Wednesday, November 23, 2022

ஓ --மாம்பழத்து வண்டு

  --மாம்பழத்து வண்டு

மன்னிக்கவும் இது பாடல் அல்ல, தகவல்.

மாம்பழத்தினுள் வண்டு எப்படி வந்தது? பலர் இதை ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. வண்டு வந்த பழம் , கிளி கொத்திய கனி என்றெல்லாம் உவகை கொண்டு அவ்வகை பழங்களை மகிழ்வுடன் சுவைப்பதைகாணலாம். வண்டு வந்த பழம் பற்றிய விளக்கங்கள் சில உண்டு.

1 இறை மாட்சிமையின் விந்தை

2 நல்ல பழமாக பார்த்து வந்து வண்டு குடியேறும்  

3 மாவடு நிலையிலேயே வண்டு நுழைந்திருக்கும். [ஆனால் பழம் சுவையாக இருக்கும் ஏனெனில் வண்டு இருப்பதோ மாங்கொட்டையின் உள்ளே தான் -என்றொரு சமாதானம் கொள்வது ] இன்னோரன்ன பிற விளக்கங்கள் உலவுவதை நாம் அறிவோம்.

மாம்பழம்--வண்டு  தொடர்பு உயிரிகளின் பரிணாமத்தில் ஒரு பின்னிப்பிணைந்த நிகழ்வு. ஆம் குறிப்பிட்ட வண்டு -மாம்பழ வகை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை. அந்த வகை வண்டு உதவி புரிந்தால் மாமரத்தில் மகரந்த சேர்க்கை நடைபெறும். அதே நேரத்தில் அந்த வண்டினம் தொடர்ந்து உயிர் வாழ குறிப்பிட்ட மாமர வகை அவசியம் [ நீ இன்றி நானில்லை   நானி ன்றி நீ . இல்லையே -வகை உறவு].

மகரந்த சேர்க்கை நேரும் போது பெண் வண்டு முட்டையினை மாவின் காய் வளரும் பகுதிக்குள் வைத்து பின்னர் காய் வளர்ந்து கனியாகும் பொழுது மாம்பழத்தினுள் இருந்து வெளியேறும் வண்டுதனைக்காண்கிறோம். இது ஒரு விளக்கம்

பிறிதொரு விளக்கம்

இளம் மாவடுவில் தாய் வண்டு நுண் துளை இட்டு அதன் வழியே முட்டைதனை செலுத்தி பின்னர் வண்டாக வெளி வருகிறது   என்போரும் உளர். . 

Sternochetus mangiferae  என்பது வண்டின வகையின் பெயர்

இன்னோர் பழ-பூச்சி உறவு அத்திப்பழத்தில் நிகழ்கிறது. தற்காலத்தில் FIG எனும் அத்திப்பழத்தில் பூச்சிகளே தோன்றாதவாறு உருவாக்கப்படும் பழங்களே விற்பனை செய்யப்படுகிறது..இவற்றில் தோன்றும் ficin எனும் பூச்சிக்கொல்லி  சுரப்பு பூச்சிகள் வருவதை தடுக்கின்றன.. இதனால் உண்பதற்கு ஆரோக்கியமான பூச்சிகள் இல்லாத அத்திப்பழங்கள் சூப்பர்  மார்க்கெட்   விற்பனைக்கூடங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் மாம்பழம் போன்றே அத்தி -மற்றும் பூச்சி உறவு நீண்ட தொடர்புடையது.

பூச்சியின் பெயர் : Blastophago orientalis                                     

அத்திப்பூவில் ஏரளமான முட்டைகள் விதைக்கப்பெற்று அவை இளம் வண்டுகளாகவளர்ந்து உருப்பெறுகின்றன. அவை வளரும் இடை நிலை "லார்வா" எனும் புழு போன்ற வடிவம் அத்திப்பழத்தில் புழுக்கள் என்பதாக பேசப்படுகிறது. அத்தி பூத்தாற்போல் எனும் சொல் வழக்கு     தவறானது. அத்திக்கு பூ உண்டு. ஆனால் அதுவும் காயைப்போன்றே இருப்பதனால் அத்தியில் பூ இல்லை  என்ற தவறான கருத்து நிலவுகிறது. அத்திப்பழத்தினுள் ஊர்ந்து திரியும் புழுக்கள் அப்பழங்களின் பொருளாதார மாண்பை முற்றிலும் குலைப்பதால், தீவிர ஆராய்ச்சியின் உதவியால் ficin எனும் வேதி உற்பத்தி மூலம் தரமானபழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் உருவாக்கப்படுகின்றன.   

பேரா ராமன்

1 comment:

  1. There are number of insects that that lay their eggs into the body of caterpillar and after metamorphosis they come out of the body of caterpillar. Thus insect like Ichnumonids act as biological control by killing the pests like Lepidoptera caterpillars.
    Stepsistera another insect order that survive inside the haemolymph of bees and wasps. The females are leg less and eyeless whereas males have well developed compound eyes.
    This group is a good topic for doing research
    K.Venkataraman

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...