குருவாயூரில் பறவைக்கரசு - V
மாலை மணி
3.25, மெல்ல
கிளம்பலாமா
என்றாள்
அம்புஜம்.
எங்க
? இது
கழுகு
. கோவிலுக்கு
தான்
அந்தகிரிஷ்ணனை
தூக்கிண்டு
வந்துடணும்
போல
இருக்கு.
'சிலை
திருட்டு
-மாமி
கைது’
னு
பெரிய
அவமானம்
வந்துடும்’
-கழுகு
.” ஐயோ
ஐயோ,
அவ்வளவு
அழகு
னு
சொன்னா
, உடனே
திருடிண்டு
வந்துடுவாளோ
-கஷ்டம்
கஷ்டம்”
என்று
முகவாயை
, தோள்
பட்டையில்
இடித்துக்கொள்ள
, "மாமி" என்று
லேசர்
லேசாக
எட்டிப்பார்த்தாள்
.
சம
வயசுக்கு
மாமி
மாமி
னு,
ரொம்பதான்,
தான்
ரொம்ப
சின்னவனு
காட்டிக்கறா
என்று
அம்புஜத்துக்கு
ஒரு
குறை.
ஆனாலும்
ஸ்ரீரங்கத்து
ட்ரெயினிங்,
வீண்
போகுமா,
வா
என்று
அழகாக
சிரித்தாள்.
கழுகுக்கு
புரிந்து
விட்டது
அம்புஜம்
அட்டகாசமாக
சமாளிக்கிறாள்
என்று.
அதனால்
நாம்
அம்புஜத்துக்கு
'சின்ன
கழுகு'
என்று
வைத்துவிட்டால்
கழுகு
தம்பதி
என்று
எளிதாக
சொல்லி
விடலாம்.
அவர் எங்கே? -இது அம்புஜம் . session க்கு கிளம்பிண்டு ருக்கார், கீழே பாருங்கோ என்றாள் லேசர் [சுடிதாரில் ] கீழே கோட்-சூட் அணிந்து வேதாந்தம் வெள்ளைக்காரன் போல இருந்தான். [இந்த ராமசாமிக்கு எப்ப இதெல்லாம் வாய்க்கும் -என்று உள்ளூர நினைத்துக்கொண்டாள். போலாம் என்று கீழே இறங்கியதும் எதிர் வரி சையில் iINDIA COFFEE HOUSE கழுகு பார்த்துவிட்டது , அடுத்த வினாடி மூவரும் உள்ளே. லேசருக்கு டீ , கழுகுகளுக்கு காபி-- நல்ல வாசனை -அம்புஜம் “இந்த காபி ரொம்ப நன்னா இருக்கு” [விலை 11 ரூபாய் ] “டீயும் நன்னா இருக்கு” என்று லேசர் ஆமோதித்தாள். 33 ரூ போக மீதியை தட்டில் வைத்தார் மகா ராஜா உடையில் இருந்த சர்வர். ஒரு 5 ரூ வைத்து விட்டு 3 நிமிடத்தில் கோயில் கியூவில் மூவரும்.
இப்போதும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கியூ நகர கிருஷ்ணன் சன்னதி வாயிலில் வரிசையில். சில வினாடிகளில் உள்ளே நகர மீண்டும் பட்டத்ரி பட்டயத்தை வணக்கம் செலுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தால் வேறு விதமான அலங்காரத்தில் சந்தன கிருஷ்ணன் குறும்பு நிறைந்த சிரிப்பு: ஒரு காலை மடக்கி சற்றே உயர்த்தி, கண்கொள்ளா காட்சி. கழுகு ஒப்புக்கொண்டான் ஆமாம் இந்தகிரிஷ்ணனை தூக்கிண்டு போய்டலாம் போல இருக்கு. இன்னும் கியூ முன்னேற யாரும் தாண்டி செல்வதாக இல்லை. இத்தனைக்கும் பாரம்பரிய எண்ணைதீப ஒளியில் இவ்வளவு ரம்யம் , அந்த நம்பூதிரிகளின் கை வண்ணம் தான். காலையில் பார்த்த அதே விக்ரஹம் என்று எவராலும் சொல்ல முடியாது. கூட்டம் குறைவே என்பதால் நன்றாக நின்று சேவித்தார்கள் .
சற்று முன்னேறி சென்றவர்களைக்கூட திரிச்சு காணு என்று மீண்டும் ஒரு முறை சேவிக்க அனுமதித்தார்கள். டிக்கெட் இல்லை, லஞ்சம் இல்லை தட்டை நீட்டி துட்டை கேட்கும் கைங்கர்ய பரர்கள் யாருமில்லை. கழுகுகளுக்கு ஒரே ஆச்சார்யம் [எதற்கோ ஆங் ஆங் என்று ஸ்ரீரங்கநாதர் சன்னதியில் துரத்தும் குரல் இப்போது மனதில் ஒலித்தது].
கழுகு பயங்கர அதிர்ஷ்டக்காரன் . நன்றாக சேவித்துவிட்டு மனமின்றி ஆனால் மனதார உண்டியலில் நல்ல காணிக்கை செலுத்தி மன நிறைவுடன் மீண்டும் இவனை தரிசிக்க வேண்டும் என நினைத்தான். அதே அவா மூவர் மனதிலும். கலா மண்டபத்தில் நாட்டிய நிகழ்ச்சி பார்த்து விட்டு வெளியே வர வேதாந்தம் எதிர்ப்பட மூவரும் கோரஸாக ரொம்ப ரம்யமான சேவை என்று சொல்லி அவனுக்கு நன்றி சொன்னார்கள். இரவு சாப்பாடு ராமகிருஷ்ண பவனில் அடை வெல்லம் , ஒரு பிடி பிடித்தார்கள்.
எரிசேரியின் துயரில்
இருந்து விடுபட்டாள் அம்புஜம். 3.00 AM க்கு நிர்மால்யம் சேவிக்க 2.00, 2.20 க்குள்
கியூவில் இருக்கணும் எனவே சீக்கிரம் தூங்கப்போகலாம் என்று கிளம்ப, லேசர் GOOD NIGHT
மாமி என்றதும், GOOD NIGHT, THANK YOU மாமி என்றாள் அம்புஜம்; லேசருக்கு தன் மீது
லேசாக லேசர் விட்டது போல இருந்தது. சின்னகழுகு,
பெரிய கழுகுக்கு சரியான ஜோடி தான். . [தொடரும்]
கழுகாருக்கு க்யூவில் நின்றதில் கால் கடுக்க ஆரம்பமாயிடுத்து.
ReplyDeleteஅடியே அம்பு கொஞ்சம் காலை அமுக்கிவிடேன் . கால் வலியால இப்ப என்முதுகு வலியும் சேர்ந்துடுத்து.
அதுதான் காலை பிடிச்சுவிடச் சொன்னேன்.
இப்ப நாம கேரளால தானே இருக்கோம் . ஏதானும் வலிக்கு எண்ணை வாங்கிண்டு போலாமே என்றாள அம்பு.
வேது வந்ததும் அவன்கிட்ட கேட்போம். என்று சொல்லிண்டிருக்கும் போதே வேது ரூமுக்குள் நுழைந்தார்
முதுகு வலிக்கு ஏதேனும் தன்வந்திரி
எண்ணை வாங்கமுடியுமா என்று கழுகு கேட்டது.
ஓய் இதை முதல்லே செல்லக் கூடாதோ. விடிஞ்சதும் நாம தன்வந்திரி கோவிலுக்கு போய் ஸ்வாமி தர்சனம் பண்ணிட்டு அங்கே உம்ம முதுகு வலிக்கு எண்ணையும் வாங்கிண்டு விடுவோம் இப்பொ நீர் தூங்கும் Good night என்று சொல்லி கிளம்பினார் வேது.
வெங்கட்ராமன்