Sunday, August 17, 2025

Do we need so much ?

 Do we need so much ?

இவை எல்லாம் தேவையா நமக்கு ?

இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அதிகம் . ஆனால், இந்தக்கேள்வி எழுவது இந்தியபாதுகாப்புத்துறை வல்லுனர்களிடம் இருந்து தான். ஏன் என்னாயிற்று ? ஒன்றும் இல்லை ஆழ்ந்து சிந்திக்கத்துவங்கிவிட்டோம். வெற்றி அடைய , தவிர்க்க முடியாத சில கருவிகளும் , தொழில் நுட்ப நுண்ணறிவும் போதுமே எதற்கு போர்விமானம்? பீரங்கி போன்ற ராட்சத கருவிகள் என்ற விவாதம் உயர்மட்ட நிலையில் உலா வருவதை உணர முடிகிறது. சுற்றி வளைத்து எழுதுவதாக தோன்றுகிறதா? இல்லை இல்லை வெறும் பீடிகை தான். சில அடிப்படை உண்மைகளும் அவற்றிற்கான போர் தேவைகளும்..

ஊடுருவல்களை தடுக்கவும் அழிக்கவும் வேண்டும் [எல்லைக்காவல் படை நமது எல்லைக்குள் இருந்து கொண்டே சிறப்பாக செயல் பட முடியும்].  . 

எதிரியின் கூடாரங்களையும்  தீவிர வாத முகாம் களையும் பயிற்சிக்கூடங்களையும் பதுங்கும் இடங்களையும் முற்றாக அழிக்க வேண்டும் [இதற்கென்றே ஏவுகணை சுமந்த விமானங்கள் மற்றும் தரைவழித்தாக்குதல் செய்யும் பீரங்கிகளும் பயன் பட்டன].

இவற்றை வழிநடத்த துல்லியமான ராடார் கருவிகளும் , துரத்தி துரத்தி தாக்கும் ஆகாஷ், ப்ரம்மோஸ் மற்றும் குண்டு மழை பொழியும் S - 400  போன்ற அடர் தாக்குதல் புரியும் தரை வழி யுத்த "பீமன் "களும் உள்ளன. . இருந்தாலும் எதிர்கால போர் முறைகளை முற்றாக இந்தியா மாற்றிவிட்டதென அநேக நாடுகளும் அலறுகின்றன.

ஆம் முன்பு போல் போர் விமானங்களை இயக்கி கொண்டு எதிரியின் நிலப்பரப்பிற்குள் போய் தாக்க வேண்டாம்  ; மாறாக இருந்த இடத்தில் இருந்தே [நமது எல்லைக்குள் இருந்தே] துல்ல்லிய நெடுந்தூர ஏவுகணைகளைக்கொண்டு எதையும் தகர்த்து விட முடியும் என்று சில வாரங்கள் முன்பு இந்திய முப்படை ஆளுமை நிரூபித்தது. அதில் பலரையும் மிரள வைத்த தகவல் PRECISION என்னும் துல்லியம் மற்றும் சில நிமிடங்களிலேயே [23 நிமிடங்கள்] தவிடு பொடியாக்கி , நிகழ்வதை உணரும்முன்பே அழிந்தொழிந்த தீவிரவாத கூட்டங்கள் என்று இந்திய கோர தாண்டவம் எல்லை தாண்டி நிகழ்த்திய தொழில் நுட்ப மேன்மை..

இது போர் சிந்தனை, திட்டமிடல், கருவிகளின் செயல் நுணுக்கம் மற்றும் நேரமறிந்து தாக்கும் செயல் உத்தி மற்றும் புத்தி என இந்தியபாதுகாப்பு  வெளிப்படுத்திய விஸ்வரூபம்  -இப்போது இந்தியா குறித்த பழைய கணிப்புகளை இது சிதறடித்துவிட்டது என்பதே உண்மை.  அதன் தொடர்ச்சி மற்றும் நீட்சியாக அமைந்த நிகழ்வுகளே இன்றைய தகவல்.

ULPGM [Un manned Aerial Vehicle launched Precision-Guided Missile] ஆளில்லா வான் ஊர்தி கொண்டு  வழிநடத்தி ஏவப்படும் துல்லிய ஏவுகணை [ULPGM  -V -3]

இந்த அமைப்பு வேறொன்றுமல்ல. ஒரு ட் ரோ ன் -எடை குறைந்தது சுமார் 12.5 கிலோ எடைகொண்ட ஏவுகணையை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கின் மீது வீசிவிட்டு திரும்ப வந்துவிடும். இதற்கான உத்தரவுகள் ராடார் மற்றும் செயற்கை நுண் அறிவு கொண்டு இயக்கப்படுவதால் துல்லியம் மிக மிக அதிகம். அதாவது ஒரு 10 cm [10 சென்டிமீட்டர்= 4 அங்குலம்]  பரப்பின் மீது மிகச்சரியாக தாக்கும். தேவையற்ற இடங்களை விட்டுவிட்டு குறிப்பிட்ட இலக்கை தாக்கவல்லது. டேங்க் வகை போர் வாகனங்கள் மிகவும் வலுவான அமைப்பு கொண்டவை. அனால் அதை இயக்கும் வீரரின் சிறிய அறை  திறந்தே இருக்கும் அங்கே தாக்கினால்,  வீரர் மற்றும் டேங்கின் இயக்கம் இரண்டும் சிதைந்து அழியும். அதாவது 300-400 கோடி ரூபாய் மதிப்புள்ள டேங்கை 10-15 லட்சம் ரூபாய் ட் ரோ ன் மூலம் தாக்கும் போது , ட் ரோ ன் தாக்குண்டால் பொருள் இழப்பு மிகவும் குறைவு . மாறாக இதே தாக்குதலில் போர் விமானம் ஈடுபட்டால் 350-500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம் மற்றும் விலைமதிப்பில்லாத மனித உயிர் இரண்டும் அழிக்கப்படலாம்.. னால்    ட் ரோ ன் பயன்பாட்டில் விமானி உயிருக்கு ஆபத்தில்லை. இதே போலவே நிலத்திலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் /அவற்றின் ரேடார் அமைப்புகள் எதிரிகளால் தாக்குண்டு சிதைவுறலாம்.

சரி இந்த வகை ட்ரோன் சுமார் 10 கிலோமீ ட்ட ர்  தூரம் வரை செயல் படும் மேலும் இரவில் சுமார் 2.5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளையும் பகலில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் தூரம் வரை உள்ள இலக்குகளையும்   தாக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரே நேரத்தில் பல இலக்குகளை [multi targets ] தாக்கும் வகையில் செயல் திறன் கொண்டது. மேலும் இறுதி நேரத்தில் கூட இலக்கை மாற்றி அமைத்து தாக்குதல் தொடுக்க இயலும். இது போன்ற ட்ரோன் , பல நாடுகளிடம் இல்லை,மேலும் இது மூவகை நிலைகளையும் தாக்கும் திறன் கொண்டது. 1 எதிரிகளின் போர்க்கருவிகள் 2 எதிரிகளின் ரேடார் அமைப்புகள், 3 பூமிக்கு அடியில் அமைந்துள்ள பதுங்கு குகைகள், கூடங்கள் என எல்லா நிலைகளையும் அழிக்கும் வகையில் ஏவுகணையை வீசும் . இந்த ட்ரோ னின் ரேடார் அமைப்பினை முடக்க இயலாத வாறு அமைக்ஜ்கப்பட்டுள்ளது. இந்த ட் ரோன்  இந்தியாவின் DRDO என்னும் ராணுவ ஆராய்ச்சி அமைப்பினரால் வடிவமைக்கப்பெற்று, சிறியதும் பெரியதுமாக பல நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உள்நாட்டிலேயே தயார் ஆகிறது. சென்ற மாதம் [ஜுலை -25] ஆந்திர மாநிலம் கர்னூலில் தேசிய திறந்த வெளி சோதனை மையத்தில் [NATIONAL OPEN AIR RANGE ] பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பெற்று களம் காண ஆயத்தமாக உள்ளது. . எதிர்காலத்தில் போர் விமானங்களின் தேவையும் எண்ணிக்கையும் குறையும், வீரர்களின் உயிரிழப்பும் பெரிதும் தவிர்க்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். எனவே இந்திய செயல்பாடுகள் பெரும் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன எனில் மிகை அல்ல.  

மேலும் விவரங்களை மேஜர் மதன் குமார் விளக்க கேட்டு அறியுங்கள். இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=WhAJTFkczGc drone in missile launch major madan kumar

No comments:

Post a Comment

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...