NEELAKANTA IYER
நீலகண்ட ஐயர்
வெள்ளை வெளேர் என்ற வேட்டி -நீலம் போட்டு , தட்டி உலர்த்தி அணிந்து கொண்டு சைக்கிளி ல் மெல்ல தெருவெங்கும் அலைந்து காலை, இரவு டிபன் , மாலை சுண்டல் வடை ,போளி என்று விற்பனை செய்து ஜீவனம் செய்பவர் நீல கண்ட ஐயர். அவரது வேட்டி யினால் சிலர் நீலம் கண்ட ஐயர் என்பார்கள். , அவர் சிரித்துக்கொள்வார். ஏன் மாமா நீலம் போடாம வேஷ்டியே கட்டிக்கமாட்டேங்களா என்றாள் ஒரு கல்லூரி மாணவி. நீ க ஐயர் சொன்னார் 'பளிச்சுனு இருந்தா தானே இவர்ட்ட டிபன் வாங்கிப்பாக்கலாம்னு தோணும் , அழுக்கும் பிசுக்குமா இருந்தா யாரும் கூப்பிடமாட்டா, தெருத்தெருவா அலைஞ்சு என்ன புண்ணியம் , வாங்கரவா வாங்கினா தானே காலட்சேபம் நடக்கும்.என்றார்"
கல்லூரி மாணவிக்கு புரியவில்லை
கதா காலட்சேபத்துக்கும், டிபன் விக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? குழம்பினாள்.
இதுதான் கால வித்யாசம். இந்தக்கால குழந்தைகளுக்கு பாதி சொற்கள் புரிவதில்லை, சினிமாவும் சீரியலும் அவர்களை ஒரு மாய உலகில் மிதக்க வைத்திருக்கிறது, உணவுகளில் கூட பிசா [அது பிசாசு ] பர்கர் என்ற வகைகளை சுவைப்பதும் தட்டை முறுக்கு வகைகளை புறக்கணிப்பதுமாக -பாஸ்ட் புட் , ஐஸ் கிரீம் இவற்றைத்தின்று உடல் ஊதி BIO ROLLER களாக அரை டவுசர் மாட்டிக்கொண்டு திரிகின்றனர். பெண்களும் சற்றும் மாறுபட்டவர் அல்லர்.அவர்கள் பாண்ட் சட்டை, நீண்ட வால் போன்ற பின்னலிடாத கூந்தல், பொட்டில்லாத நெற்றி என்று ஆண் பெண் பேதமின்றி இருக்கின்றனர் . அநேகம் பெண்கள் 10 வயது முதலே கண்ணாடி அணிந்தவர்கள்.
நீ க சொன்னார் "அம்மா கீரவடை சூடா இருக்கு . 2 தரட்டுமா என்றார்” என்னது -கீரவடையா? என்று முகம் சுரத்தில்லாமல் கேட்டாள் .
நீ.
க ஐயர் --"ஆமாம்மா
வைட்டமின் B வகைசத்துகளும், பரு
ப்பினால் ப்ரோடீன் செறிவும் உள்ளது. வளரும் பெண்கள்
நிச்சயம் சாப்பிடவேண்டியது என்றார். வேண்டாம் மாமா என்று ஓடி
விட்டாள். ஐயர்
சிரித்துக்கொண்டார்.
ஐயர் சிரித்ததை பெண்ணின் தாயார் ஜன்னல் வழியே பார்த்துவிட்டாள் . வேகமாக தெருவுக்கு வந்து என்ன சிரிப்பு வேண்டியிருக்கு, வடை வேண்டாம்னா போக வேண்டியது தானே என்று கொந்தளித்தாள். இப்போதும் ஐயர் சிரித்தார் ,அம்மாவுக்கு ஆத்திரம் அதிகமாகி ,வடவிக்கறவனுக்கு இவ்வளவு திமிரா என்றாள் “அம்மா கொஞ்சம் நிதானமா பேசுங்கோ” என்றார் ஐயர். அந்த அம்மா "நான் யார் தெரியுமா" ஸ்கூல் டீச்சர் அதுவும் சைன்ஸ் டீச்சர் என்று குதித்தாள். அதனாலே என்னம்மா? கீரை வடைல நல்ல ப்ரோடீன், பீ காம்ப்ளெக்ஸ் மற்றும் நார்ச்சத்து இருக்குனு சொன்னேன் " என்றார்.
ஓ நீர் பெரிய சைன்டிஸ்ட் ப்ரோடீன் பீ காம்ப்ளெக்ஸ் அது இது னு அள்ளிவிட்டு வடைய எங்க தலைல கட்டப்பாக்கறீராக்கும் , வேறிடம் பாரும். என்றாள் . மேலும் என் பொண்ணு பீ எஸ் ஸி நியூட்ரிஷன் படிக்கறா என்று பெரிய லெக்சர் அடிக்க கூட்டம் கூடி விட்டது.
ஐயர் விடுவதாக இல்லை , நியூட்ரிஷன் படிக்கறவாளுக்கு கீரைல என்னென்ன இருக்குனு தெரிஞ்சிருக்குமே அதுவும் நம்மள விட நிறையவே தெரிஞ்சிருக்கும் என்று [மறைமுகமாக சும்மா கத்தாதே] சொன்னார். "கவிதா இங்கே வா" என்று தன் பெண்ணை க்கூப்பிட்டாள் . "இந்த ஆளு என்னவோ அளக்கறாரே நீ கொஞ்சம் பதில் சொல்லு" என்றாள் . ஐயர் " பீ காபிளெக்ஸ் பத்திசொல்லிண்டிருந்தேன்" என்றார். உடனே டீச்சர் "நீ கொஞ்சம் சொல்லேண்டி" என்றாள் .
அம்மா-- பீ காம்ப்ளெக்ஸ் பத்தி படிச்சிருப்பாயே ? என்றார்ஐயர் .
பெண் பேந்தப்பேந்த விழித்தாள், டீச்சர் முகம் சாணி உருண்டை போல் கறுத்து , வெட்கம் பிடுங்கித்தின்றது. கூட்டத்தில் இருந்த நர்ஸ் ஓமனா “ஈ வடா , வல்லிய மெடிசனாணு, ஒரு 6 எண்ணம் கொடுங்க” என்று வாங்கிக்கொண்டு நர்சிங் ஹோமில் இருந்த பெண்ணிடம் டெய்லி ரண்டு ரண்டு சாப்பிட்டெங்கில் நிங்கள்க்கு புஷ்டி ண்டாகும் என்றாள்.
மீண்டும் ஓடி வந்து தனக்கு 3 வடை வாங்கிக்கொண்டாள். டீச்சர் பேயறைந்த மாதிரி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் . நர்ஸ் “சாமி நிங்கள்க்கு பீ கோம்பளக்ஸ் ஞானம் எங்ஙன ண்டாயது ?
ஐயர் “நான் மைசூர் CFTRI ல எல்லா டெபார்ட்மெண்டுலயும் 30 வருஷம் , FOOD FORMULATION ல 8 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆகி இப்போ சும்மா இருக்கக்கூடாதுனு QUALITY ITEMS செஞ்சு நியாயமா விக்கறேன்”.
கூட்டம் மிரண்டு அமைதியானது. "துள்ளிக்குதித்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் என்று "என ரேடியோ வில் பாட்டு ஒலிக்க , சாணி உருண்டை அவமானத்தால் குன்றியது. மீண்டும் இப்போது ஐயர் சிரித்தார் .
K.RAMAN
ஓய் நீலகண்ட ஐயரே
ReplyDeleteகீரை வடைன்னு சொன்னீர் . ஆனால் அரைக்கீரையா இல்லை தண்டுக்கீரையான்னு சொல்லலையே.
சரி சரி . நான் கீரை வடைக்கு பேமஸ் திருச்சி அஜந்தா ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன்்அது மாதிரி இருக்குமா ஐயரே?
வெங்கட்ராமன்
Correct me if I am wrong, Keerai vadai is made of 'Mullumurungai' leaves, rt?
ReplyDelete