பெரும் மனங்கள் /ஆளுமைகள்—7
நாளாம்
,நாளாம் திருநாளாம் ..continued
இத்தொடரின்
அடுத்த பகுதி பாடகர்கள் மற்றும் பிற தொழில் நுட்ப ஆளுமைகள் பற்றியது. பி பி ஸ்ரீனிவாஸ்
மற்றும் பி. சுசீலா குரல்களை விளக்கவோ விமரிசிக்கவோ போதிய ஞானம் இல்லாத என் போன்றோர் வியக்கத்தான் இயலும் விளக்க அல்ல. ஒன்றை மட்டும்
சொல்லலாம் அற்புத குழைவுகளும் சங்கதி களும் தெளிந்த நீரோடை போல இயல்பாக பீடு நடை போடும்
ராக பாவங்கள் நிறைந்தபாடல். இப்பாடலை லேசாக கடந்து போக இயலாது. இசைக்கு என்றே பலராலும்
போற்றப்பட்ட ஒரு பிரமிப்பு .
தொழில்
நுட்ப பிரிவில் முதன்மை காட்டிய ஆளுமைகள் ஒளிப்பதிவும் ஒப்பனையும்
எனில் மிகை அல்ல. இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்துப்பார்ப்பது அறிவு பூர்வமான செயல்
அன்று. ஒப்பனையின் குறைபாடுகளையும் ஒளிப்பதிவின் பலவீனங்களையும் மூடிமறைக்க இயலாது.
அவை இரண்டுமே சிறப்பாக அமைந்துவிட்டால் அவை குறித்து பேசுவதே இல்லை. குறைகளை மன்னிப்பதில்லை
நிறைகளை மதிப்பதில்லை என்பதே விமரிசகர்கள் பற்றிய விமர்சனம். விமரிசகர்கள் பலருக்கும்
ஒப்பனையுடன் அமைந்த யதார்த்தங்களை பகுத்துணரும் தெளிவு எப்போதும் வெளிப்பட்டு நான்
கண்டிலேன். சரி சொல்ல வந்தது என்ன?
இத்துறைகளை
நிர்வகித்த வின்சென்ட் -சுந்தரம் [ஒளிப்பதிவு] மற்றும் சிவராம் குழுவினர் [ஒப்பனை
] பற்ற சிறிது பேச வேண்டும்.
ஒளிப்பதிவு
அப்போது
என்ன கருவிகள் பயன் படுத்தப்பட்டன / ARRIFLEX
காமிராவும் அல்லது MITCHELL காமிராவும் தான். ஆனால்; ஒளிப்பதிவு எவ்வளவு நேர்த்தியாக
செய்யப்பட்டிருந்தது. ஆரம்ப காட்சி சென்னை பல்கலைக்கழகத்தின் கிழக்கு சாலையிலும், மெரினா
கடற்கரை சாலையிலும் நீலக்கடலின் விளிம்பும், புல்வெளிகளும் பூச்செடிகளும் மிக இயல்பாக
காட்சியோடு ஒன்றி பயணித்தது ஒளிப்பதிவின் சிறப்பு. படம் முழுவதிலும் காமிரா கோணங்களும்
வண்ணக்கோலங்களும் சென்னையின் முதல் வண்ணப்படம் என்றால் நம்ப முடிகிறதா? பாடல் காட்சி
ஒவ்வொ ன்றிலும் , காமிரா பேசியது என்றே சொல்ல வேண்டும். நாகேஷ் +பாலையா கதை சொல்லும்
காட்சியின் திகிலை மேலும் வலியுறுத்திய குறைந்த ஒளிஅமைப்பில் படப்பிடிப்பு மிகுந்த
கவனமாக நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும் .
ஒப்பனை
அந்த
1964 காலகட்டத்தில் இன்றுபோல் உபகரண ங்களோ, உயர்தர பூச்சுவகைகளோ இருந்ததில்லை. எனினும்
முகப்பூச்சில் தீவிர கவன த்துடன் அனைவருக்கும் skin tone balancing வெகுசிறப்பாக செய்யப்பட்டிருந்தன என்று ஆணித்தரமாக
சொல்ல முடியும். "நாளாம் நாளாம் " பாடலில் ராஜஸ்ரீ / ரவிச்சந்திரன் ஒப்பனை
உதட்டு சாயம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் இப்போது பார்த்தாலும் வியத்தகு வித்தகமென்றே
சொல்லத்தோன்றுகிறது. இதில் எனது பார்வை யாதெனில் முத்துராமன்/ காஞ்சனா , .ராஜஸ்ரீ
/ ரவிச்சந்திரன், நாகேஷ், சச்சு என்ற ஜோடிகளின் உறுப்பினர்கள் மாறுபட்ட நிறம் உடையவர்கள்.
அவர்கள் டூயட் வகை காட்சிகளில் பெரும் வேறுபாடு காணும் அளவிற்கு எந்த ஏற்றத்தாழ்வும்
புலப்படாத ஒப்பனை செய்வதென்பது மிகச்சிறந்த
தொழில் நுட்பாளர்களுக்கே சாத்தியம் . அவ்வகையில்
ஒளிப்பதிவு மற்றும் ஒப்பனை செய்த கலைஞர் கள் மற்றுமோர் அசுரக்கூட்டம்
வளரும்
பேரா.
ராமன்
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை.
ReplyDeleteஎனக்குத்தெரிந்தவரை ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும் வைஜெயந்திமாலாவும் நடனக்காட்சி வெறும் கருப்பு வெள்ளை தான் .அதைப்போன்ற தெளிவான படத்துக்கு ஈடு இணை இல்லை.
வெங்கட்ராமன்