Saturday, September 17, 2022

குருவாயூரில் பறவைக்கரசு

                                     குருவாயூரில் பறவைக்கரசு       

தொடர்ந்து நான்கு விடுமுறை நாட்கள் .திடீரென்று வாசலில் ராமசாமி இருக்காரா என்று மூவர் நிற்க, உள்ளிருந்த கழுகு எட்டிப்பார்த்து என்ன விஷயம்  என்றது. நாங்க நாகப்பட்டினத்திலேர்ந்து வரோம், கையிலிருந்த அட்ரஸ் தொலைஞ்சு போச்சு. நெறைய பேருக்கு யாரையும் தெரியல , உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு சொன்னா யாரோ -அதான் உங்களை என்று இழுத்தனர். கழுகு மனதிற்குள் பாடியது 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் - " என்று; சரி யாரை தேடறீங்க? பையனுக்கு வரன் பார்க்க வந்தோம், நேர்ல வந்தா பொண்ணு ஜாதகம் தரோம்னு சொன்னா".     கழுகு--" யார் சொன்னா ?" தேசிகன் சார்" அவர் எங்க வேலையில இருக்கார் ?- என்றது கழுகு

வந்தவர்கள் -“டீ வீ எஸ்” . கழுகின் பளிச் பதில் " அவர் வடக்கு சித்திரை வீதியில கோபுர வாசல் பக்கம்" ரொம்ப தேங்க்ஸ் என்றனர். அவ்வளவுதானே என்றது கழுகு. "சார் சார் சார் , இன்னும் 2 வீடு "    யார் வீடு? என்றது கழுகு "கல்யாணி மாமி -ரிட்டயட் பிரின்சிபால்’’. " இந்திரா காந்தி காலேஜா” என்றது கழுகு? "இல்ல சார் சீத்தாலஷ்மி காலேஜ் "  அவா WIDOW வா என்றது கழுகு . "ஆமா சார் " அவா கீழ உத்தர வீதி பெரிய பச்சை கேட் போட்ட வீடு -பொண்ணு டாக்டர் -பலே கெட்டிக்காரி” என்று சர்டிபிகெட்  கொடுத்து வழி சொல்லி விட்டு, சரி 3 வது என்றார்   

சார் "ரங்கசாமி"- ஜட்ஜ் சீனிவாசாச்சாரி பேரன் அவர் பொண்ணுக்கு என்று ஆரம்பித்ததும் கழுகு "சௌந்தர்யா க்கு னு சொல்லுங்கோ".ரொம்ப லக்ஷணமானவ யார்பாத்தாலும் கொத்திண்டு போயிடுவான். எல்லாம்    புளியங்கொம்பா தேடறேள் "  

ஜன்னல் வழியாக இத்தனையையும் பார்த்த அம்புஜம் பெருமூச்செறிந்தாள். ம்ம்ம் இந்த மனுஷன் அத்தனை பெண்களையும் சுருதி சுத்தமா தெரிஞ்சு வெச்சுண்டு ப்ரமாதப்படுத்திண்டுருக்கார். “இது சித்த- பேக்கு னு நெனச் சேன், பயங்கரமான மேரேஜ் பீரோ வா இருப்பார் போல இருக்கே ? இவரப்பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும் -யாரை கேக்கலாம்? பளிச்சென்று நினைவுக்கு வந்தது 'லட்சுமி எனும் வெங்கடலட்சுமி மாமி தான்.     சரியாக 5 வது வீடு இதே வரிசையில். அம்புஜத்துக்கு மனக்குரங்கின் ஆட்டம் துவங்கி விட்டது. தற்செயலாக கழுகு முணுமுணுத்ததுதென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது, தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது".  ஆம் அம்புஜம் மனதில் இப்போது புயல் -கஷ்டப்பட்டு அதை அடக்க சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தாள்.  ஓரளவு நிதானப்பட்டதும், மிச்சம் மீதி சமையலை விறு விறு என்று முடித்து விட்டு பெருமாளுக்கு அமுதுசெய்வித்தாள் [பிறர் அதை நைவேத்தியம் என்பர்]. அதோடு அம்புஜம் எஸ்கேப்

மணி 10.02 காலை. லட்சுமி மாமி வாடிம்மா ஏது இந்தப்பக்கம் ? ஒண்ணு மில்ல உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன்" ஆமா சித்த முன்னாடி 3-4 பேர் வந்தாளே என்று Brahminical curiosity மேலிட லட்சுமி மாமி கேள்வியை தொடுத்தாள். "அதுவா, யாரோ வெளியூர் க்காரா வரன் பாக்க வந்து அட்ரஸ் தெரியாம 'இவரை'த்தேடிண்டு  வந்தா . அத ஏன் கேக்கறேள் , இவர் என்னடான்னா ஒர்த்தொருத்திய , ஜாதக விசேஷத்தோட பொளக்கறார் , இதுல அட்ரஸ் வேற , நான் தல சுத்தாத கொறையா ஆஆ னு பாத்துண்டு நின்னுண்டுருந்தேன். என்றாள் அம்புஜம்

நன்னாருக்கு அவனுக்கு தெரியாத ஒரு பொம்மனாட்டியோ, பெண் குழந்தையோ இந்த ஊர்ல உண்டோ. அவன் பேரே கழுகு டி” என்றாள் லட்சுமி மாமி. ‘என்ன கழுகா’ ? என்று கண்களை அகல விரித்தாள் அம்புஜம். ஆமாம் ராஜ கோபுரத்துல புதுசா யாராவது வந்தால் இவனுக்க [அதான் ன் ஆம்படையானுக்கு,ஆத்துக்குள்ளயேஇருந்தாலும்]மூக்கு இல்ல ஒடம்பு முழுக்க வேர்க்கும், சுரீர் னு பார்வையிலேயே எல்லாரையும் கணிச்சுடுவான் அதுனாலதான் அவன் 'கழுகு'- ஆமாம் அவனுக்கு இப்பிடி ஒரு பேர் இருக்குனே   உனக்கு தெரியாதா ? நியாயம் தான் ஒனக்கு எப்படி தெரியும், இங்கே யே பொறந்து வளர்ந்தவாளுக்கு தெரியும். பேர்தான் 'கழுகு' ரொம்ப நல்லவன் தப்புத்தாண்டாக்கெல்லாம் போகமாட்டான். அவன்கிட்ட எல்லாருமே பயப்படுவா, அசகாய சூரன் என்று விவரித்தாள் லட்சுமி மாமி

உள்ளூர அம்புஜத்துக்கு பெருமை. நான் தான் பேக்கா இருந்திருக்கேன் இந்த மனுஷன் ஏதோ அளக்கறார் னு நெனச்சுட்டேன் . இந்தூர் க்காரா அளந்துதான் பேர் வெக்கறா -என்று மனதிற்குள் முதல் முதலாக ராமசாமியை ஒரு குடும்ப சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் அமர்த்தினாள். குருவிடம் விளக்கம் பெற்ற சீடனைப்போல, அம்புஜம் சரியான தெளிவு பெற்று மனதிற்குள் கழுகைக்கொண்டாடினாள்.   நாழி ஆச்சு வரேன் மாமி என்று விடை பெற்றுக்கொண்டு கன்றுக்குட்டியைப்போல துள்ளி ஓடினாள் தன்      வீ ட்டை நோக்கி .                  தொடரும்

1 comment:

  1. ஶ்ரீரங்கத்திலெ எத்தனை தெருக்கள் இருந்தாலும் கழுகார் கண்டுபிடிச்சுடுவார் போலிருக்கே.
    இவர் போஸ்டாபீஸில் வேலை பார்த்தாரோ?
    அம்புவுக்கு இவர் மேல சந்தேகம் வரக்கூடாது
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...