Wednesday, April 16, 2025

DIRECTOR T PRAKASH RAO

 DIRECTOR  T  PRAKASH RAO

இயக்குனர் டி பிரகாஷ் ராவ்

ஆந்திர மாநிலத்தவர் . 1950 களிலேயே இயக்குனராக அறியப்பட்டவர் , ஒளிப்பதிவு ஆசான் கமல் கோஷ் இவருக்கு நல்ல பரிச்சயம் , அதுவே வீனஸ் படக்கம்பெனியில் திரு ராவ் அவர்களுடன் கமல் கோஷ் , பின்னர் வின்சென்ட் , பின்னர் சுந்தரம் [AV -PNS ] என்று தொடர்ந்து ஸ்ரீதர் , AV -PNS , NM சங்கர் என்று பின்னாளில் சித்ராலயா பட நிறுவனம் உருவாயிற்று. . திரு பிரகாஷ் ராவ் அவர்கள் , ஹிந்தி, தெலுங்கு , தமிழ் மூன்றிலும் இயக்குனராக வலம் வந்தவர். ;தமிழில் குறைந்த எண்ணிக்கைப்படங்களே அவரது இயக்கத்தில் மலர்ந்தவை அவற்றில் பல வெற்றி படங்களே. இவருக்கும் பாடல் ராசி அதிகம். அற்புதமான பாடல்களை இயக்கிய பெருமைக்குரியவர். . பலரும் இவை இவரது இயக்கத்திலா வந்தவை? என்று வியப்படையக்கூடும்.  

திரு சலபதி ராவ் இசையில்  அமர  தீபம் படத்தில் கே பி காமாட்சி சுந்தரம் எழுதிய புகழ் பெற்ற " தேன் உண்ணும் வண்டு" பாட,ல், சிவாஜி கணேசன்- சாவித்ரி பங்கு கொண்ட காதல் காட்சி. வெகு நேர்த்தியான ராக அமைப்பில், இயல்பாக பயணிக்கும் ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சி. இருவரும் காதலர்கள் எனினும் தொடாமல் விலகியே நின்று உணர்வினை வெளிப்படுற\த்துவதையும், சாவித்ரியின் நடன திறமையையும் கண் அசைவு நளினங்களையும் கண்டு /கேட்டு ரசிக்க நல்ல வாய்ப்பு. இறுதியில் இருவரும் உணர்ச்சி மிகுதியால் கை பற்றினாலும் , ஐயோ என்று கையை உதறி விலகுவதையும் இன்றைய தலை முறை பார்த்தால் என்ன சொல்லும்? நான் யோசித்துப்பார்க்கிறேன் விடை இல்லை. பி சுசீலா மற்றும் எம் ராஜா வழங்கிய மனம்  ஈர்க்கும் பாடல் இது.. இணைப்பு இதோ 

THEN UNNUM VANDU  AMARA DEEPAM  1956  kp kaamatchi sundaram  T CHALAPATHI RAO, am raja p suseela 

https://www.google.com/search?q=then+unnum+vandu+video+song+download&oq=then+unnum+vandu+&gs_lcrp=EgZjaHJvbWUqCAgAEEUYJxg7MggIABBFGCcYOzIMCAEQRRgTGBYYHhg5MgkIAhAAGBMYgAQyCQgDEAAYExiABDIJCAQQABgTGIAEMgcIBRAAGO8FMgcIBhAAGO8FMgoIBxAAGIAEGKIE0gEIOTMxNWowajeoAgCwAgA&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:5aac9a7c,vid:CKUHsPAT6kM,st:0  

  

ஓடம் நதியினிலே [காத்திருந்த கண்கள் -1962] கண்ணதாசன், விஸ்வநாதன் -ராமூர்த்தி , குரல் சீர்காழி கோவிந்தராஜன்

இரண்டு /மூன்று கருவிகள் மட்டுமே உபயோகித்து , உணர்ச்சிபொங்க பாடப்பட்ட பாடல் , இதற்கு நிகர் இதே சூழலுக்கு வேறு பாடல் உண்டோ ? அறியேன். இவற்றை எல்லாம் கடந்து , ஹிந்தி இசையமைப்பாளர் திரு நவுஷத் மனம் கவர்ந்த தமிழ் பாடல்களில் இப்பாடலுக்கு ஒரு விசேஷ இடம் உண்டு . அமைதியான ஆழமான சோகம் ஒலிக்கும் பாடல் , இணைப்பு இதோ

KAATHIRUNDHA KANGAL 1962 KD VR  ODAM NADHIYINILE  SG

https://www.google.com/search?q=ODAM+NADHINYINILE+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=9eaf1fef6bf05fb2&sxsrf=AHTn8zqmarWukC1rddcL_PxPD3C9U9NBIg%3A1744541584032&ei=kJf7Z6bZAfPE4-EP3rOagQY&ved=0ahUKEwim4aXr69SMAxVz4jgGHd6ZJmAQ4dUDCBA&oq=ODAM+NADHINYINILE+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiHU9EQU0gTkFESElOWUlOSUxFIFZJREVPIFNPTkcgSMxsUABYqlhwAXgBkAEAmAGvAqABriuqAQkwLjE4LjEwLjG4AQzIAQD4AQGYAhCgArUUqAIUwgIHECMYJxjqAsICEBA 

 ttps://www.google.com/search?q=then+unnum+vandu+video+song+download&newwindow=1&sca_esv=9eaf1fef6bf05fb2&sxsrf=AHTn8zpCqEfEaqXI5hdyY6CvVfkscWyhsA%3A1744540522569&ei=apP7Z_awIuGL4-

யாரடி நீ மோஹினி [உத்தம புத்திரன் -1956] கு மா பாலசுப்ரமணியன், ஜி ராமநாதன் , டி எம் எஸ், சுசீலா, ஜமுனாராணி ஜிக்கி

ஒரு குதூகலப்படல், மன்னனே சுகபோகத்தில் திளைக்கும் ஒரு அரசாங்கம் , கூத்து கும்மாளம், மேற்கத்திய இசை, தாளம் , லயம் மற்றும் நளினம் ஜி ராமநாதன் இசையில் ,வேவ்வேறு குரல்களின் ஆதிக்கம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் , அவ்வப்போது மாறும் நடை மேற்கத்திய இசை வடிவங்கள் மாறி மாறி வர கேட்பாரை வசீகரித்து முன்னேற ஒரு கட்டத்தில் அனைவரும் இசையில் கட்டுண்டு உற்சாகமாய் தாளம் போட , சிவாஜி கணேசனின் பிரத்தியேக நடன அசைவு, தாள முறை வேறுபாடு அனைத்திலும் புதுமை. ஜி ராமநாதனின் அதீத கற்பனைத்திறனுக்கு இப்பாடல் ஒன்றே சாட்சி . எத்துணை கலைஞர்கள் ஒரே பாடலில் [நாயகி நடனக்கலைஞர்  ஹெலன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற விறுவிறுப்பான பாடல் . கண்டு மகிழ இணைப்பு இதோ

Yaradi nee mohini –uthaa puthiran1958  KU MAA, G R  TMS,SUSEELA,JIKI JAMUNA RANI

https://www.google.com/search?q=uthama+puthiran+movieyaaradi+nee+mohini+song+download&newwindow=1&sca_esv=9eaf1fef6bf05fb2&sxsrf=AHTn8zqEG3-4VUeVxPNvXXUGokW9JUJHAg%3A1744540906002&ei=6ZT7Z5jvPMqN4-EP6PS8yQk&oq=uthama+puthiran+movieyaaradi+nee+mohini+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiLXV0aGFtYSBwdXRoaXJhbiBtb3ZpZXlhYXJhZGkgbmVlIG1vaGluaSBzb25nICoCCAIyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABG

என்னை எடுத்து தன்னை கொடுத்து [படகோட்டி -1964] வாலி, விஸ்வநாதன் -ராமமூர்த்தி , டி எம் எஸ், பி சுசீலா

1960 களில் சோகப்பாடல்கள் பல இடம் பெற்றன. அவற்றுள் இப்பாடல் தனி முத்திரை கொண்ட அமைப்பு. ஆம், ஒவ்வொரு சொல்லும், குரலும் , மீனவ இனத்தவரின் கடலோர இசை ஒலிகள் மற்றும் எம் எஸ் வி அவர்களே உச்சஸ்தாயியில் எழுப்பும் சோக   ஒலி யின் அதீத தாக்கம் எதையும் சொல்லாமல் விடமுடியாது. தமிழிசை சங்கம் திரு லக்ஷ்மணன் செட்டியார் சொன்னது , “இப்பாடல் பதிவின் பொது எம் எஸ் வி பாடிய உரத்த குரலின் மனதைப்பிழியும் சோகம் சொல்லில் அடங்காது”..

பாடல் நெடுகிலும் போனவன் போனாண்டி மற்றும் வந்தாலும் வருவாண்டி ஹோ ஹோய் ஹோய் இரண்டும் முறையே பிரிவையும் நம்பிக்கையையும் விதைத்துக்கொண்டே பாடல் முன்னேறுகிறது

.வாலியின் கவித்துவ திறமைக்கு வடிகால் படகோட்டி எனில் மிகை அன்று. பாடலின் சொல் சோகம் , குரல் சோகம் , இசைக்கோகம்,   பின்னணியில் படர்ந்து பரவும் கடற்கரை ஓலம் அனைத்தையும் நன்கு ஊன்றி பின் தொடருங்கள் .பாடலின் தாக்கம் வெளிப்படும் . இணைப்பு இதோ

ENNAI EDUTHTHU PADAGOTTI 1064 VALI , V R PS , MSV

https://www.google.com/search?q=padagotti+movieennai+eduththu+video+song+download&newwindow=1&sca_esv=9eaf1fef6bf05fb2&sxsrf=AHTn8zq7Fhw773UVEVDd9OVXx1l0-YRutg%3A1744541975974&ei=F5n7Z7CVO6id4-EP-uWS0AY&oq=padagotti+movieENNAI+EDUTHTHU+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKXBhZGFnb3R0aSBtb3ZpZUVOTkFJIEVEVVRIVEhVIFZJREVPIFNPTkcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAE

இப்பாடல்களை திரையில் நமக்களித்த இயக்குனர் பிரகாஷ் ராவ் அவர்களின் செயல் திறனை நாம் உணரலாம்

நன்றி

 அன்பன் ராமன்

1 comment:

RENGA VENDAAM -6

  RENGA VENDAAM -6 ரெங்கா வேண்டாம்-6 காலை   9.40 , இப்போது ரெங்கராஜு   வேறொரு   கோலத்தில்,    நீண்ட பாகவதர் கிராப் கழுத்தில் காவி ...