Wednesday, November 16, 2022

சென்னை வினோதம்

  சென்னை வினோதம்

ஆம் சென்னை பல விநோதங்கள் கொண்ட விபரீதக்கலவை. எம் ஜி ஆரின் பாடல் போல ஓடி ஓடி உழைப்பவர்கள் , ஓடிக்கொண்டே இருப்பவர்கள், கூவிக்கூவி விற்பவர்கள், ஓடினாலும் உட்கார்ந்தாலும் பேரம் பேசாத நபர்கள் சென்னை வாசிகள். ஆம் பேரம் பேசினால் கிடைக்கும் பாராட்டு " மூஞ்சப்பாரு என தொடங்கி கஸ்மாலம் ,கம்னாட்டிப்பையா என விரிவடைந்து வாங்காங்காட்டி போ இப்ப இன்னா என்ற லக்ஷர்ச்சனை ஏற்கும் திராணி யாருக்கு இருக்கிறது . சென்னை வாசிக்கு திராணி முதுகெலும்பு போன்ற நிலைப்பாடுகள் உச்ச பட்ச LUXURY எனில் மிகை அன்று.    .எனவே அவன் மௌனமே பார்வையால் என்ற பாடலின் இலக்கணமாகத்திகழ்பவன். கோவை மற்றும் மதுரை வாசிகள் சென்னை வியாபாரத்தலங்களுக்கு போகாமல் இருத்தல் விற்பவர் /வாங்குபவர் இருவர்க்கும் நல்லது. இல்லையேல் மொழி யினால் விளையும் கலவரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கக்கூடும். சரி காய் கறி  வாங்க? ஒன்றும் செய்ய வேண்டாம் ரயில் களில், நடைபாதைகளில் அவை கிடைக்கும். அந்த மொழி புரியாமல் ஏதாவது வாங்கப்போக ஏடா கூடமாக ஏதாவது நடந்துவிடும் சாத்தியக்கூறுகள் ஏராளம்.  

ஸ்டேஷன் வளாகங்களில் நாலு பத்துபா நாலு பத்துபா என்று அலறி விற்பது அநேகமாக சமோசா என்றபெயரில் வெறும் புறத்தோலாக இருக்கும். மின்சார ரயிலில் இனம் புரியாத சொல்லாக வேறு கள்ள வேறு கள்ள பொட்லம் மூண்றுபா என்பார்கள். பொட்லம் 4 அங்குல உயரம் தேறும்.; ஆனால் மேலே இருக்கும் 7 க்குப்பிறகு ஒன்றன் மீது ஒன்றாக ஒரு 6 அமர்ந்திருக்கும். அது தான் வேறு கள்ள எனப்படும் வேர்க்கடலை, கடலூர் பகுதியினரின் மல்லாட்டை எனப்படும் மணிலா கொட்டை , மதுரையினரின் நிடக்கடலை எனப்படும் நிலக்கடலை. 13 கடலை யின் விலை 3 ரூபாய் எனில் அதில் இரண்டு அவிஸல் எனப்படும் சொத்தை ரகம்; சென்னையின் மாண்பே தனி.

கொட்டும் மழையில் ரங்கநாதன் தெருவில் கூழ் வடாம் போல பிழிந்து ஒல்லியான கூம்பில் வழங்கும் ஐஸ் க்ரீம் சாப்பிடும் அரை ட்ரவுசர் மாமாக்கள் சென்னையின் அடையாளம். சாக்கடைசந்தில் குடி இருந்து கொண்டு சிட்டில என்று பெருமை கொள்ளும் ஏமாளிகளும் கோமாளிகளும் இவர்களே.வெங்கடேஸ்வரா போளி என்று நாக்கை த்தொங்கப்போடும்  மாலை நேர போளி ப்ரமோட்ட ர்களும் இவர்களே.

இத்துணை அவலங்களையும் மூடி மறைத்துக்கொண்டு மயிலாப்பூர் போனா ராயர் மெஸ்ஸுக்கு போய்ட்டு வரணும் என்று ஐந்தாண்டு திட்டம் போட்டே வாழ்வை நகர்த்தும் மாமாக்கள் மறந்தும் செங்கல் பட்டையோ  , கூடுவாஞ்சேரியையோ பகல் வெளிச்சத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். திருச்சிக்கு மதுரைக்கும் தப்பித்தவறி அத்தை பிள்ளையின் கல்யாணத்திற்கு வந்து விட்டால் உள்ளூர் ஆசாமியைப்பார்த்து இங்கு ஓலா , ஊபர் எல்லாம் கூட உண்டா என்று ஏதோ வேற்று கிரகத்திற்கு வந்துவிட்டவர்கள் போல பிதற்றுவதைக்காண அசாத்திய பொறுமை வேண்டும். 1952க்குப்பின் நான் இங்கெல்லாம் வரவே இல்லை; இங்க FLAT டே இல்லையே என்று மேலமாசி வீதியில் அல்லது திருச்சி NSC BOSE வீதியில் பராக்கு பார்த்துக்கொண்டு இருக்கும் சென்னை தம்பதியை பார்த்ததும் 100 மல்லிகைப்பூவை 30/- ரூபாய்க்கு விற்று மிளகாய் அரைத்து விடுவான்   FLAT டேஇல்லாத ஊர்க்காரன்.

அப்படி தப்பி தவறி வந்துவிட்டவன் இந்த ஊரில் இன்னும் 6 மணி நேரம் இருக்கணுமா என்று அங்கலாய்ப்பான். அவனுக்கு திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு ஒன்றே சொர்க்கம் அந்த கூட்டமும் ஓட்டமும் வேறு எங்கும் இல்லை .      இதுதான் சென்னையன் பார்வை.

பேரா. ராமன்

 

                                                    

1 comment:

  1. Though living in Chennai is a little bit costly , if you select a place like Nanganallur, Tambaramand Perungalathur you can survive with little earnings.If you travel in electric train to go to office while coming back you can buy vegetables outside the railway station. All vegetables will look afresh because they apply a bit of oil on fruits and some vegetables.
    If you want snacks you can go to Grand sweets and Adayar Ananda Bhavan. Wherever you are , you can order for tiffin and meals through online. .
    But Chennai has its own aroma that emanates from Coovum.
    K.Venkataraman

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...