Monday, January 16, 2023

WHERE IS THE HORSE ?

 WHERE IS THE HORSE ?

எங்கே குதிரை?

இது என்ன குதிரை தேடல் என்கிறீர்களா?

போ , ஈரோடு அல்லது மணப்பாறை சந்தை யில் போய் குதிரை தேடு என்று முணுமுணுப்பது கேட்கிறது.     

 ஆனால் நாம் தேடும் குதிரை சந்தைப்பொருள் அல்ல.. பின் ஏன் எங்கே குதிரை என்று ஆரம்பிக்கிறாய்?.

ஐயோ , நான் ஆரம்பிக்கவில்லை,ஆரம்பித்தவர் ஒரு உயர்நிலை விஞ்ஞானி அதுவும் டெல்லி ஆசாமி - பெண் . ஆம் சாக்ஷாத் லேசர் வித்யாதான் குதிரை எங்கே என்று தேடுபவர். அவருக்கு எதற்கு குதிரை என்கிறீர்களா.? அது ஒரு பெரிய கதை.

10-01-2023 காலை 11.20 வித்யாவிற்கு    போன் PM O -PRINCIPAL  SECRETARY இடம் இருந்து.

மாலை 3.30 க்கு SOUTH BLOCK OFFICE க்கு வரணும் ஒரு முக்கியமான briefing , PM,  may பார்ட்டிசிபேட், PLEASE BE READY என்றது LADY வாய்ஸ்.. வாழ்வில் உடல் வியர்க்காத வித்யாவின் நெற்றிப்பொட்டில் இருபுறமும் முத்து முத்தாக வியர்வை அரும்பியது. உடனே கண்ணாடியில் பார்த்து ஐயோ இப்படி வியர்க்கிறதே என்ன ஆச்சு எனக்கு என்றுயோசித்தாள் . . . வென்று இயங்கினாள் . அடுத்த 40 நிமிடங்களில் முக்கியமான லேசர் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்த அனைத்து தகவல் களையும் திரட்டி விட்டாள் ,                3 முறை க்கு மேல் சரிபார்த்து வைத்துக்கொண்டு, நிம்மதியாக சாப்பிட கேன்டீன் போனாள்.  ஊழியர்கள் பலமொழிகளில் முணுமுணுத்தனர் -இன்னிக்கு மேடம் PM O மீட்டிங் போகப்போறாங்க, எவ்வளவு துருவினாலும் எதுவும் கசிய மாட்டேங்குது , மேடத்துக்கிட்ட கேக்கலாம்னா [ கேட்டா] -வேற வினையே வேணாம் , வேல போனாலும் போயிடும் - HIGH செக்யூரிட்டி LASER DEFENCE CHIEF ஆச்சே நம்ம மேடம் PMO அதிகாரிகளே மேடத்துகிட்ட நடுங்குவாங்க -நம்பெல்லாம் எம்மாத்திரம் -சத்தமில்லாம டீயக்குடிச்சிட்டு ஓடிருவோம் மேடம் பாக்கறதுக்குள்ள என்று முணுமுணுத்தனர் சில தமிழ் ஊழியர்கள்.

குறித்தபடி டாண் என்று 3.29 க்கு Principal  secretary   வந்துவிட 4 பேர் அடங்கிய கூட்டம் துவங்கியது. அது இந்தியாவில் முக்கிய ஊர்களில் நடக்க இருக்கும் G -20 பற்றியது. முக்கிய உலக தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய பெருமைகள் பற்றிய கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று PM விரும்புகிறார். தென்னிந்திய , குறிப்பாக தமிழக கலைகள் விரிவாக எடுத்துரைக்க நிகழ்ச்சிகள் அமைக்கப்பட விரும்புகிறார்.

அதற்கு நான் ஏன் என்று இழுத்தாள் வித்யா" அதை நீங்கள் PM கிட்டதான் கேக்கணும் என்றார்  Principal Secretary. இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே PM வந்து விட்டார். 3 நிமிடங்களில் G20 நாம் வெகு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் , உங்களுக்கு வேண்டிய எல்லா ஒத்துழைப்பும் [நிதி உள்பட] தாராளமாக    ழங்கப்படும்  முறையான ப்ரோபோசல் ஏற்பாடு செய்து 2 வாரத்தில் அனுப்புங்கள் 21ம் நாளில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று விளக்கினார். “நமஸ்தேஎன்று விடை பெற்றார்

நம்மை ஏன் அழைத்துள்ளனர் ? யோசித்துக்கொண்டிருக்கும் போதே SECRETARY சொன்னார் , "FOREIGN DIGNITARIES க்கு செக்யூரிட்டி ரொம்ப முக்கியம் அதனால நல்ல தேசிய உணர்வுள்ள கலைஞர்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சிகளை செய்யவேண்டும், no politicians என்று மினிஸ்ட்ரி முடிவாயிருக்கு அதுனால உண்மையான talent க்கு ஏற்பாடு பண்ணுங்க". நீங்க யாரையும்  பயன்படுத்திக்கலாம் so -GO AHEAD என்றார். வித்யா மனதில் ஒரு நல்ல ஐடியா உருவானது .

சரியாக 5.00 மணி ஆனதும் வீட்டிற்கு போய் வேதாந்தத்திடம் டிஸ்கஸ் செய்வதென தீர்மானித்தாள். 5.40 க்கு வீட்டிற்கு  வந்துவிட அடுத்த 12 நிமிடங்களில் வேதாந்தம் வந்தாயிற்று.

சீரங்கம் நம்பர் குடுங்கோ, ராமசாமி சார்ட்ட பேசணும் என்றாள் .என்ன நீயா? என்றான் வேதாந்தம். "உனக்கு அந்த அம்புஜம் கிட்டயே பேச வராது  .இந்த அழகுல ராமசாமிகிட்ட பேசப்போறியாக்கும் ". அட நீங்க ஒண்ணு , அம்புஜம் தான் மாமின்னு சொல்லிட்டா கொதறிப்புடுவா ;அவர  சார்னு  சொல்லி தப்பிச்சுடுவேன் என்று கண் சிமிட்டினாள்.

சரி எதுக்கு? என்றான் வேதாந்தம்.  ஆக்சுவலா குதிரை வாலி சுபத்ரா கிட்ட பேசணும். என்றாள் லேஸர் . “மடிசார் கட்டிண்டு கண்ணாடியில் திருப்பித்திருப்பி நின்னு நின்னு பாத்துக்கணுமாக்கும்” என்றான் வேதாந்தம். ஐயோ அதுக்கில்ல , வேற ஒரு முக்கியமான விஷயம் என்றாள்  லேஸர் .  குதிரை கிட்ட என்ன விஷயம் ? என்றான் ஆர்வம் மேலிட

ஐயோ -- YOU  IMPATIENT  IYENGAR , பேசிட்டு அப்புறமா சொல்றேனே என்று சிணுங்கி ராமசாமி நம்பரை வாங்கிவிட்டாள். வேதாந்தத்துக்கு ஏகப்பட்ட சஸ்பென்ஸ் -தலை வெடித்துவிடும்போல இருந்தது            லேசரா கொக்கா ?

தொடரும்   

அன்பன் ராமன்   

2 comments:

  1. வேதாந்தத்திற்கு மட்டுமல்ல எங்களுக்கும் தலை வெடித்துவிடும் போல் இருக்கிறது... சீக்கிரம் next episode plz

    ReplyDelete
  2. வித்யா குதிரை என்ன பண்ணப்போறது. தெரியலையே?
    வெங்கட்ராமன்

    ReplyDelete

EDUCATION AND SOME HURDLES -8

EDUCATION AND SOME HURDLES -8                     [Collective effort-6] TEACHING INVOLVES AUGMENTATION.-III It stands opportune to tel...