Monday, February 9, 2026

INTELLIGENCE

 INTELLIGENCE

உளவு

இந்த நூற்றாண்டில் பல நாடுகளும் எதிர்கொள்ளும் சவால் தீவிர வாத,அமைப்புகளின் கொடூர செயல் பாடுகள். இதில் மிகவும் வருந்தத்தக்க நிலை யாதெனில் சில நாடுகளின் அரசாங்க அமைப்புகளே தீவிரவாதிகளை ஊக்குவித்து அவர்களுக்கு அனைத்து ஆதரவும் தருவது தான். ஆனால் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதது போல் ஐக்கிய நாடுகள் சபையில் நாடகம் ஆடுவார்கள். ஆனால் மெல்ல மெல்ல பல நாடுகள் இதுபோன்ற திரை மறைவு செயல்களை புரிந்து கொண்டு இயன்ற அளவு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி , தீவிரவாத தாய் நாடுகளை ஒடுக்க முயல்கின்றனர். திலும் 'எதிரியின் எதிரி என் நண்பன் 'எனும் போக்கு பல தருணங்களில் தீவிர வாதம் குளிர் காய இடம் தருவதை காண்கிறோம்

அவ்வளவு ஏன்? -இரட்டை கோபுரம் தகர்க்கப்படும் முன் 'எல்லை தாண்டிய பயங்கர வாதம்' என்ற சொல்லாடலை ஏற்க மறுத்தது. உள்நாட்டிலேயே சில அரசியல் கட்சிகள் ஓட்டு  வங்கி அரசியல் நிலைப்பாட்டை எடுத்து பல விஷமிகளை ஊக்குவிப்பதையும் காண்கிறோம்

 'தன்  வினை தன்னைச்சுடும்' என்பதே அறியாமல் இயங்குகிறார்களா எனில் இல்லை ; ஆயினும் தனது சுக வாழ்விற்கு ஓட்டு  வங்கி அரசியல் நல்ல அணுகுமுறை என்றுணர்ந்துள்ளனர். . இவை ஒரு புறம் இருப்பினும் பல நாடுகள் விழிப்புடன் இயங்க உதவுவது உளவுத்துறையே . அதில் முன்னணியில் இருப்பது இஸ்ரேலிய அமைப்புகள். அவர்கள்   பல்லாயிரம் தீவிரவாத அமைப்பினர்களை தகர்த்து அழித்து வருகின்றனர். அவ்வகை இயக்கம் குறித்து நன்கு விளக்குகிறார் திரு. ஆசிர் சாமுவேல் அவர்கள். அவர் தரும் தகவல்கள் வியப்பூட் டுகின்றன . கவனமாக பார்த்து புரிந்து கொள்ளுங்கள். இணைப்பு இதோ   https://www.youtube.com/watch?v=TtdEPJpjYc0 Aasir Samuel T  Israel  நன்றி  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

WILLIAM SHAKESPEARE -5

  WILLIAM SHAKESPEARE -5 The present episode of quotes from Shakespeare relates to human attitude and general disposition to time. As I ha...