Tuesday, August 19, 2025

LET US PERCEIVE THE SONG -34

LET US PERCEIVE THE SONG -34          

பாடலை உணர்வோம் -34

குங்குமப்பொட்டின் மங்கலம் [குடியிருந்த கோயில் -1968]

பாடல் : குமாரி ரோஷனாரா பேகம் , இசை எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள் டி எம் எஸ் , பி சுசீலா.

 பாடல் வரிகளைக்கே ட்டால் ஒரு தேர்ந்த கவிஞரின் கற்பனை ஊற்றில் விளைந்த கவிதை என்றே சொல்ல தோன்றும். ஆனால் உண்மை என்ன?

பாடலை யாத்தவர் ஒரு இளம் பெண், கோவையை சேர்ந்தவர். ரோஷனாரா பேகம். கட்டு க்கோப்பான இஸ்லாமிய மரபுகளில் வளர்ந்தவர். கவி புனையும் ஆற்றல் மிக்கவர். அவர் தந்தைக்கோ மகளின் திறமை மீது பெரும் ஈர்ப்பும் மதிப்பும் . அவர் எம் எஸ் வியின் நண்பர். எம் எஸ் விஇடம் , எப்படியாவது ஒரு பாடலையாவது திரைப்படத்தில் இடம் பெறச்செய்யுங்கள் என்று வலியுறுத்திவந்தார். நல்ல தருணம் பார்த்து ஜி என் வேலுமணியின் தயாரிப்பில் பாடலை எம் ஜி ஆர் ஜெயலலிதாவுக்கான டூயட்டில் இடம் பெற வைத்து, பாடல் பெரும் வெற்றி ஈட்டியது.

ஒரே நாளில் ரோஷனாரா பெரும் புகழ் அடைந்தார். ஆனால் அவர்களின் மத மரபுகளுக்கேற்ப திரைத்துறையில் இடம் தேடாமல்  ஒதுங்கி க்கொண்டார்.

தொடர்ந்திருந்தால் பெரும் பெண் கவிஞர் என்ற நிலையை அடைந்திருப்பார். இந்த ஒரு பாடலில் அவர் வெளிப்படுத்தியுள்ள மனோரீதியான உணர்வுகளும் கௌரவ சொற்களும், அவரின் அபார திறமைக்கு சான்று. இப்பாடலில் பல இடங்களில் கவிதைச்செழுமை போற்றுதலுக்குரியதே எனில் மிகை அன்று .

எவ்வளவு இயல்பான துவக்கம்?

குங்குமப்பொட்டின் மங்கலம்

நெஞ்சமிரண்டின் சங்கமம், இன்றெனப்பாடும்

இள     மை  ஒன்றெனப்பாடும்  

கவிதை இந்த வடிவில் தான் எழுதப்பட்டிருந்ததாதெரியாதுநிச்சயம் இது போன்ற தருணங்களில் வரிகளை சேர்த்து அல்லது பிரித்து பாட வைத்து மெருகேற்றுவதில் எம் எஸ் வி கை தேர்ந்தவர்.

அவ்வகை யில் பாடும் போது இள     மை ஒன்றெனப்பாடும் என்று சுவைகூட்டி உடனே ஸ்ட்ரிங்ஸ் எனப்படும் நரம்புக்கருவிகளை மீட்டி பாடலை மெல்ல உயரத்தில் மிதக்கவிட்டுள்ளார் எம் எஸ் வி

ஆண்

எந்தன் பக்கம் வந்தென்னவெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்  [இது போன்ற சொல்லாடல் ஆண்  கவிஞர்கள் வெளிப்படுத்தும் கம்பீரம் , இங்கே பெண் கவி தெளிவாக உரைத்துள்ளார்].

தொடர்ந்து  பெண் ஆலாபனை செய்ய

ஆண்

தித்திக்கும் இதழ் மீது மோகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தந்ததே மாந்தளிர் தேகம்  தேகம்  தேகம் 

உணர்வை செம்மைப்படுத்த இசை அமைப்பில் மும்முறை பாட வைத்துள்ளார். அதே சமயம்  மாந்தளிர் தேகம்  என்ற சொற் கோவை  சாதாரண வரிவடிவம் அல்ல. .

பெண்

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

 பெண்ணான பின் என்னை தேடி வந்ததே எண்ணங்கள் கோடி

வந்ததே எண்ணங்கள் கோடி  கோடி  கோடி     மும்முறை பாடி உணர்வின் அழுத்தத்தை உணர வைக்கிறார்     எம் எஸ் வி

பல்லவி

ஆண்

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கம் எங்கும் ஆனந்த கங்கை

ஜில்லென குளிர் காற்று வீசும்

மௌன….மே தான் அங்கு பேசும் 

மௌனமே தான் அங்…..கு  பேசும்    பேசும்    பேசும் 

பெண்

 மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

கற்பனை கடல் ஆன போது 

சென்றதே பூந்தென்றல் தூ…….து

 பூந்தென்றல் தூது தூது தூது

ஆண்

பல்லவி

ஆண் , பெண் இருவரும்

குங்குமப்பொட்டின் மங்கலம்

நெஞ்சமிரண்டின் சங்கமம், இன்றெனப்பாடும்

இள     மை ஒன்றெனப்பாடும்  

ராக அமைப்பில்  நெடுகிலும் எம் எஸ் வி கம்பீரமாக  தெரிகிறார்.

எதுகை மோனை, சொல்லாடல் காதல் மனத்தின் உவமைகள் என அற்புதமான கவிதை. கவிஞர் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பது தெளிவாக தெரிகிறது. மிகவும் சிறப்பான இசை அமைப்பும், கருவிகளின் நளின ஒலிகளும் பாடலை தெளிவாக செம்மைப்படுத்தியுள்ளன. அலுப்பே ஏற்படுத்தாத பாடல். பலமுறை கேட்டு ரசியுங்கள் இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=Ln2plSHq8PE KUMGUMAPOTTIN MANGALAM

சொந்தத்துக்கு எழுதிய கவிதை என்று நினைத்தேன், சுபஸ்ரீ தகவலில் எம் எஸ் வியின் சந்தத்துக்கு ரோஷனாரா எழுதியதாக குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அந்த பெண்மணி மிகவும் திறமை மிக்க கவிதாயினி தான் என்பது புரிகிறது

இப்பாடலின் பிற சிறப்புகளை சுபஸ்ரீ விளக் குகிறார் . இணைப்பு இதோ

Kungumappottin mangalam  qfr 692

https://www.youtube.com/watch?v=OYzrIfyNI60

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்

நன்றி

அன்பன் ராமன்

 


No comments:

Post a Comment

MSV PROFILE 7

  MSV PROFILE 7 MSV’s DIMENSIONS திரு எம் எஸ் வி யின் பரிமாணங்கள் https://www.youtube.com/watch?v=0T9x4XFntaY msv https://ww...