Thursday, October 6, 2022

கே கு மற்றும் க கு

                       கே  கு  மற்றும் க கு

டேய் என்ற குரல் கேட்டு சைக்கிளில் இருந்து குதித்து, டப் பா வேஷ்டியை கீழே இறக்கி விட்டு, நமஷ்காரம் என்று வாய் கொள்ளாத வெற்றிலைக் கலவையுடன் கே  கு, க கு வு க்கு கும்பிடு போட்டான். கே கு என்பவன் கேப்டன் குக் எனும் சேஷாத்திரி, க கு என்பவன், சாட்ஷாத் கழுகு ராமசாமியே தான்.. உடன்  வந்த  அம்புஜத்தை போகச்சொன்னான் கழுகு. அவள் தேறி விளைந்துவிட்ட C B I ரகம் இப்போது..                                                        

 கழுகு என்னதான் பேசுகிறான் [ஏதாவது பெண்கள் பற்றிய notes exchange  ஏதாவது இருக்குமோ] என்று மெல்ல நகர்வது போல் நடித்து அங்கேயே இருந்தாள்  [நடந்தும் நடக்காத அசையும் தேர் போலவே -என்று கழுகு பாடிப்பார்த்தான்;] அவள் வேறு புறம் பார்த்துக்கொண்டு காதைத்தீட்டிக்கொண்டு இயற்கைக்காட்சியை --அதான் மதிலில் குடியிருந்து அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கிளிகளை பார்ப்பது போல் நின்றாள் . இவர்கள் எந்தக்கிளிகளைப்பற்றி பேசுவார்களோ என்று அச்சம் கலந்த ஆவலுடன் உத்தர வீதி மதிலை ப்பார்த்துக்கொண்டு நின்றாள்.

க. கு  " எங்க பெரியம்மா பொண்ணுக்கு அடுத்த மாசம் சீமந்தம் , நீ தான் வந்து எல்லாம் பண்ணித்தரணும் , வேற எங்கியோ வேலை இருக்கு னு தலையை சொறிந்தாயோ , நீ ஆயுசுக்கும் தலையை சொறிஞ்சிண்டு நிக்க வேண்டியது தான்".

கே. கு  : அப்பதியெல்லாம் ஷொல்வேனா என்றான் அண்ணாந்து கொண்டு. .                                                                                   க. கு " மொதல்ல வெத்தலையை துப்பிட்டு பேசு , கோவில் யானை மாதிரி எப்பப்பாரு  அச போட்டுண்டு என்றான்.

அடுத்த வினாடி வெறும் வாயுடன் கே . கு ஸ்பஷ்டமாக "யாருக்குண்ணா சீமந்தம்?"

 க. கு  " எங்க பெரியம்மா பொண்ணுக்கு" .  கே . கு : அதுக்குள்ளயா என்று வியந்தான் .               க. கு: 'என்ன அதுக்குள்ளயா "

கே . கு : இல்ல ஆறு மாசம் முன்னால தானே கல்யாணாம் ஆச்சு என்று இழுத்தான் . க. கு: 'டேய் 7 மாசம் ஆச்சு, அடுத்த மாசம் தான் பங்க்ஷன் ". ஒன் வேலையப்பாப்பியா கணக்கு ப் போட்டுண்டு இருக்கியே "

கே. கு" என்ன பண்ணனும்?'

க. கு" நீ என்ன புரோகிதம் பண்ணுவியா இல்ல மோளம் அடிப்பியா?'      கே. கு: "என்ன அண்ணா கிண்டல் பண்றேள் " நான் பரிஜாரகம் பண்றவன்."                க. கு : “அப்படி வா வழிக்கு " சரி எவ்வளோ கேப்ப” ?"

கே. கு: " பெரிசா என்ன கேட்ருவேன்?" கேட்டதால் நீங்க என்ன தரவா போறேள் ? உங்க பெரியம்மா சித்திர குப்தி ஒன்னு விடாத கணக்கு பாத்து பணத்தைக்கண்ணுல காட்டர்த்துக்கே  ஒரு வாரம் ஆக்குவா." கழுகு ஏதாவது கோபித்துக்கொள்வானோ  என்று, உங்கள மாதிரி எல்லாம் வராது அண்ணா”. என்று ஐஸ் வைத்துவிட்டு, ".நான் 4 நாள் ல லிஸ்ட் தரேன், மாமி வேற நின்னுண்டிருக்கா நீங்க கிளம்புங்கோ” என்றான்.

க.கு: நான் அவள; அப்பவே போகச்சொல்லிட்டேன் நின்னா  நிக்கட்டும் , என்று வேறு திசையில் நகர்ந்தான். கழுகு.

அதற்குள் கே. கு , "அண்ணா வடக்கு அடையவளஞ்சான் ல ஒரு ரயில்வே காரர் முந்தாநாள் வந்திருக்கார் என்று இழுக்க ,                               க. கு : “சுந்தரேச அய்யர் “என்று கே. கு வை திணறடித்தான். ;         ஆனால் கே கு:  'அவருக்கு 'மஹாலஷ்மி மாதிரி ஒய்ப், லட்டு லட் டா  4 பெண்கள் [படிலேர்ந்து ஒழக்கு வரைக்கும் வரிசையா] இருக்கு. என்றான்.              க. கு: சரி நீ கிளம்பு, லிஸ்ட் கொண்டுவா என்று பிய்த்துக்கொண்டு கழுகு பாய்ந்தான், அப்போது தான் அம்புஜம் வீட்டருகில் சென்று கொண்டிருந்தாள். கழுகு முதலில் வீட்டுக்குள் பாய்ந்தான். பாண்ட் அணிந்து கொண்டு, நல்ல இஸ்திரி சட்டை யாக மாட்டிக்கொண்டு, சற்றே பவுடர் பூசி மிடுக்காக கிளம்ப, “திருப்பியும் நகர் வலமா” என்றாள் அம்புஜம்.                  "மேல் அதிகாரியப்பாக்கப்போறேன்" என்றான் கழுகு,

"அதிகாரி “மேல், [MALE] அவாத்துல” ?" என்று பொடி வைத்தாள்  அம்புஜம். . வர வர இவ கெட்டுப்போய்ட்டா , குதர்க்கம் வேற , எல்லாம் அந்த லேசர் தந்த பாடம் என்று அனாவசியமாக வித்யாவை  மனதிற்குள் விமரிசித்தான்.

ஊருக்குள் 4 புதுப்பெண்கள் அதுவும், PG , UG , PLUS -II , X , கழுகுக்கு அமைதி வருமா? பறந்தான் வடக்கு அடையவளஞ்சான் நோக்கி.

கழுகு யமகாதகன் அல்லவா நேராக சுந்தரேஸ்வர அய்யர் வீட்டின் முன் சைக்கிளில் இருந்து மிடுக்காக இறங்கி சார் என்றான். உள்ளிருந்து ஒரு மாமி எட்டிப்பார்த்து யாரோ ஆபீஸ்காரா மாதிரி இருக்கு என்று உஷார்ப்படுத்தினாள்.   சிவப்பழமாக அய்யர் ஹாலில் வந்து வெளியே பார்த்து வாங்கோ என்றார். கூப்பிய கரங்களுடன் ராமசாமி நுழைந்தான். ஓ நீங்களா வாங்கோ வாங்கோ என்றார் அய்யர். ராமசாமி “ஏதாவது வேணுன்னா சொல்லுங்கோ நான் ஏற்பாடு பண்ணித்தரேன் சங்கோஜமில்லாம சொல்லலாம்” என்றான். அய்யர். “ராஜம் ராஜம்” என்றதும் கே. கு வர்ணித்த மஹாலக்ஷ்மி கை கூப்பி வெளியே வந்தாள். அய்யர் "இவர் ராமசாமி' எங்க ஆபீஸ் " ஏதாவது வேணுமா னு  கேட்கிறார் ". மாமி : “ஸ்வாமிக்கு பசும்பால் நெய்வேத்யம் பண்ணுவோம்; பாக்கெட் பால் வரது, பசும்பால் ஒரு வேளை கொண்டுவருவான்னா ரொம்ப சந்தோஷம்” என்றாள் . ஏற்பாடு பண்றேன் , வேற? பசங்க ஸ்கூல் காலேஜ் அட்மிஷன்.? “அதெல்லாம் போன மாசம் ஒரு 3 நாள் வந்து எல்லாம் முடிச்சுட்டோம்” என்றாள்.. அய்யர் தொடர்ந்தார், அப்ப நீங்க கேரளா பக்கம் டூர் போயிருந்ததா ஆபீஸ் ல சொன்னாங்க.[குருவாயூரில் பறவைக்கரசு ஞாபகம் வருகிறதா?].

அய்யர் தனது குழந்தைகளை அழைத்து-ரேஷ்மா [M.Sc] சுஷ்மா [B.Sc], பூமா +2, ஹேமா x std  என்று அறிமுகம் செய்வித்தார் GOOD MORNING UNCLE என கோரஸ் பாடினர் பெண்கள். கே.கு சமையல் கலைஞன் . -லட்டு என்று குழந்தைகளை சரியாக வர்ணித்துவிட்டான் என்று மனதிற்குள்  சேஷுக்கு CERTIFICATE தந்தான் கழுகு..

விடை பெற்ற கழுகு இப்போது லாவண்யா வீட்டில் . குரல் கேட்டு ஓடி வந்த லாவண்யா மஞ்சளும் பொட்டுமாக அம்மன் போல தெய்வீகமாக "வாங்க சாமி என்றாள் ".

“இங்கதான் 44ம் நம்பர் வீட்டுல அரை லிட்டர் பசும்பால் தினமும் ஒரு வேளை கொடுக்கமுடியுமா” என்றான். “காலைல5.30 க்குள்ளாற  ஊத்தலாம் சாமி சாயங்காலத்துக்கு முடியாது” என்றாள் . உடனே 44ம் நம்பர் வீடு நோக்கி போன லாவண்யா 5 நிமிடத்தில் வந்து “பேசிட்டேன் சாமி ரொம்ப நன்றிங்க , தினம் காலைல பசும்பால் தங்குதேனு கவலையா  இருந்துச்சு இனமே அந்தக்குறை  இல்ல சாமி., நன்றிங்க” என்றாள்.  

சுந்தரேச அய்யர் வீட்டில், கழுகு, 6 நிமிடங்களில் பெரிய ஹீரோ ஆனான். எவ்வளவு வேகமா பாலுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரே என்று ராஜம் வியக்க , இது தான் சமயம் என்று ரயில் வே ஆசாமிகள் சுறுசுறுப்பு என்று அய்யர் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டார்..                                                         வெற்றிகரமாக வீட்டிற்குள் நுழைந்த கழுகுக்கு காத்திருந்தது நூதன வரவேற்பு..

மேல் -அதிகாரியைப்பார்த்த்தாச்சா என்றாள்  அம்புஜம்.

‘ஓ’ -என்றான் கழுகு.

இப்போது அம்புஜம் ஆரம்பித்தாள்  "அப்புறம் ராஜம், ரேஷ்மா, சுஷ்மா, பூமா, ஹேமா இவளாலெல்லாம்”?.

"ம்ம் பாத்தாச்சு", என்றான் கழுகு.

 “பாத்தாச்சா” என்று இரு உள்ளங்கைகளையும் அபய ஹஸ்தம் போல காட்டிக்கொண்டு, திருப்தியா என்பது போல் சிரிக்காமல் வாயை மூடிய உதடுகளுடன் அகலமாக விரித்து ஒரு தேர்ந்த நடிகை போல முகபாவம் காட்டினாள். இவள் எப்படி துல்லியமாக நம்மை தொடர்கிறாள் , ஐயோ மண்டை வெடிச்சுடும் போல இருக்கே என்று நடுங்கினான் கழுகு. அந்த அபய ஹஸ்தம் , ராமசாமிக்கு, இப்போது  அபாய ஹஸ்தம் போல் தெரிந்தது. அம்புஜம் எய்த அம்பில் சரிந்தது கழுகு.. அம்புஜம் மிக சரியாக முடிவெடுத்து என்னதான் செய்கிறார் ராமசாமி என்று சமயம் பார்த்து அம்பு எய்தாள் சின்ன கழுகு அம்பு (ஜம்).

நடந்தது இது தான்  

சுந்தரேச அய்யர் மற்றும் அம்புஜத்தின் தாய் வீடும் அடுத்தடுத்த குடும்பங்கள். மேலும், ராஜம், முதல் நாள் தான் கோயிலில் அம்புஜத்தை பார்த்து 20 நிமிடம் பேசி இப்போது ஸ்ரீரங்கம் வந்துவிட்டதை தெரிவித்து விட்டாள் முகவரி 44வடக்கு அடையவளஞ்சானில் என்பது உள்பட.. அந்த “மேல்” அதிகாரி சுந்தரேச அய்யர் என்பது அம்புஜத்துக்கு ஏற்கனவே தெரியும். அம்புஜம் மிக சரியாக முடிவெடுத்து என்னதான் செய்கிறார் ராமசாமி என்று சமயம் பார்த்து ‘ஜம்’ மென்று  அம்பு எய்தாள் அம்பு (ஜம்). அமைதி காத்து, கழுகின் இறக்கையை ஒரே அம்பில் பிய்த்து விட்டாள்..

சும்மாவா சொன்னேன் கழுகு ஜோடி என்று? 

 பேரா . ராமன்   

4 comments:

  1. அம்பு சீமந்தத்துக்கு சேச்சுவை புக் பண்ணிட்டேன் தெரியுமோ . அப்புறம்
    புதுசா வந்த ஆத்துக்கு பசும்பால் வேணும்னா. அதுக்கும் லாவண்யாகிட்ட சொல்லிட்டேன்.
    அவாள்ளாம் ஸ்மார்த்தாள் .இல்லைன்னா அவாத்து மூத்த பொண்ணு ரேஷ்மாவோட ஜாதகத்தை வாங்கியிருப்பேன் .
    ஏன் உத்தர வீதி உமாமகேஸ்வரய்யர் பையனுக்கு அந்தப் பொண்ணை பார்க்கலாமே என்றாள் அம்பு
    ஆமாண்டி மறந்து போச்சு
    நாளைக்கே ஜாதகத்தை வாங்கிடரேன் என்றது கழுகு.
    சரி சரி ரேஷ்மா பூமா கதையெல்லாம் அப்பறம் பார்க்கலாம் . இப்போ உப்புமா சாப்பிட வாங்கோ
    இதோ கை கால் அலம்பிட்டு வந்துடறேன்என்றது கழுகு.

    ReplyDelete
  2. அண்ணா, கழுகு இறகு பிய்ந்து விறகில் அமர்ந்து பெண்ணை வெயிலில் ஆற்றிக்கொண்டிருக்கிறது. உப்புமா கழுகுக்கு -3ம் பட்சம்.

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...