Wednesday, February 11, 2026

GUITAR

 GUITAR

கிட்டார்

கிட்டார் [Guitar ] வயலினைப்போல இதுவும் ஒரு மேல்நாட்டு இசைக்கருவி தான். ஆனால் இந்தியாவில் இக்கருவி திரையுலகில் பெரிதும் கோலோச்சுவதை மறுப்பதிற்கில்லை

தமிழ் சினிமாவில் கிட்டார் நுழைந்தது 1957-58 காலகட்டத்தில் தான். அப்போதெல்லாம் திரை இசையில் ஆங்காங்கே சிறு துண்டு ஸ்வரங்கள் மீட்டி பாடலை அலங்கரித்தனர்.  1960 களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்கத்தில் பெரிதும் முன்னுக்கு வந்த கருவிகள், அக்கார்டியன், கிட்டார், சாக்ஸபோன், போங்கோ மற்றும் ட்ரம். இவை வெவ்வேறு  சூழல்களில் களம் கண்டது அப்போதுதான்

திடீரென்று ஒரு நிலையில் மாண்டலின்  சேர்ந்து கொள்ள இடையிசையில் பரிமாணம் வேறு கட்டத்திற்கு முன்னேறியது.. ஆனால் ஒரு போதும் தபலா, டோலக் இரண்டும் முடங்கவே இல்லை. எனினும் கிட்டாரின் தொனி வெகுவாக ரசனையை வயப்படுத்தும். எனவே சினிமா இசையில் கிட்டார் இன்றி இடை இசை அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்

அந்த கிட்டரில் பலவகைகள் உள்ளன .அவை base guitar, lead guitar , rhythm guitar என்று அவற்றின் செயல் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன.    Base [bass] guitar என்பது ஒலி  குறைவானது ஆனால் ஆதார சுருதிபோல் ஒலித்துக்கொண்டிருக்கும். முன்பெல்லாம் பெரிய வயலின் போல இருந்த அமைப்பு பாஸ் [bass ] எனப்படும்

பேஸ் கிட்டார் முன்னாளில் டபுள் பாஸ் என்ற பெரும் கருவியாக இருந்தது அது கனமான ஒலி  தரும் எனவே பேஸ் எனப்படுகிறது 

ரிதம் கிட்டார் கார்ட்ஸ் எனப்படும் கொத்தாகவோ, தனி தந்திகளை  மீட்டியோ இயக்க முடியும். இந்நாளில் ரிதம் கிட்டார் கூட லீட் கிட்டார் போல இயக்க முடியும். இப்போது அனைத்துமே எலெக்ட்ரிக் வடிவமைப்பில்  வருவதால் கருவிகள் அடக்கமாக உள்ளன.  

லீட் கிட்டார் என்பது பளிச் என்று ஒலிப்பது பாடலின் முக்கிய இடங்களில் தெளிவாக உணர்வுகளை வெளிப்படுத்துவதால் பாடலுக்கு ஒரு அலங்கார இசையாக அமைவது. சொல்லப்போனால் கிடாரின் மாஹாத்மீயம் வெளிப்பட லீட் கிட்டார் தான் பெரும் காரணம்

இந்த லீட் கிட்டார் இயக்குவதில் பெரும் புகழ் அடைந்தவர் திரூ பிலிப் அவர்கள் . எம் எஸ் வி யின் எண்ணற்ற பாடல்களுக்கு தனது விரைவான மீட்டலால் பெரும் வலிமை சேர்த்தவர். சில ஆண்டுகள் முன்னர் மறைந்தகார். அவர் புகழுக்கு மறைவே இல்லை.                                                 Guitarist Philip gave true Fillip to songs.

அவரின் அருமை பெருமைகள் குறித்து சில வீடியோ தொகுப்புகள் [அவர் வாசித்த இசை தொகுப்புகள்] உள்ளன . அவற்றில் கிட்டார் பகுதிகளை மட்டும் தொகுத்துள்ளார். அவ்வீடியோவில் முதல் வரிசை யில் மூவர்  . நடுவில் கிட்டார் பிலிப் [அவருக்கு’The man with Golden Guitar]  என்று திரையுலகில் ஒரு பெரும் அடைமொழியே உண்டு. இடது புறம் மாண்டலின் ராஜு , வலது புறம் அக்கார்டியன் மங்களமூர்த்தி -மூவரும் பெரும் ஜாம்பவான்கள். கேட்டு மகிழ இணைப்பு இதோ . 

https://www.youtube.com/watch?v=R4BC5I_cEtc

RAKU,    ,PHILIP,       MANGALAMURTHI

இதே கிட்டார் கலைஞரைப்பற்றி திரு அமுதபாரதி விவரிக்கிறார் கேட்டு அனுபவியுங்கள். இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=weGn-LdVkF8  AMUDHABARATHI ON PHILIP   

நன்றி அன்பன் ராமன்

__________________________________________________-

No comments:

Post a Comment

Oh Language -21

  Oh Language -21 Someone had pointed out that there is no mention of ‘irresponsible’ in the list of items presented in the preceding post...