MADURAI
மதுரை
மதுரை நகரம் பல சிறப்புகள் கொண்டது.
கூடல் மாநகர் , ஆலவாய், தூங்காநகரம் என பல பெயர்களுக்கு பாத்திரமான நகரம். ஓங்கி உயர்ந்த கோபுரங்கள் கொண்ட மீனாக்ஷி அம்மன் ஆலயம் தூரத்தில் இருந்தே வா வா என வரவேற்கும் கம்பீரம். கண்டு அதியசிக்காத எவரும் இலர். இவை அனைத்தையும் தாண்டி எண்ணற்ற தனக்கே உரிய சிறப்புகள் மதுரைக்கு மட்டுமே உண்டு.. உலகளாவிய புகழ்கொண்ட சுற்றுலா தலம் தான் எனினும் மேலைநாட்டவர் முதல் அண்டை அருகாமை பட்டி தொட்டி பாமரரும் அன்றாடம் மதுரைக்கு வந்து செல்வது ஒரு முக்கிய வினோதம்.
கோடீஸ்வரன் ஆகட்டும் , 50 ரூபாய் ஊதியம் பெரும் ஊழியனாகட்டும் எவர்க்கும் வாழ வழிவகை தரும் மீனாட்சிப்பட்டணம். மதுரையில் கால் பதித்து வாழவந்த எவரும் துயருற்று இருந்து நான் கண்டதில்லை. அன்னை மீனாட்சியின் அருள் அப்படி.
சென்னை வாசிகளுக்கு மதுரை ஒரு சிற்றூர் என்று ஒரு பார்வை உண்டு. ஆயினும் சென்னை மக்கள் ஒருநாளும் எய்திடாத மகிழ்வை மதுரை தன் மக்களுக்கு தந்துகொண்டே இருப்பதை நான் நன்கறிவேன். உள்ள ஊதியத்தினுள் உவகை கொள்ள மதுரை அன்றி வேறிடம் எது? எண்ணற்ற வழிபாட்டுத்தலங்கள், சிறிதும் பெரிதுமான மருத்துவமனைகள், பொருள்கொள்ள வெவ்வேறு வகை பிரத்தியேக நகைக்கடை பஜார் , பாத்திரக்கடை தெருக்கள், மளிகை பொருட்களை குவித்து விற்கும் அங்காடிகள், 2 -3 மணி நேரத்தில் ஆடைகளை தைத்துத்தரும் தையல் கலைஞர்கள், எண்ணற்ற உணவகங்கள், கையேந்தி பவன்கள் , 1 1/2 மணிநேரம், இயங்கி மறையும் சிற்றுண்டி சேவைகள், 10-15 அடி இடைவெளியில் காபி, டீ , சுக்கு காப்பி , பருத்திப்பால், ஜிகர்தண்டா, என தெருவுக்குத்தெரு வரிசைகட்டி நிற்கும் கடைகள் அனைத்திலும் குவியும் கூட்டம் , இவை தவிர மதுரை யின் முத்திரை என்றே பேசப்பட்டு புகழ்கொள்ளும் எண்ணற்ற அசைவ உணவுக்கூடங்கள்.
காலையில் வடை , மாலையில் பஜ்ஜி விற்கும் தள்ளு வண்டிகள். சென்னை வாசிகளுக்கு இவை எல்லாம் கிட்டாத மகிழ்வுகள். 6, 7 ரூபாய் மதுரை வடையை சென்னையின் 10/- ரூபாய் வடை ஒருநாளும் சுவையில் எட்டிப்பிடிக்க இயலாது.
காலையில் நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று டன்
வடைகள்
விற்பனை
மதுரை
யின்
வடைகளின் சிறப்புக்கு சான்று. ஆம் விலையிலும் சுவையிலும் சுவைப்போரை ஈர்ப்பன. இரவு 7.30 முதல் சுமார் 2.30 மணிவரை இயங்கி மறையும் சாலை உணவகங்கள் 5 வகை சட்டினி சாம்பார் இவற்றுடன் 5/-ரூபாய்க்கு ஒரு இட்டிலி ,
10/- ரூபாய்க்கு ஒரு தோசை இன்றும் விற்கும் பெண்கள் என பசிதீர்க்கும்
மீனாட்சிபட்டணம்.
இவை
மட்டுமல்ல
பல்வேறு
சிறப்புகளின் உறைவிடம் மதுரை.
இவற்றை
அறியும்
விதமாக
இரு
வீடியோ
இணைப்புகள்
கீழே.
இரண்டாவதில்
வட
இந்தியர்
பல
இடங்களை
வியந்து
பேசுகிறார்.
ஆங்கிலத்தில்
துணைத்தலைப்புகள் உள்ளன, பார்த்து உண்மை உணரலாம்
மேலும்
வளரும்
MADURAI IS UNIQUE
https://www.youtube.com/watch?v=yfoobDG2Ye4
SEE THE RANGE OF ITEMS
https://www.youtube.com/watch?v=bp--gIAWo4U
_________________________________________________________________________________
Kudos to our Professor's excellent narratives and visuals. As a former resident of Madurai I cherish our golden days in that glorious city.
ReplyDeleteThe street food is tongue tingling.
I am longing for that life. I am looking forward to further nostalgic posts.