Monday, September 19, 2022

குருவாயூரில் பறவைக்கரசு - II

                                     குருவாயூரில் பறவைக்கரசு      - II

சுமார் 15 செகண்டில் வீட்டின் வாசல் அருகே வந்து திண்ணையை தாண்டி வீட்டிற்குள் பாய்ந்து விடலாம் என்று சட்டாரென்று படியேறியவளை மடக்கியது கழுகு. இப்ப என்ன இவளவு வேகம் , ஏன் இப்படி ஓடிவர ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட ராமசாமி, இதோ பார் என் கிளாஸ் மேட் வேதாந்தம் என்றுஒரு முன் வழுக்கையை விரலைக்காட்டி அறிமுகப்படுத்தினான். வேதாந்தம் எழுந்து நின்று நமஸ்காரம் என்று கை கூப்பினான். அம்புஜம் ரோபோ வைப்போல கை கூப்பினாள்  [மனதிற்குள் இவர் பேரா இல்ல பேச்சா -வேதாந்தம் என்று எண்ணிக்கொண்டே] , இதோ காபி கொண்டுவருகிறேன் என்று கிளம்ப, வேதாந்தம் வேண்டாம் வேண்டாம் என தடுக்க , கழுகு ஏண்டா என் காபி லியும்  மண்ண போடற என்றான்

தற்குள் ஆவி பறக்கும் 'பத்மா காபி' மணம் மூக்கைத்துளைக்க , வேதாந்தம் சுமார் 7 அங்குல உயரத்தில் டம்ளர் உயர்த்தி அந்த காபியை மெய்ம்மறந்து மிடறு மிடறாக விழுங்கி SUPERB என்றான். டே , சௌத் இந்தியா மாதிரி காபி எங்கயும் கிடைக்காதுடா என்று பெருமூச்செறிந்தான் சரி மீட்டிங்குக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன் இந்தா  என் போன் நம்பர் எப்பவேணாலும் கூப்பிடு , சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும், சால்ஜாப்பு சொல்லாத , கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் வரேள் என்று டாக்சிக்குள் பாய்ந்தான் , வண்டி வீர் என்று பாய்ந்தது.இப்போதெல்லாம் அம்புஜம் கழுகின் செயல்களை கவனிக்க தொடங்கினாள், அது என்ன- சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும், சால்ஜாப்பு சொல்லாத,என்று குழம்பினாள்.

இதை உணர்ந்த கழுகு, உனக்கொரு SURPRISE இன்னும் ஒரு 6 நாள் பொறு என்று அம்புஜத்தின் தூக்கத்தை கெடுத்தான் கழுகு. ஐயோ, இதுக்கு ஒண்ணுமே தெரியாம இருந்திருக்கலாம் போல இருக்கே இன்னும் 6 நாள்ங்கறாரே என்று மனதிற்குள் சஞ்சலப்பட்டு, வாய் நிறைய என்றுமில்லாத திருநாளாக குருவாயூரப்பா என்று மேலே பார்த்தாள். மிரண்டு போன கழுகு, இவ என்ன ஒட்டு கேட்க ஆரம்பிச்சுட்டாளா, “இல்லையே வெளி லேர்ந்து தானே வந்தா” என்று மனதிற்குள் எண்ணிக் குழம்பியது.  இப்போது 'குருவாயூரப்பா ' என்று உரத்த குரலில் சொன்னான்.  கழுகு தம்பதிக்கு தனித்தனியே உறுத்தல் மனதிற்குள். ரெண்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி சூப் பர்  ஆக்ட்டிங் .

அம்புஜம் வீட்டில் இல்லாத போது  நடந்தது இதுதான்

வேதாந்தத்திற்கு த்ரிசூரில் 3 நாள் கான்பரன்ஸ் அதனால குருவாயூருக்கு போகலாம் நீங்கள் இருவரும் வாங்கோ கார்லயே போகலாம் ஆனால் திரும்பி வருவதற்கு நீங்கள் ட்ரெயின் புக் பண்ணிக்கொள்ளுங்கள், ஏனென்றால் தொடர்ந்து மேலும் 3 ஊர்களில் எனக்கு கான்பரன்ஸ் இருக்கு, எல்லா இடத்துலயும் நான் தான் chief guest , தப்பிக்க முடியாது. நல்ல சான்ஸ்ரெண்டு பேரும் வாங்கோ என்றான். கழுகு வாழ்நாளில் வேறு கோயில்களுக்கு போனது மொத்தமே 2 தடவை தான். அவன் தான் கழுகு ஆயிற்றே பளிச் என்று பிளான் போட்டான்

இத பாரு போக வர ட்ரெயின் லேயே ஏற்பாடு பண்ணிக்கறேன் , எனக்கு ரயில்வே பாஸ் இருக்கு;  ஆனா அங்க தங்கறது சாப்பாடு இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதே  , அது தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு என்றான் கழுகு .  டேய் நீ சரினு சொல்லு அதெல்லாம் நான் நாளைக்கே ஏற்பாடு பண்ணிடறேன்”. மீண்டும் கழுகு ஏண்டா நான் எங்க ஆத்துக்காரியோட வந்து அவளுக்கு bore அடிச்சா என்னடா பண்றது.? உங்கள ரெண்டு பேரையும் கூட்டிண்டு நான் தனியா வந்தா வித்யா [ வேதாந்தி ],-- என்ன ---துப்பாக்கி இல்ல லேசர் gun வெச்சு சத்தம் இல்லாம போட்டுத்தள்ளிடுவா - அவ CSIR LASER RESEARCH UNIT CHIEF, அவ கண்டிப்பா என்னோட வருவா அதுனால நீ தைரியமா வா கொஞ்சம் குருவாயூரப்பனை சேவிச்சுட்டு வருவோமே -வா என்றான்.வேதாந்தம்    

கழுகு "சரி 4 நாள் ஆபீஸ் லீவு , 5 வது நாள் பாஸ்சுக்கு எழுதிக்கொடுத்து உடனேயே ட்ரெயின் பெர்த் TO அண்ட் FRO ரெடி பண்ணிடறேன் . அது வரை மூச் இந்த அம்புஜத்துக்கு எதையும் சொல்லிடாத என்று முடித்த 2 நிமிடங்களில் அம்புஜம் லக்ஷ்மி மாமி வீட்டில் இருந்து திரும்பினாள் [திரும்பினது, காபி கொடுத்தது எல்லாம் தான் தெரியுமே]. அதுனால தான் 6 நாள் பொறு என்று அம்புஜத்திற்கு சொல்ல, சஸ்பென்ஸ் தாங்காமல் அவள் வாயில் குருவாயூரப்பா என்று வந்தது. அது கழுகையும் தொற்றிக்கொள்ள குருவாயூரப்[பா என்று வேறு ஒரு பயத்தினால் [வேவு பார்க்கிறாளோ என்று ] அவன் வாயிலும்  வெளிப்பட்டது. எல்லாம் கிருஷ்ணன் விளையாட்டு .        [தொடரும்]

1 comment:

  1. கழகுக்கும் அம்புவுக்கு ரயிலில் புக் பண்ணியாச்சு. ஆனா குருவாயூரில எங்க தங்கறது , சாப்பிடறது ? வேதுகிட்ட ஏற்பாடு பண்ணச் சொல்லணும்் அங்கே பிராமணாளுக்கு பிரீயா போஜனம் கிடைக்கும்னு சொல்லுவா
    வெங்கட்ராமன்

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...