Friday, September 23, 2022

குருவாயூரில் பறவைக்கரசு - IV

                               குருவாயூரில் பறவைக்கரசு      - IV

 

அன்பர்களே

நமது தொடரின் பகுதி IV  தனை த் தொடருமுன் ஒரு சிறு விளக்கம் . அன்பர் வெங்கட்ராமன் எழுத்தையும் சற்று பகிரலாமே என்று IIIa என்ற இணைப்பினை வெளியிட்டேன். எனினும், கழுகு சார்ந்த கதையின் போக்கை பெரும் விலகல் இன்றி முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே அன்பர் வெங்கட்ராமன் பதிவு ஒரு தாக்கம் என்று தோன்றியது. என்ன தாக்கம் என்கிறீர்களா , குருவாயூருக்குள் வந்துவிட்ட நபர்கள் சார்பில்  அன்பர் வெங்கட்ராமன், தன் கற்பனை சிறகை விரித்தாரோ, அல்லது கனவை இங்கே விதைத்தாரோ யார் கண்டது? கனவு ஏன்? 1000 காரணம் இருக்கலாம், ஹேமமாலினிக்கே அப்படி ஒரு [கனவு தொடர்பான] பெயர்  உண்டே! ஒரு வேளை  லேசருக்கும் அதே  அந்தஸ்தை தந்து, அந்த பாதிப்பில் {அதான் அசப்பில்ஹேமமாலினி ஆச்சே],அவர்களை பற்றிய ஒரு கனவை எழுத்தில் வடித்தாரோ என்னவோ?                

 எதுவானால் என்ன கனவு கலைந்தபின் கதை யதார்த்தத்துக்கு வரத்தானே வேண்டும். இதோ வந்து விட்டது. தொடர்ந்து படியுங்கள்.  

 

ஹோட்டல் ராமக்ரிஷ்ணாவின் அகலமான முகப்பு கவர்ந்தது உள்ளே போனதும், வேங்கோ வும் இல்லாமல், வாங்கோவும் இல்லாமல் இடைப்பட்ட உச்சரிப்பில் வரவேற்றார் சிப்பந்தி. இட்லி, காபி ஆயிற்று, மத்தியானம் சாப்பாடு உண்டா என கேட்க அவர் "ண்டு ண்டு" என்றார் மேலும், பக்கத்திலே இவட ப்ராஹ்மண சமூகம் ஸ்ரேஷ்டமாய லென் ஜு [lunch] கொடுக்கும், இப்பழே ரெஜிஸ்டர் செய்யணம்".   எங்கே என்றான் வேதாந்தம் . சுமார் 10 அடியில் ஒரு வாசலைக்காட்டி அவடே" என்றார். அங்கே போனார்கள்.

ஒரு ஐயர்,” நிங்ஙள் ஏது  கோத்ரம், எத்தர பேர்?” - 2 கோத்ரம்- பாரத்வாஜம், ஸ்ரீவத்சம் , 4 பேர்.  ஓகே. டிக்கட் ஒன்னுமில் லை என்று 'லை ' யை அழுத்தி சொன்னார். டோக்கன் பத்ரம் என்று 4 என எழுதி கொடுத்தார்  சரிக்க பந்த்ரண்டு மணி தொடக்கம் ஒன்னர வர  ச்சாப்பாடு” என்று  [‘ச்’ ல் ஒரு மலையாள அழுத்தம்]. நிங்ஙளுனு இஷ்டமாய ரூவே [இஷ்டப்பட்ட ரூபாய்]  தன்னா லு  மதி” [தந்தால்  போதும்].  

TIME -9.00 AM

நேரே மம்மியூர் ஆட்டோவில் ஐந்தே நிமிடம் -கோவில் வந்தது, சிவன் பார்வதி, விஷ்ணு எல்லாம் ஒரே கோவிலில். ஒரு இடத்திலேயும் தட்ட நீட்டி காணிக்கை கேக்கறதே இல்லையே , நம்பூர்ல பிடுங்குவனே என்றாள்  அம்புஜம். தரிசனம் சுகமாக ஆயிற்று. இன்னும் நாளைக்கு வரை இருக்கே; இன்னும் ரெண்டு தடவை சேவிக்கலாம்.  

தொட்டடுத்து [கிட்டக்க], பார்த்தசாரதி, பாலாஜி எல்லாஅம்பலமும்    [கோயிலும்], இரிக்கு என்றார் மம்மியூர் டிக்கெட் கவுண்டர் நபர். “வெறிதே, அரமணிக்கூரில் காணாம்”  என்றுஆட்டோக்காரனிடம்சொல்லி அனுப்பினார். அவற்றையும் சேவித்து, ரூம் பக்கம் வந்தால்மணி11.10am.ரூமுக்கும், கோயிலுக்கும் இடைப்பட்ட வழியெல்லாம் கடைகள், அம்புஜத்துக்கு ரெங்க விலாசம் ஞாபகம் வந்தது. வேறென்ன ஷாப்பிங் தான்.

சின்ன கிருஷ்ணன்விக்ரஹம், மயில் தோகைவிசிறி, etc.,வித்யா கண்ணில் ஐஸ் டீ பட்டுவிட வேதாந்தம் , வித்யா ஐஸ்டீயை ருசித்தனர். கழுகுகளுக்கோ காபியே முதன்மை பானம். காலாற நடந்து பக்கத்தில் கலாமண்டபத்தில் பாட்டுக்கச்சேரி கேட்டு விட்டு, 12 மணிக்கு ப்ராஹ்மண சமூகம்  சாப்பாட்டு பந்திக்கு வந்தாயிற்று. பந்தியில் சட்டை, உத்தரீயம் எல்லாம் வேண்டாம் என்று உத்தரவு வேறு. வேறென்ன?பூணல் தெரிய வேண்டும்.

 ஆனால், எரிசேரியும், தேங்காய்எண்ணெய் சமையலும் அம்புஜத்திற்கு ரசிக்கவே இல்லை.  அம்புஜம்- “ஏதோ அப்பளாமாம் ஒரே தகுடாட்டம், அம்மைக்கொப்பளம் மாதிரி, நன்னாவே இல்ல” என்று TYPICAL அய்யங்கார் அவதாரமெடுத்தாள். அது பப்படம் என்றாள் வித்யா; டெல்லியில் ஏகப்பட்ட பாலக்காடு அதனாலே வித்யாவுக்கு இதெல்லாம் சகஜம். ஆனால் அவளோ சென்னை பெண் இதிலிலெல்லாம் நாட்டம் இல்லை. லேசர் டிசைனிங்குக்கே நேரம் இல்லை, அப்பளமாவது, பப்படமாவது வித்யாவுக்கு? நாளை பகல் உணவு ராமக்ரிஷ்ணாவில் என்று இப்போதே தீர்மானித்தார்கள்.                                   .        [தொடரும்]

No comments:

Post a Comment

CURRY LEAF

  CURRY LEAF Named in vernacular as கருவேப்பிலை கறிவேப்பிலை   Both these names reveal logic behind the name. Both equate the leaves to tho...