are essential. 1 In the first instance, the item must be carefully received along with its basic meaning.

Without knowing a meaning, the term relating to it can turn volatile in time [minute/ hour/ day or at best after days]. 2 The item /term learnt stays in memory if the item is in a way related to something. This is termed ‘associational memory’. The two things so related help to recall each other as mutual reminders. For instance, by listening to a movie song our mind travels down the ‘memory lane’ and seeks to recall the then circle of friends or the locale where we got the first glimpse of the song or the scene.   It is a clear case of one leading to the other.

But, the most significant component of associational memory is-- items of pleasant company or of no serious rigidity like facing an examination are retained far better than are certain ‘compulsive’ needs. The volatile feature of ‘examination requirements’      is merely based on the low inclination with which the learner receives the item in the first instance. [Item number 1 given above].

Our memory of jokes/comic pieces seems quite stable because there is no pressure to hold them in place. That is why I generally prescribe to learners not to tax the memory by forcibly memorizing things; instead understand a thing and it will be yours. So, memory based on understanding is more viable than a learning based on memory. This subtlety is the key determinant of genuine success a comprehension-based output   as against that of ephemeral success [score-centric results]. So, comprehension should precede memory and not vice-versa.

 

Thursday, May 29, 2025

PEER RAGGING

PEER RAGGING

நட்புகளின் கிண்டல்

இந்த சொல் சரிதானா என தெரியவில்லை ஆனால் இதன் பொருள் சொல்லாமலே புரியும் எனவே peer ragging என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வளம் இது என நம்புகிறேன். ஆம், தமிழ் சினிமாவில் குறிப்பாக 50களுக்குப்பின்  கூட்டமாக சேர்ந்து கொண்டு ஒருவனையோ ஒருத்தியையோ ஏளனம் செய்வது அல்லது இரு பிரிவாக ஆண் -பெண் கூட்டம் எதிர் அணியை வம்பிழுப்பது கேலி பேசுவது போன்ற காட்சிகள் இருந்தன. அவற்றில் வாதங்கள் எதிர்வாதங்கள் மிகவும் வீரியமாக ஆனால் நாசூக்காக [பண்பு விலகாமல்] இருக்கும் . அவற்றில் கவிஞனின் கற்பனை மேலோங்கும் எனவே அதற்கு இணையான இசையும் தேவைப்படும். அப்படி பல சூழல்களில் அமைந்த பாடல்கள்  மேற்கண்ட தலைப்பில் இடம் பெரும் [வியாழன் பகுதியாக] இடம் பெறும்  

மயங்குகிறாள் ஒரு மாது [பாச மலர் 1961], கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பி சுசீலா

காட்சி:  அண்ணனை மணந்த நங்கையை teasing என்ற நையாண்டி முறையில் கேலிபேசும் நாத்தனார். அந்தப்பெண்ணின் முதலிரவை   சாக்காக க்கொண்டு அமைந்த யாப்பு. 'மயங்குகிறாள் ஒரு மாது என துவங்கி அவள் தடுமாறுவதாக " தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது " என்று முதலிரவு தாக்கம் குறித்து பேசுகிறாள் உணர்வுகளை அடக்கிக்கொள்வதை " காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்" அதற்கு பீடிகையாக 'தோழியர் கதை சொல்லித்தரவில்லையா , துணிவில்லையா, பயம் விட வில்லையா,நாழிகை செல்வதும் நினைவில்லையா? என்று  கேள்விமேல் கேள்வி கேட்டு   திணறடிக்கிறாள் -நாத்தி.

அது மட்டுமா பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் சாவித்ரி காட்டியுள்ள முகபாவம் -நடிப்பிலக்கண தொகுப்பு என்றால் மிகை அல்ல. பாருங்கள் ஒவ்வொரு நொடியிலும் வாய்ப்பினை தவற விடாமல் திறமையை பதிவிட்டுள்ளார் நடிகையர் திலகம் -எப்பேர் பட்ட கலைஞர்களை கொண்டிருந்தோம் -மனம் சற்று தளர்ந்துதான் போகிறது.

காட்சியில்,  புதுமணப்பெண்ணாக எம் என் ராஜம், கணவனாக சிவாஜி கணேசன். பாடலின் அமைப்பும் இயக்கமும் வெகு சுறுசுறுப்பு ; சிதார் துணை யில்  பாடல் பயணிக்கிறது. அந்த அறையில் இருந்த தங்கையின் போட்டோவை சிவாஜி கணேசன் சுவற்றுப்பக்கம் திருப்பி வைப்பார் .

அதனை குறிப்பிட்ட கவிஞர் திரு வைரமுத்து “நண்பர்களே சிங்கம் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? இந்தப்பாடலில் பாருங்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் . பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=mayangugiraal+oru+maadhu+video+song+download&newwindow=1&sca_esv=3f7494e869ebe89e&sxsrf=AHTn8zqjeMI9SegWJaC5TOu6kcD3desA8g%3A1747910388196&ei=9P4uaKrYC_WU4-EP8ZeSgQ0&oq=MAYANGUGIRAAL+ORU+MAADHU+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJE1BWUFOR1VHSVJBQUwgT1JVIE1BQURIVSBWSURFTyBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKA

AVAL MELLA SIRITHTHAAL

அவள் மெல்ல சிரித்தாள் [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

இது வேறு வகையான கிண்டல்.  ஒரு தோழி கோஷ்டி சேர்த்துக்கொண்டு இன்னொரு மணப்பெண் நிலையில் இருக்கும் பெண்ணை சீண்டி வம்பிழுக்கிறாள். கவியரசருக்கு, இது போன்ற களங்கள் மிகுந்த ஊக்கம் தருவன. மனிதர் விளையாடி இருக்கிறார்.

ராதை என்றும் கண்ணன் என்றும் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி அவர்களின் ஊடல் பாடல் உரசல்களை அரசல் புரசலாக  கவிதையாக்கி பொழிந்துள்ளார். எளிமையான சொற்கள் ஆனால் வலிமையான உணர்வுகள் என்று பாடல் படகு போல் மிதக்கிறது. சொற்கள் அப்படி ;           

எம் எஸ் வி கண்ணன் பாடல் என்றதும் குழலை முதன்மைப்படுத்தி இசையை பின்னியுள்ளார். துவக்கத்திலேயே குழல் ஒலிக்கிறது ஆனால் இடை இசை பகுதிகள் இரண்டிலும் நெடிது நீண்ட விரைவான மற்றும் விரிவான குழல் வாசிப்பு [கலைஞர் நஞ்சப்ப ரெட்டியார்]. எத்துணை முறை கேட்டாலும் சுவையும் இனிமையும் குன்றாத வளமான பாடல். கேட்டு மகிழ இணைப்பு 

https://www.google.com/search?q=aval+mella+siriththaal+video+song+download&newwindow=1&sca_esv=3f7494e869ebe89e&sxsrf=AHTn8zqmtJWZ_Qh7QQQqFLFIfP5BSVh96w%3A1747910955235&ei=KwEvaNrfDaCvseMP4ITSyAw&oq=AVAL+MELLA+SIRITHTHAAL+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIkFWQUwgTUVMTEEgU0lSSVRIVEhBQUwgVklERU8gU09ORyAqAggAMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKSI-WAlAAWLf_AXA  

பாட்டொன்று தருவார் [சர்வர் சுந்தரம் -1965 ] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,பி சுசீலா  குழுவினர்

ஒரு மணப்பெண் நிலையில் இருப்பவளை தோழியர் கூடி கேலிபேசி கும்மாளமிடும் பாடல் . தோழியர் குழாம் அதிகம் என்பதால் பெண் குரல்கள் அதிகம். அதிலும் விறுவிறுப்பு குன்றாமல் பாடலை செலுத்த பியானோ பயன்படுத்தப்பட்டுள்ளது மாண்டலி ன் , ட்ரம் , போங்கோ பின்னிப்பின்னி சுழன்ற பாடல் , கிறக்கம் தரும்        

கூ ட்டிசை மற்றும் சீரான தாள நடை அனைத்தும் கிண்டலும் கும்மாளமும் துள்ளிய துல்லிய இசை அமைப்பு கேட்டு மகிழ இணைப்பு

PATTONRU THARUVAAR  Y T SRINIVASAN BALAKUMAR*

·         Use this link

https://www.google.com/search?q=PAATTONRU+THARUVAR+l+video+song+download&newwindow=1&sca_esv=3f7494e869ebe89e&sxsrf=AHTn8zrUWtgT3E9TE21SaivCaPtO75R7sQ%3A1747911298221&ei=ggIvaNqqDaHG4-EP7PX5uAk&ved=0ahUKEwja852A9baNAxUh4zgGHex6HpcQ4dUDCBA&oq=PAATTONRU+THARUVAR+l+video+song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKFBBQVRUT05SVSBUSEFSVVZBUiBsIHZpZGVvIHNvbmcgZG93bmxvYWQyCBAAGIAEGKIEMggQABiABBiiBDIFEAAY7wUyCBAAGKIEGIkFMgUQABjvBUi9VVAAWNFBcAB4AZABAJgBhQKgAcccqgEGMC4xNC42uAEMyAEA-AEBmAIRoAKhGcICBhAAGAgYHsICChAAGIAEGMcFGA3CAgYQABgNGB7CAggQABgKGA0YHsICCBAAGAgYDRgewgIIEAAYBRgNGB7CAgoQABgFGAoYDRgewgIKECEYoAEYwwQYCpgDAJIHBjAuMTIuNaAHtk6yBwYwLjEyLjW4B6EZwgcIMC4yLjEyLjPIB14&sclient=gws-wiz-serp#fpstate=ive&vld=cid:58e07eef,vid:ij4iUDiSO-g,st:0

தூது செல்ல ஒரு தோழி [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ,                                 பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி          

ஒளிந்து மறைந்து, காதலனின் கடிதத்தை படித்துக்கொண்டிருந்தவள் தோழியிடம் சிக்கிவிட, பிறகென்ன பாடலும் கிண்டலும் பறந்து சுழல காட்சி அமைந்துள்ளது. துடிப்பான பாடலுக்கு நுணுக்கமான மாண்டலின் வாசிப்பு, கூடவே மென்மையான ட்ரம் தாளம் . பாடலில் இலக்கிய சொற்கள் அதிகம், இடையணி , மேகலை , கோவலன் காவிரிக்கரை என்றெல்லாம் வர்ணனைகள் ; பாடலின் டெம்போ என்னும் முறுக்கினை ஏற்படுத்திய சரோட் எழுப்பும் மூட் ஏற்றும் ஒலி இரண்டு இடை இசை பகுதிகளில் அமைய பாடல் தனி அமைப்பில். போட்டிபோட்டு சுசீலாவும் ஈஸ்வரியும் களமாடிய பாடல் இது.

கேட்டு மகிழ இணைப்பு இதோ

THOODU SELLA [PACHAI VILAKKU -1964] KD V R PS LRE

https://www.youtube.com/watch?v=ZZYBeXYSXAA ADI PODI  THAAMARAI NENJAM KD MSV PS LRE

தொடரும்      அன்பன் ராமன்

Tuesday, May 27, 2025

DIRECTOR: SRIDHAR

 DIRECTOR:  SRIDHAR

இயக்குனர் ஸ்ரீதர்                                                             

                                         ஒரு விளக்கம்

 

இயக்குனர் ஸ்ரீதர் குறித்த தொடர் அமைப்பின் முதல் பகுதி [ஸ்ரீதர்-1] வெளியிடாமலே அதன் அடுத்த பகுதியை [ஸ்ரீதர்-2] தவறுதலாக சென்ற வாரம் வெளியிட்டு விட்டேன் .

ஒரு வாசகர் ஐயோ எனக்கு ஸ்ரீதர் -1 வரவில்லை ஆனால் ஸ்ரீதர்-2 வந்திருக்கிறது கவனிக்காமல் டெலீட் [delete ] செய்து விட்டேன் போலிருக்கிறது தயவு செய்து ஸ்ரீதர்-1 அனுப்பமுடியுமா என்று கேட்டார். இதோ அனுப்புகிறேன் என்று உத்திரவாதம் சொல்லிவிட்டு பக்கத்து வாட்ஸப் இல் இருந்து அனுப்பிவிட்டால் போயிற்று என்று பிற வாட்ஸப் களில் தேட --அப்போது தான் தெரிந்தது ஸ்ரீதர்-1 வெளியிடும் முன்னரே ஸ்ரீதர்-2 வெளியிட்டாயிற்று. எனவே, இப்போது ஸ்ரீதர்-1 இன்றைய பதிப்பாக வெளியாகிறது. வேறு நண்பர்கள் எவரும் இப்போது வரை, ஸ்ரீதர்-1 எங்கே என்று கேட்கவே இல்லை. சூப்பர் வாசகர்கள் -நீ அனுப்பினால் என்ன? அனுப்பாவிட்டால் என்ன? , கைக்கு வந்ததை படிப்போம்,  எனவே ஸ்ரீதர் -15 அனுப்பினாலும் [படித்தாலும்] படிப்போம் . அல்லது வழக்கம் போல் "படிக்க மாட்டம்' என்று இருந்துவிடுவோம் .

மகராஜபுரம் சந்தானம் குரல் ஒலிக்கிறது 'என்ன தவம் செய்தனை? '  என்று

                                                  இயக்குனர் ஸ்ரீதர் 

 ஸ்ரீதர் -1                      

சித்தாமூர் விஜயராகவலு ஸ்ரீதர் கிருஷ்ணன் என்ற சி வி ஸ்ரீதர், அநேக பொது களங்களிலும்,  ஸ்ரீதர் என்றே         அறியப்பட்டவர்

ஸ்ரீதர் குறித்து பேசவோ எழுதவோ தொடங்கினால் என்னால் நிறுத்த இயலாது; அவரைப்புரிந்துகொண்டால் தமிழ் சினிமாவின் போக்கை வெகுவாக மாற்றியவர்.என்பது  முதலில் புரியும். வெளிப்புறத்திற்கு காமெராவைத்தூக்கிக்கொண்டு போனவரே இவர் தான் அவர் தான் என்று பேசும் பலருக்கும் நான் சொல்வது காமராவை தூக்கிக்கொண்டு இந்தியத்திருநாட்டின் விளிம்பிற்கு [காஷ்மீர்] 1960 லேயே வெளிப்புறப்படப்பிடிப்பு செய்தவர் ஸ்ரீதர். திரைப்பட குழுவினர் அனைவரையும் அவரது மனைவி மக்களுடன் அழைத்துச்சென்று முகாமிட்டு உருவானதே "தேன் நிலவு" .ஸ்ரீதர் சொன்னது           " இல்லையென்றால் நிம்மதியாக படப்பிடிப்பு நடத்த இயலாது 10 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு போக வேண்டும் என்ற கோரிக்கை அன்றாடம் கிளம்பும். அதை தவிர்க்கவே இந்த முயற்சி..  

தமிழ் சினிமாவில் புதுமை என்று பிற்கால மாந்தர் அடையாளம் காட்டும் எதையும் அந்நாளிலே செய்து விட்டவர் ஸ்ரீதர். காமெராவை பேசவைத்து காட்சியை விளக்குவதில் கை தேர்ந்தவ.ர் அவரின் அசாதாரண பரிமாணங்களை என்னால் வெகுவிரிவாக அலசி விளக்க முடியும்

ஆனால் நம்ம வாசகர்கள் நீ விளக்கிக்கொண்டிரு என்று அமைதியாக விலகிச்சென்று விடுவார்கள். சரி இதை ஆர்வ இன்டெக்ஸ் [CURIOSITY INDEX] என்று நான் உணருகிறேன்.     . உங்கள் ஆர்வ இண்டெக்ஸ் எதுவாயினும , எனது முயற்சி தொடரும். மற்றுமோர் ஸ்ரீதர் முத்திரை பாடல் காட்சிகளை அமைப்பதிலும் அவற்றில் நல்ல பாடல்களை அரங்கேற்றுவதும் அவற்றை காமெராவின் வாயிலாக  திரையில் கொண்டுவருவதும். அவ்வகையில் நல்ல ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்தி தனி முத்திரை பதித்தவர் . 

 அவருக்கு முதல் படம்   கல்யாண பரிசு  . எம் ராஜா வை இசை அமைப்பாளராக உயர்த்தினார்.

துள்ளாத மனமும் துள்ளும்[ஜிக்கி பாடிய பட்டுக்கோட்டையாரின் பாடல்]. காட்சி அமைப்பின் தேர்ந்த தன்மையை அப்போதே [1959] காமெரா பேசியுள்ளதை                             [ வின்சென்ட்] யோசியுங்கள். காட்சிக்கு இணைப்பு .         

THULLAADHA MANAMUM [KALYAANA PARISU 1959] P K AMR JIKKI

https://www.google.com/search?q=kalyana+parisu+movie+thullatha+manamum+song+video+download&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zoSucUiKkmU-

துயிலாத பெண் ஒன்று [மீண்ட சொர்கம் 1960]  எம் ராஜா சுசீலா குரல்களில் சல பதி ராவ் இசையில் எழுந்த வெகு ரம்மியமான பாடல் . நிதானமான ராக அமைப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் குரல் அனுசரணைகள் இசையின் மென் நடனம் என்று நல்ல கட்டமைப்பு கொண்ட பாடல். இவ்வனைத்தையும்  சுவை குன்றாமல் ஒளிப்பதிவு செய்த வின்சென்ட்-சுந்தரம் என்று உழைப்பின் பெருமையை உணர்த்தும் காட்சி. ரசிக்க இணைப்பு இதோ  

THUYILAADHA-- MEENDA SORGAM [1960] KD CHALAPATHI RAO AMR PS

https://www.google.com/search?q=thuyilaadha+pen+ondru+kanden+meenda+sorgam+video+song&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zpNIFmDtTIVeJBG5K7tk9chw4r8Og%3A1747382896962&ei=cPImaIa9OqCIjuMPk7a5- li

பண்ணோடு பிறந்தது [ விடிவெள்ளி 1960] எம் ராஜா இசையில் பிபி ஸ்ரீனிவாஸ் -ஜிக்கி குரல்களில்

வெகுநேர்த்தியான தாலாட்டு போன்ற பாடல். இது போன்ற பாடல்களை கேட்கவே கூடாது. கேட்டால் எவ்வளவு தொலைத்து விட்டு  ஓட்டாண்டிகளாய்  திரிகிறோம் என்ற துக்கம் கவ்விக்கொள்ளும். கேட்டால் இசை என்பார்கள். சரி நல்ல மேன்மைக்கு இணைப்பு இதோ 

PANNODU [VIDI VELLI 1961]  KD,  AMR – PBS- JIKKI

https://www.google.com/search?q=vidivelli+movie+pannodu+pirandhadhu+song+video&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zor63P5dxhIl9uNxdvadOFWXZVYqg%3A1747383930122&ei=evYmaOOdB5yK4-EPyq-K2AY&oq=vidivelli+movie&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiD3ZpZGl2ZWxsaSBtb3ZpZSoCCAAyBxAjGLADGCcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGLADGNYEGEcyChAAGL

சொன்னது நீதானா [நெஞ்சில் ஓர் ஆலயம் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா 

கேள்விக்கணைகளை வைத்து பாடலை ஆக்க முடியுமா? முடியும் என்று சவால் விடும் பாடல்.. புண் பட்ட மனத்தின் தவிப்பையும் அதிர்வையும் விளக்குவது எளிதா எனில் --ஏன் இல்லை இயலும் என்று களமாடிய சிதாரும் தபலாவும் . சரி பாவம் வெளிப்பட வேண்டுமே ? பிழிந்துபிழிந்து பொழிந்தாரே சுசீலா . இனி ஒரு ஆக்கம் இது போல் தென்படுமா ? இறைவனுக்கே வெளிச்சம். இறைவன் கூட முயல்வாரா என்பது ஐயப்பாட்டிற்குரியதே -ஏனெனில் இதுநிகர்த்த ஆக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை. பாடலை அதன் உணர்வை சிதார் மீட்டல் அறிவித்தாலும் , பெண் குரல் சோகங்களை அபுபடியே வெளிப்படுத்திய தபாலாவின் வெகு நேர்த்தியான களமாடல். ஒவ்வொரு சொல்லுக்கும் கூடவே தபலா பயணிப்பதை கேட்டு தான் உணர இயலும். எனவே பாடலை ஆழ்ந்து அமிழ்ந்து புலன்களை ஒருபுள்ளியில் நிறுத்திக்கேளுங்கள். அதான் எனக்கு தெரியுமே என்று கடந்து போனதால் தான் எதை கொடுத்தாலும் கேட்பார்கள் என்று பாடல் என்ற பெயரில் அவலங்களின் அரங்கேற்றம் அமோகமாக நடைபெறக்காண்கிறோம் . இவை ஒரு புறம் இருக்க       10 x 8 அறையில் கமெராவின் பயணம் காட்சிக்கு உயிரூட்டியுள்ளதை கவனியுங்கள். இவ்வனைத்தும் 1962 இல் கருய்ப்பு வெள்ளையில். டெக்னாலஜி   வந்து விட்டது தொழில் திறமை எனும் மனித வளம் துவண்டுவிட்டது. பாடலுக்கு இணைப்பு இதோ      

SONNADHU NEETHAANAA [NENJIL OR ALAYAM 1962] KD  VR PS

https://www.google.com/search?q=nenjil+or+aalayam+movie+sonnadhu+nee+thaanaa+video+song+download&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zrXMjxbyvCZxt6bwunkMK6cBPihJg%3A1747384507453&ei=u_gmaKq4G7-a4-EP08-fsAw&oq=nenjil+or+aalayam+movie+SONNADHU+NEE+THAANAA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOG5lbmppbCBvciBhYWxheWFtIG1vdmllIFNPTk5BREhVIE5FRSBUSEFBTkFBIFZJREVPIFNPTkcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkjXiwFQhQd

பொறந்தாலும் ஆம்பிளையா [போலீஸ்காரன் மகள் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , ஜே பி சந்திரபாபு , எல் ஆர் ஈஸ்வரி

ஒரு நகைச்சுவைப்பாடல் , எல் ஆர் ஈஸ்வரியின் குரல் மனோரமாவுக்கு நல்ல  பொருத்தம் .பாடலின் உட்கரு 'பிரசவ வைராக்கியம் /மயான வைராக்கியம்' போன்ற விளக்கம் கேட்டு மகிழ இணைப்பு இதோ

 PORANDHALUM [POLICEKARAN MAGAL 1963 KD  VR JPC LRE

https://www.google.com/search?q=police+karan+magal+movie+PORANDHAALUM+AAMBILAIYAA+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=6675700340da7af0&sxsrf=AHTn8zq9QtnzYNXSwrxZgQJM_ZCAap3sMw%3A1747385221051&ei=hfsmaKHwAo2p4-EPvbHNuAE&ved=0ahUKEwjhxoubzaeNAxWN1DgGHb1YExcQ4dUDCBA&oq=police+karan+magal+movie+PORANDHAALUM+AAMBILAIYAA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiPXBvbGljZSBrYXJhbiBtYWdhbCBtb3ZpZSBQT1JBTkRIQUFMVU0gQUFNQklMQ  

வளரும்

நன்றி

அன்பன் ராமன்

KAVERI ENGINE

  KAVERI    ENGINE காவேரி   எஞ்சின்          நம்மில்   பலருக்கும்   தோன்றாத   ஒரு   கேள்வி ,  தொழில்   நுட்பம் /  பொறியியல்   வளர்ச்சி   கண்...