Monday, June 30, 2025

LET US PERCEIVE THE SONG -29

 LET US PERCEIVE THE SONG -29           

பாடலை உணர்வோம் -29

இது போன்றே ஒரு டூயட் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன? பாடலை சொல்வதா? காட்சியை சொல்வதா? ஒளிப்பதிவாளரின் துணிச்சலை பாராட்டுவதா ? இசை அமைப்பில் உள்ள நளினத்தைப்பேசுவதா , கவிஞனும் இசையமைப்பாளரும் கருத்தொன்றி செயல் பட்டதை பாராட்டுவதா. நிச்சயம் ஆழ்ந்த செயல் திறனுக்கான களம் இப்பாடல்

காற்று வந்தால் தலை சாயும் [காத்திருந்த கண்கள் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா

இதில் அமைந்துள்ள நளினம் யாதெனில் ஒருவர் பாடிய கருத்தின் பொருளை அடுத்தவர் நிறைவு செய்யும் உத்தி . இது முற்றிலும் கவிஞரின் கருத்தோ /இசையமைப்பாளரின் கருத்தோ என சொல்லஇயலாது. ஆனால் இது இருவரின் ஏகோபித்த அணுகுமுறை என்பது புலனாகிறது. இதே பாணியில் அமைந்த உத்தி ஏற்கனவே கற்பகம் படத்தில் [1963] வாலி எழுதிய 1000 இரவுகள் பாடலில் அமைந்துள்ளது அனால் இது [காத்திருந்த கண்கள் ]- .  ஒரு பூரண டூயட் வகையில் அமைந்த பாடல் . இப்பாடலின் தனித்துவம் ஆண் பாடிய வரியை பெண் முடிப்பதும், பெண் பாடும் வரியை ஆண்  முடிப்பதும் என பயணிக்கும் அன்றைய புதுமை. எனினும் சொல் அமைப்பில் வெகு நேர்த்தியான கவிதை என்றே சொல்லலாம்

காற்று வந்தால் தலைசாயும்                   என்றதும்  நாயகி  நாணல்

காதல் வந்தால் தலை சாயும்                                                        நாணம்

ஆடை தொட்டு விளையாடும்                                           தென்றல்

ஆசை தொட்டு விளையாடும்                                          கண்கள்

ஒருவராகப்படிப்பது தான்                                              வேதம்

இருவராகப்படிக்கச்சொல்லும்                                    காதல்   என்று கேள்வி ஓரிடம் பதில் வேறிடம் என பயணிக்கும் பாடல் .

மனம் ஒன்றிப்பார்க்கும் எவராலும் பாடலின் நளினத்தை ரசிக்காமல் கடந்து செல்ல இயலாது.

இந்தப்பாடல் துவங்கும் அமைப்பே முற்றிலும் வேறானது. மட்டுமல்ல அதன் பயண ப்பாதையும் கூட  வேறெங்கும் காண கிடைக்காதது.முற்றிலும் பியானோவின் நோட் களிலேயே பாடல் அமைந்து பார்த்ததுண்டா? பியானோவின் இசைக்கூறுகள் பாடலில் வந்துள்ளன. அனால் இந்தப்பாடலின் பயணமே பியானோ வின் பாதை யாகவே  உள்ளது . எனவே பாடலின் பெரும் பகுதியின் ரிதம் மற்றும் தாள நடை பியானோ, எலெக்ட்ரிக் கிட்டார் மெல்லிய ட்ரம்  ஆதரவிலேயே நகர்வதைக்காணலாம். கிட்டத்தட்ட முக்கால் பகுதி கடந்த பின் பின்னா ல் வரும் சரணத்தில் அன்னம் --கன்னம் பகுதிக்குப்பின் மீதமிருக்கும் பகுதியில்  தபலா ஒலிக்க மெல்ல பாடல் நிறைவு பெறுகிறது. ஆனால் தபலா நுழைவது கூட தெரியாமல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை. எந்த க் காலத்தில் எம் எஸ் வி அவர்கள் தமிழ் சினிமாவில் பியானோ வகையில் பாடலை அமைத்துள்ளார் 61 ஆண்டுகளுக்கு முன்னம். -பிரமிப்பு மேலிடுகிறது

அது ஒரு புறம் இருக்க ஓடியாடி டூயட் பாடும் ஜெமினி சாவித்திரி இருவரின் குதூகலம் பார்ப்பவரையும்  பற்றிக்

கொள்ளும் வகையில் உள்ளது. எவ்வளவு உவகையும் ,       முறுவ லும் காட்டிய முகங்கள். ஓரிடத்தில், ஒருவர் பின் ஒருவராக நானும் ---நானும் என்று சொல்வது கூட வெகு இயல்பாகவே அமைத்துள்ளது.

ஒரே பனிமூட்டத்தில்  காமெராவை திறக்கவே அஞ்சும் காலத்தில் பனியினூடே சாவித்திரியும் ஜெமினியும் சீரான நளினத்தில் ஓடிவர படமாக்கியுள்ளார் கமல் கோஷ் [வின்சென்டின் ஆசான்] பாராட்டுக்குரியவர். இப்படிப்பல பெருமைகள் நிறைந்த பாடல். ஒட்டுமொத்தமாக ஒரு நிறைவான காதல் பாடல் 60 ஆண்டுகளுக்கு முன்னர். . கேட்டு ரசிக்க இணைப்பு 

 

KATHIRUNDHA KANGAL 1962 KD , V R , PBS, PS  KAMALGHOSH, T PRAKASH RAO

https://www.facebook.com/watch/?v=283360089440018

சுபஸ்ரீ குழுவினரின் விளக்கம்/ இசை கேட்டு மகிழ இணைப்பு இதோ

QFR 663

https://www.google.com/search?q=qfr+song+katru+vandhal+thalai+sayum&oq=qfr+song+katru+vandhal+thalai+sayum+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKAB0gEJNDE5NjdqMGo0qAIAsAIA&sourceid=chrome&ie=UTF-8

நன்றி                                                 

                            NEXT POSTING MAY BE DELAYED  BY 1 0R 2 DAYS.

அன்பன் ராமன் 

LET US PERCEIVE THE SONG -29

  LET US PERCEIVE THE SONG -29            பாடலை உணர்வோம் -29 இது போன்றே ஒரு டூயட் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன ? பாடலை சொல்வ...