Saturday, November 5, 2022

சிறப்பு நேர்காணல்

 சிறப்பு நேர்காணல்

பல நேரங்களில் சில குறிப்பிட்ட கோணங்களில் கேள்வி கேட்பது நேர் கோணல்  மன்னிக்கவும் நேர்  காணல் என்று பெயர் சூட்டப்பெறும் .

இதில் வரும் கருத்துகள் கற்பனையே, இறந்தவரையோ இருப்பவரையோ , இறக்கப்போகும் மாந்தரையோ,  பிறக்க இருக்கும் குழவியையோ, இறக்க மறுக்கும் கிழவியையோ,  நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல. இதில் இடம் பெறும் கருத்துக்கள் சொன்னவரின் பார்வையே அல்லாமல் எமது பார்வை அன்று. இதனால் விளையும் கருத்துமோதல்களுக்கு எந்த வகையிலும்  நாம் பொறுப்பேற்க இயலாது என்று பொறுப்பில்லாமல் எழுதுவதன் பெயர் "பொறுப்புத்துறப்பு" இந்த டைட்டிலை 5 முறை காட்டிய பின்னரே நேர்காணல் துவங்கும்.

நேர்காணப்படுபவர் ஒரு கூர் மதியாளர்; நேர்காண்பவருக்கு அவ்வகை நிர்ப்பந்தங்கள்  இல்லை.

    நேர்காணல் துவங்குகிறது

பேட்டிகாண்பவர் : வாங்க சார் எப்படி இருக்கீங்க

பேட்டி தருபவர் : நான் வந்து 10 நிமிடம் ஆயிற்று , இன்னும் என்ன வாங்க சார்.         

பே . கா    : ஹி ஹீ ; அது மரபு சார்.

பே . : எந்த மரபையும் எதிர்ப்பீங்களே, இது என்ன மரபு ?

பே . கா : அது சித்தாந்தம்   சார்       

பே . : அப்ப இது வேதாந்தமா  ? 

பே . கா சார் மொழித்திணிப்பை பற்றி ..

பே . த: இத பாருங்க பெரிய விஷயத்தை சின்ன இடத்துல வைக்கணும் என்றால் திணிச்சா தான் முடியும்.

பே . கா தமிழ் நாடு சின்ன இடமா சார் ?

பே . த:: பெரிய இடம் தான். ஆனா நீங்கதான் திணிக்கிறது பற்றி கேட்டிங்க ;

 அதுக்கு பதில் சொன்னேன்

பே . கா    : சார் மொழித்திணிப்பு பற்றிக்கேட்டேன்.

பே . த:: புரியல்ல னு வாத்யார் நினைத்தால் திணிக்க தான் செய்வார். கணக்கு வாத்யார் கிட்ட கேளுங்க , இவனுக்கு கணக்கு வரமாட்டேங்குது அதனாலே திணிக்க வேண்டியிருக்கு னு சொல்லுவார் . எல்லாப்பாடமும் அப்பிடித்தான் சார். சரி நீங்க காலேஜ் ல என்ன மேஜர் படிச்சீங்க ?

பே . கா    : ஆங்கிலம்

பே . த: அப்ப உங்க ஆங்கிலப்புலமை அதிகம் னு எடுத்துக்கலாமா ?

பே . கா    : அப்பிடி இல்ல கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆங்கிலம் படித்தேன்

பே . த: சோ ,உங்களுக்கு ஷெல்லி , கீட்ஸ் , ஷேக்ஸ்பியர் , ஜேன் ஆஸ்டின் எல்லாம் நல்லா தெரியும்.

பே . கா    : நல்லானு சொல்ல முடியாது,

பே . த: ஆனாலும் பாஸ்.     எப்பிடி.?

பே . கா    : வாத்யார் கொஞ்சம் கடுமையா உழைச்சு சொல்லிக்கொடுத்தார்

பே . த: அப்படீன்னா வாத்யார் ஆங்கிலம் எனும் பாடத்தை உங்கள்மீது திணித்தார் --சரிதானே ?

பே . கா    திணித்தார் னு சொல்லமுடியாது ஆனால் புதிய விதி வாயிலாக பயிற்சி தந்து மொழி அறிவை  உருவாக்கப்  பாடு பட்டார்

பே . த: கற்றுத்தரும் முயற்சி 'திணிப்பது' அல்ல திணிப்பு என்பது மாயை என்று புரிகிறதா ? அது சரி, ஒரு தகவல் உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஏன் "திணிப்பு திணிப்பு " னு அலரறீங்க ?. ஜெர்மனி க்கு போகணும் னா அந்த மொழி தெரிஞ்சுக்கணும் , ரஷ்யா போக ரஷ்யன் பேச தெரியணும் விசா வாங்கப்போனாலே இதை எல்லாம் சொல்லுவாங்களே. ஹை கமிஷன் எதிர்ல கோஷம் போடுவீங்களா? இதல்லாம் மொழித்திணிப்பு ன்னுசொல்வீங்களா ?

பே . கா    சார் அது நாம தேடிப்போறது. அது எப்படி திணிப்பாகும். ?

பே . த: அங்கெ என்னத்த தேடிப்போறீங்க ?

பே . கா    உயர் கல்வி, வேலை இந்தமாதிரி முன்னேற்றங்களுக்காக

பே . த: அதாவது உருப்பட வழி னு தானே?

பே . கா    ஆமா சார் , மேம்பாட்டிற்கு

பே . த: மேம்படணும் னா மொழி கத்துக்கணும் இல்லையா ?

பே . கா    இப்போது விழிக்கிறார்

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே” என்று எங்கோ ஒலிக்கிறது

 இப்போது,  யார் கேட்பவர்,  யார் பதில் தருபவர்            என்று குழம்பும் அளவிற்குப்போய் , நேர்காணல் தத்தளித்து முனகிக்கொண்டிருக்க நேர்காணல் எடுத்தவர், இவனை கலந்துரையாடலில் ‘நம்' ஆட்களை வைத்துக்கூச்சல் போட்டு தான் அடக்க முடியும் போல் இருக்கிறதே என்று அரண்டு போய் பெரிய கும்பிடுபோட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்

பேரா . ராமன்

2 comments:

  1. சின்ன மூளைக்கு எல்லாமே திணிப்புதான் .மூளை உள்ளவனுக்கு எதைக்கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வான் . நேர் காணல் நிகழ்ச்சிகளில் அவர்கள் எண்ணப்படி பேசுபவர்களைத்தான் அழைப்பார்கள்.
    மாற்று எண்ணம் கொண்டவர்களுக்கு நேரம் அதிகம் கொடுக்கப்படமாட்டாது.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. அரசியல்வாதிகள் 'மொழித்திணிப்பு' என்பதை ஒரு survival technique ஆகத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை சற்று நகைச்சுவையுடன் போட்டு உடைத்திருக்கிறார் ஆசிரியர். அரசியல் பிழைப்பாக இருக்கும் வரை இந்த நாடகம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...