Monday, January 5, 2026

RENGA VENDAAM-10

 RENGA VENDAAM-10 

ரெங்காவேண்டாம்-10                                   

அம்மணீ---தாயீ காலை 7 மணிக்கு வாசலில் கிளிஜோதிடன்- ரெங்கராஜு

சந்தானத்தின் தந்தை ரெங்கசாமி. “வந்துட்டான் போது விடிஞ்சு இன்னும் காபியே ஆனபாடில்ல , இவனுங்களுக்கு மூக்கு எப்படித்தான் இப்படி வேர்க்குமோ, எங்க காபி தேறும் னு அலையராங்க என்றான்..

வாசலில் கிளி   ரெங்கராஜு 'மூக்கு மட்டும்  வேர்க்கல முழு உடம்பும் வேர்க் குது , வெளிய வாங்க தாயீ' என்று தொடர்ந்து ஓங்கி ஒலித்தான். வெளியே வந்து எட்டிப்பார்த்தாள் மைதிலி [சந்தானத்தின் தாய்] கிளிஜோதிடனைக்கண்டதும் மைதிலிக்கு நடுக்கம்.  ஏதாவது விபரீதமா குறிசொல்லிடுவாரோ -ஒண்ணுமே புரியலையே, இந்த மனுஷன் [புருஷன்]  தொடர்ந்து ஜோசியனை அவமரியாதையாகவே பேசறார். ஏதாவது அபவாதம் வந்துடப்போறது -ஐயோ என்ன பண்ணுவேன் என்று நடுங்கியபடியே ஜோதிடன் ரெங்கராஜூவை "சௌக்கியமா இருக்கேளா ? "என்றாள்

எனக்கென்ன தாயீ குறை -பகவதி பாடியளக்குறா நான் குறி சொல்றேன் ,வண்டி ஓடுது , சரிங்க பெரியம்மா , தம்பி [சந்தானம் அய்யா ] எல்லாம் நல்லாயிருக்காங்களா என்று கும்பிட்டபடி கேட்டான். பெரியம்மா குளிக்கிறாங்க, அவன் மாடியில படிக்கிறான் இந்த வருஷம் 10ம் க்ளாஸ் என்றாள்  மைதிலி  . தெரியும் தாயீ பகவதி அப்பப்ப சொல்லுது, நம்ப தம்பிதான் இப்ப பஸ்ட் மார்க் எடுக்குதாம் , இந்த வருஷத்து ராங்க் கே  [RANK ] நம்ம சந்தானம் அய்யாவுக்குத்தான் னு பகவதி அடிச்சு சொல்லுது தாயீ என்று கை கூப்பி தலை குனிந்து பகவதி உச்சாடனம் செய்தான். மைதிலிக்கு பேச்சே வரவில்லை கண்களில் பொலபொலவென்று கண்ணீர் மூடவோ துடைக்கவோ முடியாமல் கிழக்குநோக்கி திரும்பி மனதிற்குள் "ஈஸ்வரா இது என்ன நிஜமா? ஜோதிடன் ஏதேதோ சொல்கிறானே இது நடக்குமா. [உள்மனம் கேட்டது ஏய் மைதிலி "அவன் சொன்னது எது நடக்கவில்லை? உன் பையன் இப்போது ரொம்ப நன்றாகப்படிக்கிறான் னு வாத்யார் ரெங்கபாஷ்யம் சொன்னாரே மறந்து விட்டாயா?] அவளது முகத்தைப்பாராமலே ரெங்கராஜு பேசினான்   "நான் சொல்ற ஒவ்வொரு சொல்லும் பகவதி சொல் அம்மா.நீங்க என்னை [அதாவது பகவதியை ] நம்பித்தான் ஆவணும்..

ஆமாம் இவர் பெரிய அதிகாரி இவர் பேச்ச நம்பித்தான் ஆகணுமோ என்று துச்சமாகப்பேச ஆரம்பித்தான் ரெங்கசாமி..

ரெங்கா வேண்டாம்என்று உக்கிரமாக சிவந்த கண் கொண்டு ரெங்க ராஜு   வெறித்தனமாக பார்க்க ரெங்கசாமி உள்ளூர அரண்டு போனான். இந்த சலசலப்பில் தலையில் கோடாலி முடிச்சுடன் கோமதி வர பின்னால வந்தது நெடிது வளர்ந்த சந்தானம். ரெங்கராஜு பேசினான். சாமி கவனமா படியுங்க எதிர்காலம் ரொம்பவே ஜெகஜோதியா இருக்கும்னு பகவதியும் சொல்லுது,   பெரிய அய்யாவும் சொல்லுறாரு [சந்தானம் விழிக்க, உங்க தாத்தா தான் சொல்லுறாரு]

 அப்படியே கோமதி பக்கம் திரும்பி “ தாயீ உத்தரவு வந்திருக்குது. இன்னும் 20 நாளுக்குள்ள   ஒரு நாள் நீங்க எல்லாருமே பெரியவரைப்பார்த்து ஆசி வாங்க வரலாம்னு உத்தரவு ஆயிருக்குதும்மா". அதை சொல்லத்தான் வந்தேன்.

ஒரு நாள் நா என்னிக்கீ என்றனர் கோமதியும்-மைதிலியும்.

அதெல்லாம் யாரையும் பாக்கவேண்டாம் என்றான் ரெங்கசாமி.

கிளி ஜோதிடன் கராறாகவே சொன்னான்         " ரெங்கா அழைப்பு பாக்க ஆசைப்படறவங்களுக்கு தான் மத்தவங்க வர்றதை பெரியவரே விரும்ப மாட்டார்.    எதுக்கு வீண் பேச்சு பேசிக்கிட்டு ?

“தாயீ அடுத்த பௌர்ணமி சனிக்கிழமை வருது , இஷ்டம்னா சொல்லுங்க நானே வந்து கூட்டிக்கிட்டு போவரென். பௌர்ணமி தரிசனம் ரொம்ப விசேசம் அதுலியும் சின்னவரை பாக்கணும்னு தாத்தாவே பகவாதிக்கிட்ட கோரிக்கை வெச்சிருக்காரு. பகவதியும் உத்தரவு கொடுத்துருச்சு. பரிச்சைக்கு முன்னால ஆசிரமத்துக்கு போய் ஆசிவாங்கிட்டா எதுவுமே தங்கு தடை இல்லாம நடக்கும். அப்படின்னு பகவதி உத்தரவோட வந்திருக்கேன்". யார் என்ன பேசுறாங்க அதெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாது என்று எச்சரிக்கும் தொனியில் ரெங்கசாமியை ஓரக்கண்ணால் 'ஜாக்கிரதை' என்பதுபோல் பார்த்தான்.

அதற்குள் மைதிலி காபியுடன் வந்தாள். கிளி ஜோதிடன் சொன்னான் "மொதல்ல அவருக்கு குடுங்க காப்பிய--- போது விடிஞ்சு காபியே ஆனபாடு இல்ல  என்று அவர்தான் பொலம்பிக்கிட்டிருந்தார் என் குரலைக்கேட்டதுமே-- என்று புட்டு புட்டு வைத்தான்.  .  [அட ப்பாவி அப்படியே சொல்றானே என்று ரெங்கசாமி உள்ளூர வெலவெலத்தான்].

“சரி தாயீ இன்னும் 12 நாள் இருக்கு பௌர்ணமிக்கு. முடிவு பண்ணி சொல்லுங்க நான் கூட்டிக்கிட்டு போய் பௌர்ணமி பூஜை பாத்துட்டு கூட்டிக்கிட்டு வந்துர் ரென். போன் பண்ணுங்க .போகணும்னா மாலை 4 மணிக்கு புறப்பட்டா 6.45, 7 மணிக்கு ஆசிரமத்துக்கு போயிரலாம்  7--8 க்குள்ள தரிசனம் முடிஞ்சிரும் . 8 மணிக்கு பூஜை பாத்துட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டு வரலாம். என்று பிளான் சொன்னான் ரெங்கராஜு.          வரேன் அய்யா அம்மா என்று கிளம்பினான் கிளி ஜோதிடன் .

தொடரும்

  

 

RENGA VENDAAM-10

  RENGA VENDAAM-10  ரெங்காவேண்டாம் -10                                     அம்மணீ---தாயீ காலை 7 மணிக்கு வாசலில் கிளிஜோதிடன்-   ரெங்க...