Thursday, January 12, 2023

SPEED POST

 SPEED POST

ஸ்பீட் போஸ்ட்

ஒரு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆபீஸ் புறப்பட்ட ராமசாமி போஸ்ட்மேன் கொண்டுவந்த ஸ்பீட் போஸ்ட் கடிதத்தைப்பிரித்துப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தான். அது வேதாந்தம் கஸ்தூரி ரெங்கனை பரீட்சை எழுதச்சொல்லி ஒரு படிவத்தையும் ரூ 500/- செலுத்தியிருந்த ரசீதையும் இணைத்திருந்தான் பணம் தரவேண்டாம் இந்த அப்ளிகேஷனை ஒரு நாளில் நிரப்பி சென்னை விலாசத்தில் உள்ள அலுவலகத்திற்கு போஸ்ட் ஆபீஸ் ரெஜிஸ்டர் செய்து அனுப்பவும் கூரியரில் அனுப்பக்கூடாது என்று தெரிவித்திருந்தான் பரீட்சையை கவனமாக சென்னை சென்று எழுதச்சொல் -இன்னின்ன பகுதிகளை படிக்கச்சொல் என்று தெரிவித்திருந்தான்.

அம்ஜம் -பரவால்லியே உடனே முனைஞ்சுட்டாரே என்றாள்.

"யாரைச்சொல்லறே" என்றான் கழுகு  

அவர்தான் மிஸ்டர் வித்யாச்சரி என்றாள் . என்ன வித்யாச்சாரியா ? -கழுகு. ஆமாம் வித்யா ஹஸ்பண்ட் வித்யாச்சரி தானே ?

அப்போ உன் கணக்குப்படி , நான் அம்புஜாச்சாரியா ? நன்னாருக்கு உன் குதர்க்கம் என்றான் ராமசாமி.

ராமசாமியின் லாஜிக் அம்புஜத்துக்கு தாங்கமுடியாத சிரிப்பை வரவழைத்தது . புடவைத்தலைப்பால் வாயை மூடிக்கொண்டு இடி இடியென்று பொங்கிப்பொங்கி சிரித்தாள் .

ஆபீஸ்க்கு கிளம்பிய கணவனை பை மிஸ்டர் அம்ஜாச்சாரி என்று கை  அசைத்தாள்..

ஆபிஸ் போன உடன் . ரெங்கனை , வரச்சொல்லி, எல்லா விவரமும் தெரிவித்தான் கழுகு.      ரெ     கை கூப்பி நன்றி தெரிவித்தான். சாயந்திரம் வீட்டுக்கு வா என்றான் ராமசாமி.

சொன்னபடியே ரெ ,கழுகு மாலையில் சந்தித்து நேரே அடையவளஞ்சானில்  ரயில்வே  உயர் அதிகாரியை வீட்டில் சந்திக்க போனார்கள். பால் விநியோகம் செய்து கொண்டிருந்த லாவண்யா வாங்க சாமி அம்மா வர்லியா என விசாரித்தாள் . அவளுக்கு பதில் சொல்லிவிட்டு அதிகாரியிடம் கடிதத்தை காட்டி பேசினர்.

அவர் சொன்னார் இது சென்ட்ரல் கவர்மெண்ட் எல்லாத்துக்கும் பொதுப்பரீட்சை. ஆங்கிலம்  ஹிந்தி கணக்கு பொது அறிவு எல்லாம் சோதிக்கப்படும். நீ நன்னா படி, நான் வேணும்னா கோச்சிங் தரேன் என்று 2 புத்தகங்களை தந்து அதில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதிப்பார். தினமும் மாலை 6.30 - 8 இங்கு வா நான் சொல்லித்தரேன் , ஈஸி யா வேலையைப்பிடிச்சுடலாம் , கவனமா படிச்சுக்கோ என்றார்.

இருவரும் நன்றி சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றனர். நேரே தாயார் சன்னதி போய் சேவித்துவிட்டு குங்குமம் மஞ்சள் காப்பு வாங்கிக்கொண்டு கவனமாக பொட்டலம் கட்டி வேதாந்தம் விலாசத்துக்கு நன்றி கடிதத்துடன் வைத்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டனர்.

ரெ மிக கவனமாக படித்து சிறப்பாக தயார் செய்து கொண்டான். இந்த 15 நாட்களில் இதுவரை சரியாக செயல் பட்டு வருகிறான் ரெ . இன்னும் 12 நாட்களில் சென்னையில் தேர்வு எழுத வேண்டும்.. காலம் கை கூடும் போது எல்லா முயற்சிகளும் வெற்றியைத்தரும் .

அன்பன் ராமன்   

1 comment:

  1. அம்ஜம் அம்ஜாச்சாரி
    வித்யா. வித்யாச்சாரி
    அப்போ
    லாவண்யா. லாவணயாச்சாரியா?

    ReplyDelete

COMPETENCE - IS IT A GIFT?

  COMPETENCE - IS IT A GIFT? Too much has been said and heard of it, but little has been understood by the learner-stage youth. There is a...