Tuesday, April 15, 2025

LET US PERCEIVE THE SONG – 18

 LET US PERCEIVE THE SONG – 18

பாடலை உணர்வோம் -18

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் -1965] பஞ்சு அருணாச்சலம், எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ் , சுசிலா

இப்பாடல் பற்றி பேச ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் என்றால் பலர் நகைக்கக்கூடும் . ஏன் எனில் நம்மவர்க்கு எல்லாப்பாடல்களும் -இதென்ன பெரிய ...ஆ என்று அலட்சியப்பார்வை கொள்வதுதான் இயல்பு. நுணுக்கம் அறிந்தவன் துணிச்சல் கொள்ள தயங்குவான், இல்லாதோர் எதையும் துச்சமாக நினைப்பது  மட்டும் அல்ல , திரைப்படப்பாடல்கள் என்றாலே -உதவாக்கரை குப்பை என ஒரு எண்ணம். போகட்டும்  இந்தக்கேள்விக்கு ,விடை தேடுங்கள் . "இந்த 'பொன்னெழில் பூத்தது பாடல்' மேடை நிகழ்வுகளில், சூப்பர் சிங்கர் தேர்வு சுற்றுகளில் பார்க்க முடிகிறாதா? ஏன் இசைக்குழுவினர் தொடுவதற்கே அஞ்சும் நுணுக்கங்கள் நிறைந்த அமைப்பு . சொற்கள் ஒவ்வொன்றிலும் பாவம் காட்டும் குழைவுகள் . சிவகாமி, சிவகாமி என்றழைக்கும் பொழுது இரண்டு சொற்களிலும் மிக நுண் வேறுபாடு

சிவ -காமி என துவங்கி உடனேயே விரைந்து சிவ காமி என்றழைக்க நாயகி 'உன்னைப்பார்த்துவிட்டேன் என்பதைப்போல ஓ ஒ ஓ ஓ ஓ என பதில் குரல் கொடுக்க உடனே கொத்தாக இழையும் வயலின்கள் ஒலி யில் ஒரு சோகம் வழிய, அங்கேயே மெல்லிசை மன்னர் உணர்த்துகிறார் -இது ஒரு சோகப்பாடல் , டூயட் அல்ல என்று.. ஆம் இது சோகம் தாம்.

 தொலைந்து போன பொருள் கிடைத்தால் தடவித்தடவி பார்க்கும் மனித மனம், இப்போது மீண்டும் கண்ட      துணையை நேரடியாக கேள்விகளால் விடைபெற முயலுவதே பாடல்.

நீ எங்கே போனாய்? என்ற  கேள்வியை சொல்லும் ஓசையும் இலக்கிய நயம்பட கேட்கும் பாங்கினையும் அதே உணர்வு மங்காமல் செறிந்த இலக்கியச்செழுமையுடன் நாயகியின் பதில் இரண்டும் தரும் உன்னத உணர்வே இப்பாடலின்  சிறப்பு.

நான் விளக்க வேண்டிய அம்சங்களை நீங்கள் உணரும் படி எளிதாக்க பாடலின் இனிமை மற்றும் நயம் மேம்பட பிரித்து விளக்கலாம் என்றெண்ணுகிறேன் . எனவே நாயகனின் உள்ளக்குமுறல் வினா வடிவில்  தோன்ற , நாயகியின் விடை விளக்கம் நிறைந்த மென்மையின் செறிவாக அமைந்த பாடல் .

நீ எங்கேபோனாய் , உன்னைக்காணவில்லையே , எங்கெல்லாம் தேடுவது என்ற கருத்தை மன்னவர் கேட்பின்?

அதுதான் இங்கே நாம் சந்திக்கும் இலக்கிய நயம். அவை வினாக்கள் என்பதால் முதலில் அவற்றை வரிசைப்படி தொடுத்து பாடலில் உள்ள சொற்களில் காண்போம்

வினா 1

என் மன தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் சொல் [*]

வினா 2

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு எண்ணத்தை சொன்னவன் வாடு கிறேன்

 எண்ணத்தை சொன்னவன் வாடு கிறேன்

வினா 3

உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் ,

 உன் பட் டுக்கை பட பாடுகிறேன்

வினா 4

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை  அள்ளிக்கொடுத்த பொன் மாடம் எங்கே

அள்ளிக்கொடுத்த பொன் மாடம் எங்கே

வினா 5

கிண்ணம் நிரம்பிய செங்கனி ச்சாருண்ண முன்வந்த செவ்வந்தி மாலை எங்கே   முன்வந்த செவ்வந்தி மாலை எங்கே . 

[ஒவ்வொரு கருத்தையும் பிரித்து தனி வினாவாக பார்க்க முனைகிறேன்; ஏன் எனில் நாயகி இவற்றை தனித்தனியே விளக்கி நான் எங்கும் போய்  விடவில்லை  இங்கு தான் உலவுகிறேன். நீயோ தூது வந்த இயற்கையின் குறியீடுகளையும் புரிந்துகொள்ளாமல் மலங்குகிறாய்  என்று நாயகியின் விளக்கம் பாடலின் இலக்கிய தரத்திற்கு கட்டியம் கூறுகிறது.] . அவள் என்ன சொல்கிறாள் ?

வினாக்களுக்கு மற்றும் விடை களுக்கு இடையே அவ்வப்போது பல்லவி வருகிறது. நான் அவற்றை இங்கே விளக்க முற்படவில்லை ஏன் எனில் பாடலின் சுவை இருவரின் இலக்கியத்தர உரையாடலில் இருப்பதை முன்னிலைப்படுத்தவே இந்த முயற்சி.

நாயகி தரும் முதல் விடையே அவள் இசைக்கும் பல்லவியில் இருந்தே துவங்குகிறது.

விடை 1

பல்லவி

பொன்னெழில் பூத்ததது தலைவா வா

வெண்  பனி தூவும் இறைவா வா    [

இவ்விடத்தில் மெல்லிசை மன்னரின் அதீத ஆளுமை இறை வா 'வா' என்று நீட்டாமல் 'வா'  என்று சடன் பிரேக் போட்டு நிறுத்தி நாயகியின் காதலின் பொங்கிவரும் உணர்வை காட்டியுள்ளார்]  இரண்டாம் முறை பாடும் பொது இறைவா வா என்று வா வை வா என்று நீட்டிப்பா வைத்துள்ளார்.

விடை 2

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

விடை 3

மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு 

[வண்டு  போல நான் பாடி வந்ததால் , இவளே வந்துவிட்டாள் , நாம் இங்கிருந்து அகல வேண்டும் என்று பூந்தென்றல் ஆடிக்கொண்டு போய் மறைந்ததே நீ காணவில்லையா [குறியீடுகளை உணரவில்லை நீ          என கிறாள்]

விளக்க முடியாதவற்றுக்கெல்லாம் விளக்கம் கேட்கிறாய் நீ என்பதாக நாயகி அடுத்த பகுதியில்

விடை 4

என்னுடல் என்பது உன்னுடல்  என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ?

ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நான் என்ன சொல்லு வதோ

விடை 5

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

உன் மன தோட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா வா [என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் என்றாயே இதோ இருக்கிறேன் என்கிறாள் ]

இரு மனம் இணைந்திட

என்றிருவரும் குதூகலிக்க பாடல் நிறைவடைகிறது.

தமிழ் திரை இசையில் இப்பாடலுக்கு இணையாக இன்னொரு பாடல் இல்லை என்பது அடியேனின் புரிதல். ஏன் என்றால் , இது சோகத்தில் துவங்கி சுகத்தில் சங்கமிக்கும் இருமன ஓட்டம் . இது போன்ற ஒரு மனோநிலையில் உழலும் ஆண் /பெண் பாத்திரங்களுக்கு ஒத்தியங்கும் ஒரு சந்த ஓட்டத்தில் பாடல் புனைவது எளிதன்று. ஆம் அடுக்கடுக்கான கேள்விகள் , ஈடுதரும் விளக்கங்களின் சுவையான சொல் வரிசையை இசையின் பரிமாணங்களில் அழகாக அமர்த்தி சீராக பயணிக்க வைத்தாரே மெல்லிசை மன்னர் அவரின் உழைப்பு இப்பாடலில் ஒவ்வொரு வினாடியிலும் பரிமளிக்க , பாடலை விமரிசிப்பது அத்துணை எளிதன்று. சரி இசை ஞானம் இல்லாத என் போன்றோர் விளக்குதல் குருடன் ராஜ விழி விழிக்க முயலுதலுக்கு  ஈடான ஒன்று -அறிவேன் . பாடலை உணர்வோம் என்றால் அதன் உள்ளார்ந்த நளினங் களை கோடிடா விட்டால் இது எடுத்த பணி யின் தீவிரத்தை உணராத அவலம் அன்றோ ?

இசைக்கூறுகள் கூட இப்பாடலில் இரு மாறுபட்ட அமைப்புகள் என்றே உணரலாம். ஆம் பாடலின் முற்பகுதியில் கருவிகள் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க உள்ளார்ந்த ஏக்கத்தின் வடிவாக இசையில் பேசுகிறார் எம் எஸ் வி அவர்கள் . இருவரின் குரல்களின் ஒலி எழுந்த பின் நிகழும் உள்ளத் திகைப்பு  வயலின் வீச்சாக கூட்டமாக தோன்றி சரிந்து மறைய , துவங்குகிறது ட்ரிபிள் காங்கோ, தபலா  வின் சீரான முழக்கம் . இம்மி விலகாமல் பாடலில் தொடர்ந்து பங்குகொள்ளும் ஒரே கருவி ஜோடி  அதுவே. அதாவது மொத்தப்பா டலின்  அனைத்து மாற்றங்களுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் லய  அமைப்பு -தீவிர இசை நுணுக்கத்தைக்  காட்டும் வெளிப்பாடு.

பாடலின் இரண்டாம் பகுதியில் [நாயகியின் பகுதி] இசைக்கருவிகள் அதிகமாக பங்களித்து காதலின் குதூகலத்தை காட்டும் துள்ளல் இசையாக, அக்கர்டியன், கிட்டார் , போங்கோ, குழல் பின்னி பிணைந்து    ஒலி க்க , பாடல் மகிழ்ச்சி கோலத்தில் பயணிக்க இருகுரல் இசையாக ஹம்மிங் ஒலியில் சங்கமித்து நிறைவேற நம் மனதில் மேகம் போல் மிதந்து நினைவைப்பீடிக்கும் பாடல் இது. இது போன்ற அமைப்பினுள் பாடல்கள் அமைவது துர்லபம் . எனவே ஊன்றி கேட்டு மகிழ்வீர் இப்பாடல் குறித்த வேறு சில விளக்கங்களை ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் பேச கேளுங்கள் . இணைப்பு கீழே

PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16x9 15 VILARI EXPLAINS

அன்பன் ராமன்

1 comment:

  1. Excellent analysis of the out of the world song of MSV. As you have rightly said, one needs extraordinary courage to explain this song !
    In the first place he gets sucked into the song the moment he sits to write !! How on earth is it possible for him to look closely at the nuances to analyse ? Till date Iam awe stuck listening to the song and yet to come out of the emotional bond. Thanks for your excellent write up gathering courage to venture into such a risk.

    ReplyDelete

CAPACITY BUILDING

 CAPACITY BUILDING Preamble: Capacity building is a positive effort of improving the functional capabilities of   individuals / groups /...