Thursday, February 12, 2026

LET US CONSIDER

 LET US CONSIDER      [ Kadhalikka Neramillai- 1964 ]

இதை யோசிப்போம்                       [காதலிக்க நேரமில்லை -1964]

இதில் யோசிக்க என்ன இருக்கிறது ? என்று பலர் நினைக்கலாம் எதையும் யோசித்தால் , எவ்வளவோ இருக்கிறதென்று புரிந்துகொள்ள இயலும். இதில் யோசிக்க வேண்டிய அம்சங்கங்கள் என்ன ?

1 காதலிக்க நேரமில்லை  ஒரு வெற்றிப்படமா ?

ஆம்,  மட்டுமல்ல , பெரும் வெற்றிப்படம்

2 வெற்றிக்குஅளவுகோல் என்ன ?

பல ஊர்களில்   வெள்ளிவிழா [25 வாரம் ]

அதுவும் பெரும் நட்சித்திர மதிப்பு இல்லாத நடிகை நடிகையர் பங்களித்த நிலையில் வெள்ளிவிழா

3   2ம் கேள்வியில் உள்ளார்ந்த பொருள் -ரசிகர் மன்ற ஆதரவு என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லாத படம்

4 வண்ணம், பாடல்கள், காட்சிகள் இவை தான் காரணிகளா எனில் 

இருக்கலாம்.  ஆனால் இதே தகுதிகள் உள்ள வேறு படங்களைவிட இந்த படம் அடைந்த வெற்றி மிக அதிகம்.

5 வேறு என்னதான் இருக்க முடியும் ?

இந்த கேள்விக்கு கிடைக்கும் விடைதான் இந்த படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பு என்பதே பெரும் காரணியாக இருக்கும் என்றே சொல்லத்தோன்றுகிறது

அந்த காரணி " இயக்கம் "எனும் டைரக்ஷன் என்ற ஒற்றை ச்சொல் . அதனை விளக்க படம் நெடுகிலும் அமைந்த  காட்சிகளின் மிகத்துல்லிய ஒருங்கிணைப்பு. [அதாவது போகிற போக்கில், எதையாவது சொல்லி சிரிப்பு மூட்டிவிட்டு போகும் காட்சி ஒன்று கூட கிடையாது. ஒவ்வொரு சிரிப்பும் கதையின் சரியான இடத்தில் முறையாக பிணைக்கப்பட்டு ரசிகர்கள் மறந்திருந்தாலும் இயக்குனர் மறவாமல் காட்சிக்கு நியாயம் சேர்த்திருக்கும் நுணுக்கம் அலாதியானது.

ஆழியார் அணைக்கட்டு பகுதியில் முத்துராமன் மாறுவேடத்தில் வந்து இறங்கும் கார் தன்னுடையது தான் என்று நம்பரை வைத்து கண்டு பிடித்து விடுவார் வீ எஸ் ராகவன்.

உடனே சுதாரித்த முத்துராமன்  அன்னிக்கு கோயம்புத்தூர்ல புரோக்கர்  ஓர் வண்டி கொண்டுவந்தான் அத நான் வாங்கிட்டேன் 33000/- ரூபாய்க்கு                 [ யெஸ்  தர்டித்ரீ தொளசண்ட் ]ஒரே செக்கா குடுத்து வாங்கிட்டேன் இப்ப இது  என்னோட கார் என்று ஈஸியா சமாளிப்பார். [அதுவல்ல விஷயம்]

பின்னர் தகப்பனுடன் போனில் பேசும் முத்துராமன் 'அப்பா நம்ம பெரிய வண்டிக்கு நல்ல விலை வந்தது அதுனால கொடுத்துட்டேன்  என்று தெரிவிப்பார்.  காட்சிகளை அந்தரத்தில் விடாமல் இப்படி  அழகாக இணைத்த வல்லமையே இயக்குனரின் கவனத்திற்கு சான்று.

பின்னர் இதே தகவலை வேறொரு கோணத்தில் அலசுவார் வீ எஸ் ராகவன்

பாலையாவிடம் சொல்வார்  "கொஞ்சம் யோசிச்சு பாத்தா தெரியும் பரம்பரை பணக்காரன் எவனாவது 24000 /- ரூபா வண்டிய 33000/- க்கு வாங்குவானா ? கொஞ்சம் அப்படி செலவழிக்கிறமாதிரி காமிச்சு லட்ச லட்சமா உன் சொத்தை கொள்ளையடிக்க பாத்திருக்கானுக  என்று கார்  விற்ற விவரத்தை காட்டி பேசுவார். இதுவும் இயக்கம் நுணுக்கமாக செய்யப்பட்டிருந்ததை உணர்த்தும் சம்பவம்

சமுதாய நெறிமுறைகளை மறக்காமல் எழுதப்பட்டிருந்த வசனங்கள்

உதாரணங்கள்

நாகேஷ் சச்சுவின் தந்தையை
“பெரிய எஸ்டேட் வாங்கலாம் , கார்ல கால் மேல கால் போட்டுக்கிட்டு எங்க அப்பா எதிர்லயே போலாம் என்பார் . உடனே பிரபாகர் [சச்சுவின் தந்தை] இல்ல இல்ல ஊஹூம் அது மரியாதை இல்லை என்று மறுப்பு தெரிவிப்பார்.

முதல் முதலில் சின்னமலை வரும் முத்துராமன் , விரலை சொடுக்கி எதிரில் இருக்கும் பாலையாவை அழைப்பது, பாலையா தனக்கு   தொடர்பில்லாது போல் பின் புறம் பார்ப்பது நகைச்சுவை [என்றாலும் தான் ஒரு எஸ்டேட் முதலாளி தன்னை யார் விரல் சொடுக்கி அழைப்பார்கள் என்ற தோரணை] ஆனால் தன்னை தான் வந்தவர் அழைக்கிறார் என்றதும் தோளில் இருந்த துண்டை இடுப்பில் அணிந்து கொண்டே என்னங்க என்றபடி பாலையா முத்துராமனை நோக்கி நகருவார் [இதெல்லாம் சமுதாய நெறிமுறை வெளிப்பாடுகள்]  

 

கெஸ்ட் ஹவுசில்  தங்க முத்துராமனையும் ரவிச்சந்திரனையும் அழைத்துவரும் போ து ஒலிக்கும் இசை ஒத்திகையை கேட்டுவிட்டு , இந்த நாடக கும்பலோடுதான் நாங்களும் தங்கணுமா என்பார் முத்துராமன் [அதாவது அவர் பெரும் தனவந்தர் என்பதை காட்டும் தோரணை]

கெஸ்ட் ஹவுசில் பேச வரும் பாலையாவை , முத்துராமன் உக்காருங்க என்பார்

பாலையா ஹி ஹீ இல்லீங்க என்று சொல்ல , பரவால்ல உக்காருங்க என்பார் முத்துராமன் மீண்டும் பாலையா நின்று கொண்டே பேச முற்பட , முத்துராமன் அட உக்காருய்யா என்றதும் பாலையா பட்  என்று                     உட் காருவார். [இது பெரும் செல்வந்தர்க்கு   அடங்கி கட்டுப்படும் சமுதாய நடைமுறை].                       

 தொடரும்         அன்பன்  ராமன்

1 comment:

  1. கா நே காட்சிகளின் நுணுக்கம் பற்றிய வர்ணனை அபாரம் ....

    ReplyDelete

Oh Language -21

  Oh Language -21 Someone had pointed out that there is no mention of ‘irresponsible’ in the list of items presented in the preceding post...