Thursday, September 1, 2022

பேட்டி எடுக்க வந்து வேட்டி அவிழ்ந்தவன் கதை

           பேட்டி எடுக்க வந்து வேட்டி அவிழ்ந்தவன் கதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாத ஸ்வாமி திருக்கோயில். வைகுண்ட ஏகாதசி கியூ அனுமார் வால்  போல வளர்ந்துகொண்டே போக, இளவரசனும், முகுந்தனும் சென்னையில் இருந்து  தேர்தலுக்ககாக ஆய்வு செய்ய வந்து எந்தக்கட்சிக்கு உங்கள் ஆதரவு என்று கேட்க, யாரும் உருப்படியாக பதில் சொல்லவில்லை. தங்களை மேதாவியாக எண்ணிக்கொண்டு ஐயங்கார் மாமிகளிடம் வேறுமாதிரி கேள்வி கேட்போம் என்று முகுந்தன் சொல்ல, உடனே இளவரசன் செயலில் இறங்கினான்.  மாமிகள் ஆபத்தானவர்கள் என்று அறியாத பையன் அவன்.

சுமார் 45 வயது மதிக்கத்த மாமியிடம்

"மாமி,  'நீங்க வலது சாரியா , இடது சாரியா ?' என்று கேள்வியைக்கேட்டான்

மாமி --" ஏண்டாப்பா நோக்கு கண் நன்னா தானே இருக்கு, பாத்தா தெரியல புடவையை எந்தத்தோள்  போட்டிண்டிருக்கேன் -வந்து கேள்வி கேட்டுண்டிருக்கியே -அபிஷ்ட்டூ--- போது விடிஞ்சு வம்புபண்ணாத" இளவரசன் ஏமாந்தான், கம்பன் வரிசையில் சேர்ந்து விட்டான். [கம்பன் ஏமாந்தான் -- பாடலை நினைவு கொள்க ] முகுந்தன் சொன்னான் 'மாமிகள் லாம் குதர்க்கம் பிடிச்சுவளுக. கொஞ்சம் மிடில் ஏஜ் மாமிட்ட கேளு' என்றான். மீண்டும் கம்பன் -sorry  இளவரசன் 4, 5 இடம் தள்ளி ஒரு 30 வயசு பெண்ணிடமும் அதே கேள்வியை போட , அவள் நான் சூடிதார் போட்டிண்டிருக்கேனே என்ன வந்து சாரி கேள்வியெல்லாம் கேட்காத என்றாள். திரும்பவும் கம்பன் ஏமாந்தான். டே முகுந்தா நீ சொன்ன படி தானே கேட்டேன் -ஒருத்தியும் பதில் சொல்லமாட்டேங்கறாளே -என்னடா பண்றது?  இன்னொரு 4, 5 பேர் கிட்ட கேட்போம் வா, அந்தப்பக்கம் போய் ஆரம்பிப்போம் என்றான் முகுந்தன்.

வேறொரு க்யூ அருகில் இவர்கள் சென்றதும் 'கழுகு' ராமசாமி ஐயங்கார் அங்கிருந்த மாமிகளை எச்சரித்துவிட்டார் . அவன் ஏதாவது கேழ்ப்பன் - நீங்க ஹீ ஹீ ஹீ டிவி ல என்னைக்காட்டுவான் னு மினுக்கிண்டு பதில் சொன்னா தெரியும் சேதி என்று உயிர்ப்பயம் ஏற்படுத்தி விட.மாமிகள் உஷாரானார்கள்.

மீண்டும் இளவரசன் ஆரம்பிக்க, அந்த இடத்தில் இருந்த பெண்மணி ஆண்டவன் காலேஜ் லெக்ச்சரர் ,அவள் விடுவாளா? என் சாரி இருக்கட்டும் நீங்க ஏன் இதைக்கேக்கறீங்க ?     மேடம் தேர்தல் வருதுல்ல அதுனால கருத்து கணிப்பு எடுக்கறோம் அதுக்குதான் இந்த கேள்வி- வலது சாரி , இடது சாரி இதெல்லாம். என்றனர் இளவரசனும், முகுந்தனும்.

உங்களுக்கு கேள்வியே கேட்கத்தெரியல்ல , நீ கணித்து அத உங்க ஆபீஸ் ல திணித்து அவன் இப்பவே நமக்கு இமாலய வெற்றி னு தினம் அனத்துவீங்க -போங்க வேறு ஏதாவது வேலை இருந்தா  போய் பாருங்க என்று குதறி விட்டாள்.

விட்டால் போதும் என்று சிட்டாய் பறந்து இருவரும் தேர் முட்டி அருகில் டீ குடிக்கப்போனார்கள். இந்தப்பக்கம் தான் சுஜாதா வீடு என்றான் முகுந்தன். இளவரசன் 'வேணாம்டா, இந்த  கிழவிகளையே பேட்டி எடுக்க முடியல்ல, சுஜாதாவா ஐயோ என்றான் இளவரசன். டே சுஜாதா இல்லடா என்றதும், இளவரசன் தெரியும், அவர் பேரன் கள் கிட்ட மாட்டி விட்டுடாத ரொம்ப கஷ்டம். சரி பேட்டிக்கு என்ன வழி? முகுந்தன் சொன்னான் - சும்மா எப்பவும் போல கியூ வில பேசிக்கிட்டிருக்கறவங்காள சைலன்ட் வீடியோ எடுத்து அப்புறம் வாய்ஸ் டப்பிங் பண்ணி  எப்பவும் போல வெற்றி வெற்றி னு பாட்டு போட்டு விட்ருவோம்.                                                  ஆனா நிச்சயம் அய்யங்கார் மூஞ்சியா இருக்கணும் அது ரொம்ப முக்கியம் இல்லன்ன TA / DA கிடைக்காது ஆமா என்று ஊர் சுற்ற கிளம்பினர்.                                                                   பேரா . ராமன்

 

2 comments:

  1. I was perplexed after seeing the initial of the author of this blog. Should it not be கி instead of ரா ?
    Any how I have decided to go through the topic.
    பேட்டி எடுக்கவந்தவன் வேட்டி மட்டும் தான் அவிழ்ததா ஜட்டியுமா?
    இவர்கள் டப்பிங் செய்வதில் வல்லவர்களாயிற்றே.
    K. Venkataraman

    ReplyDelete
  2. Actually, "Peraa" is the abbreviation for Professor.I have not used my initial as per current trend in Tamil write-up.K.Raman

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...