ரெங்கா ரெங்கா --2
மறுநாள் காலை க ரெ எதையோ பறிகொடுத்தவன் போல அலைந்து கொண்டிருந்தான் .
ராமசாமி ஏன்டா இப்பிடி இருக்க என்றார்.
க ரெ "இன்னும் டிக்கெட் வாங்கல என்று இழுத்தான். என்ன AC யா FIRST CLASS ஆ எதுல வாங்கப்போற , என்னமோ மலையை புரட்டப்போறமாதிரி யோஜனை பண்றயே , நான் அன்னிக்கே சொன்னேன் உனக்கு ஏற்பாடு பண்ணித்தரேன் னு நீ நம்ப மாட்ட , நல்லதுக்கே காலம் இல்லடா நம்பினார் கெடுவதில்லை ராமசாமியை நம்பிய எவரும் , நீ இப்படியே தடுமாறத்தான் லாயக்கு . மத்தியானம் 2.45 மணிக்கு வா ஒரு வேலை பண்ணப்போறன் அப்புறம் பாரு நான் யாருனு தெரிஞ்சுப்ப. அது வரைக்கும் உங்க செக் ஷன் ல வேலையை ஒழுங்கப்பாரு , போயிட்டு வா என்று அனுப்பினார். க ரெ ஓடினான் புதுச்செருப்புடன் .
கேன்டீனில் கேப்ரியல் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நைசாக பக்கத்தில் போய் Good Morning என்று வேலையை துவக்கினார் ராமசாமி . என்னா ராம் சாமி எப்ப்டி போய்ட்டிருக்கு என்றார் கேப்ரியல் . எது சார் ? ரயில்வே தான் man என்றார். நீங்க செச்ஷன் ஆபீசர் -உங்களுக்கு தெரியாததா என்றார் ராமசாமி.. என்னாய்யா செக்க்ஷன் ஆபீசர் , ஒரு லெட்டர் HO ல டெலிவரி பண்ட்டு வாயான்னா ஒருத்தன் தீபாவளின்றான் , ஒருத்தன் ஓய்ப்க்கு டெலிவரி ன்றான்.. இவன் தப்பு பண்ட்டு ஆபீஸ் வேல செய்ய மாட்டேன்றான் -இன்னாய்யா பெரிய செக் ஷன் ஆப்சர் -நோ RESPECT என்றார் கேப்ரியல் .
கழுகு கோலம் போட்டாச்சு.
சார் HO லனா மெட்றாஸ் லயா , TRIVANDRUM லயா என்றார் ராமசாமி . மெட்றாஸ் ல தான் MAN என்றார் கேப்ரியல்.
'சார் Done -' ராமசாமி .
இன்னா man இன்னா சொல்றே டீ சாப்டுய்யா என்றார் மகிழ்ச்சியுடன் கேப்ரியல்.
" டீ சாப்புட்டுட்டேன் சார், நான் ஒரு மெஸன்ஜர் ஏற்பாடு பண்றேன்" ராமசாமி .
"யோவ் ரயில்வே ஆள் தான்யா லெட்டர் எத்து ன் போவணும்” .
“ தெரியும் சார் நம்ப செக் ஷன் ஆளு நான் ல்ல ஏற்பாடு பண்றேன் ; நீங்க லஸ்கர் on duty pass போட்டு தாங்க நான் அவனை கூட்டிட்டு வரேன்” .
“யோவ் ரொம்ப முக்கியம் யா Monday க்குள்ள லெட்டர் H O ல குடுக்கணும் யா".
சார் SATURDAY மத்தியானம் HO ல குடுத்துட்டு MONDAY ரிட்டன் வருவான் போதுமா ? -ராமசாமி.
"யோவ் போதுமா கேக்கறே கிரேட் யா பிளஸ் ஒரு 200 RS GRATIS AMOUNT ரிலீஸ் பண்றேன் MAN ஓகே வா என்றார் கேப்ரியல் . க ரெ வுக்கு 'ON DUTY ' PASS [+200Rs] க்கு வழி செய்துவிட்டது கழுகு.
2.40 க்கே க ரெ பிரசன்னம். ராமசாமி "சாப்பிட்டயா ?
" ஊம் சாப்பிட்டுட்டேன் “ க ரெ . 5 நிமிஷம் உக்கார் போலாம் என்றார். 2. 50 க்கு கிளம்பி நடந்து கேப்ரியல் செக் ஷன் வந்தனர்.
ராமசாமி உள்ளே போனார். வா man promptaa வந்துட்டியே , அந்த மெசஞ்சர் எங்கே man என்றார். வெளில இருக்கார் சார் என்றார் ராமசாமி . கூப்டு man என்றார் கேப்ரியல்.
ராமசாமி போய் அழைத்து வந்தார் . க ரெ உள்ளெ வந்ததும் வணக்கம் தெரிவித்தான் . கேப்ரியல் பதில் வணக்கம் சொல்லி, பெஞ்சில் உட்கார சொன்னார் முத்தூ லக்ஸ்மி என்றார் கேப்ரியல். முத்துலட்சுமி எட்டிப்பார்த்தாள் - அந்த லஸ்கர் pass ரெடி ? என்றார்
எஸ் சார் ஆனா date பிக்ஸ் பண்ணல சார் என்றாள் மு. லெ
ஓகே FRI DAY ஈவினிங் டு Tues Day நைட் வேலிடிட்டி போடு என்று சொல்லி 'போதுமா man 'என்று ராமசாமி யை கேட்டார். ராமசாமி 'போதும் சார் -தேங்க்ஸ் என்றார். ஒரு சிவப்பு நிற பாஸ் TPJ --MS and back =en route ---- ---- --- ---- ELIGIBLE to travel by EXPRESS / MAIL “ON DUTY”
கேப்ரியல் சாப்பா வைத்து கையெழுத்திட்டு அத்துடன் இரண்டு கவர்களை சென்னை HO வில் கொடுத்து விடும் படி கேட்டுக்கொண்டார். கையில் 200 ரூபாய் கொடுத்தார். அனைத்தையும் நன்றிப் பெருக்கோடு வாங்கிக்கொண்டான் க. ரெ . “செக்ஷன் ல எவன் கிட்டயும் , PASS / பரீட்சை என்று மூச்சு விடாத” என்று கேப்ரியல் தந்த ஐட்டங்களை ராமசாமி தன்னிடம் வாங்கிக்கொண்டு நாளைக்கு வீட்டில் வந்து வாங்கிக்கொள் என்றார்.
சரி
என்றான் க. ரெ
தொடரும் அன்பன் ராமன்
நினைத்த போது ரயில் பயணம் செய்ய கேபிரியல் துணை வேண்டும்
ReplyDeleteவெங்கட்ராமன்