Thursday, February 16, 2023

ரெங்கா ரெங்கா - 3

 

ரெங்கா  ரெங்கா -  3

காலை 6.30 க்கே   ரெ  ராமசாமியை தேடி வந்து விட்டான்.

கழுகுக்கு மூக்கு வியர்க்காதா? .

என்ன என்றான் கழுகு . ரெ  பதில் பேசாமல் நின்றான் . "என்ன கேப்ரியல் தந்த லெட்டர் வேணுமா , இப்பவே வந்துட்ட?" -கழுகு ,;

இப்ப வாங்கிண்டு போனா பைக்குள்ள வெய் . ஆபீசுக்கு கொண்டு போய் மாட் டிக்காத. . சொன்ன பேச்சுக்கேளு. சரி எந்த வண்டியில போகப்போற? -கழுகு

எல்லா வண் டி லியும்  போகலாம்னு போட்டிருக்கே - ரெ                                 அதுனால கட்ட வண்டியில போகப்போறியா?. என்ன அண்ணா தமாஷ் பண் றேள் ? ரெ .       'நீ சொல்ல மாட்டேங்கற அதுனால நான் அப்பிடி சொன்னேன்' - ராமசாமி. ' அண்ணா rock fort போலாமா '? - ரெ  போயி ? -கழுகு .                                                               அந்த லெட்டரை ஆபீஸ்ல கொடுத்துட்டா நம்ப வேலை ஆச்சு இல்லையா?'- ரெ 

4. 00 am க்கு ஆபீசிருக்காது ; நீ நைஸா அண்ணா நகர் பெரியம்மாவோட மருமாளை ப்பாக்கணும் னு அலையற . அங்கேயும் இங்கயும் போன - உன்ன காலை -அதாவது ரெண்டு காலையும் ஒடைச்சுடுவேன் -அதுவும் மெட்றாஸ்லயே ; நீ தவழவேண்டியது தான். எல்லா   ஊர்லயும் CCTV வெச்சிருக்கேன் நீ தப்ப முடியாது. அதுவும் மெட்ராஸ் -ஜகஜ்ஜால பேர்வழிகள் ஊர் .   நீ    .னு வெளக்கப்பா த்துண்டு நிக்கச்சே , வேஷ்டி, சட்டையை உருவிண்டு விட்டுருவான், அதனால நீ எழும்பூரத்தாண்டி எங்கயும் போகாத சரியா?' - கழுகு . எழும்பூர்லயே நின்னுண்டிருந்தா நான் பரீட்சை எழுத வேண்டாமா என்று கண்ணீர் உகுத்தான்     க ரெங்கன்.                                                                                                                                          ஏன் கொழந்தைய அழ விடறே ள் ?- அம்ஜம் . வாடி வா கொழந்தைய தூக்கி இடுப்புல வெச்சுண்டு மம்மு ஊட்டு.. [அம்ஜம், ரெ இருவருமே சிரித்துவிட்டனர்].

ராமசாமி தொடர்ந்தார் " டே லூசு எக்ஸாம் எழும்பூர்லயே தான் , பின் பக்கம் ரயில்வே ஆபீஸ் கம்யூனி ட்டி ஹால்ல தான் . நான் சென்டர் பார்க்கறேன் னு அண்ணா நகர் , பெரியண்ணா நகர் னு கிளம்பின அப்புறம் அங்கேயே ஏதாவது மார்கழி பஜனை கோஷ்டில சேர வேண்டியதுதான் -- தீர்மானமா சொல்லிட்டேன் நான் ஒன்னை சும்மா விடமாட்டேன்”. -ராமசாமி .                                                                       வேலை கெடச்சப்புறம் நீ எங்க வேணா போ , மருமாளை ப்பாரு, அவ தங்கைய ப்பாரு எனக்கு கவலை இல்லை. ஆனா இப்ப நீ எழும்பூரோட நிக்கணும் என்று கறாராக பேசியது கழுகு .அம்மாடியோவ் என்று அம்ஜம் , ரெ இருவரும் அதிர்ந்தனர்.

ராமசாமியின் ஆளுமை வியப்பிற்குரியது .கஸ்தூரி ரெங்கன் என்ற மாபெரும் பொறுப்பை சுமக்கிறோம் என்ற மகோன்னதமான உணர்வுடன் கண்டிப்பு காட்டினான். பலர் நினைப்பதைப்போல அவன் ஒன்றும் ஷோக் பேர்வழி அல்லன்.விளையாட்டாகப்பேசினாலும்,   கண்டிப்பு மிக்கவன் . மீண்டும் ஒரு முறை அம்புஜத்தை தான் யார் என்று உணர வைத்தான்.

இப்போது கேப்ரியல் கடிதங்கள் , 200  ரூபாய் -ஆக 3 பொருட்களைக்கொடுத்து ஆபீசில் 11.30 மணிக்கு வந்து பார் என க. ரெ வுக்கு சொன்னான்.

க ரெ " எதுக்கு அண்ணா ?அதான் டிக்கட் வாங்கியாச்சே" என்றான்.                                                                                    

ராமசாமி    " டே பண்டாரம் சொன்னதை செய் குறுக்கே பேசாதே " என்று அவனை அடக்கி வைத்தான் கழுகு

காலை 11. 20 க்கே அரக்கப்பரக்க ஓடி வந்தான் கஸ்தூரிரெங்கன் .  'அண்ணா ட்ரெயின் ரி சர்வே ஷன் இல்லாம போகமுடியாதாமே என்று விளக்கெண்ணெய் குடித்தவன் போல விழித்தான்.                        எதுக்குண்ணா னு வீர வசனம் பேசினயே ,இப்ப புரியறதா ? என்றார் ராமசாமி.                                                                                                                சரி கீழே போய் , அலோகேஷன் ரூம் திறந்தாச்சானு பாத்துட்டு வா என்றார் ராமசாமி .

போய் பார்த்துட்டு வந்து   “திறந்திருக்கு உள்ள யாரும் இல்லை” என்றான் ரெ . மீண்டும் கழுகு அதிர்ந்தது " டேய்  சொன்னதை மட்டும் செய் ".

ஏன் இப்படி கோவமாவே இருக்கார் என்று மிரண்டான்    ரெ

பத்து நிமிடம் கழித்து ராமசாமி, ரெ இருவரும் அலோகேஷன் ரூமுக்கு வந்தனர். உள்ளே தலைமை நிர்வாகி லூசி , உதவியாளர்கள் கைலாசம் மற்றும் வைகுண்ட நாதன் நின்றிருந்தனர் .

லூசி வாங்கசார் என்று ராமசாமியை வணங்கினாள். ஏம்மா அலோகேஷன் சார்ட்  ரெடியா ? என்றார் ராமசாமி. 3 இருக்கு சார் எது வேணும் என்றாள் . ] TTE / கேப்டன் லிஸ்ட் பாக்கலாமா ? -கழுகு   லூசி " , இங்க சோபாவுல உக்காருங்க என்று சார்ட்டை கொண்டு வந்தாள் . கஸ்தூரிரங்கன் எட்டிப்பார்த்தான் சார்ட்டை , பல வண்ணங்களில் செவ்வக முக்கோண அமைப்புகளில் வண்டி எண்கள் , குறியீடாக TTE பெயர்கள் மணி மணியான எழுத்துகளில்.

சனிக்கிழமை பல்லவனின் யார் யார் டூட்டி கொஞ்சம் பார்த்து சொல் என்றார் ராமசாமி,                               லூசி "சார் ,பீட்டர், லோகு, மாடசாமி , தங்கவேலு + ரியாஸ்.

சரி தேங்க்ஸ் மா என்று கிளம்பி வெளியே வர

டேய் ராமசாமி எங்கடா இங்க என்று ஆஜானுபாகு உருவம் புஸ்தி மீசையுடன் அன்பாக கை குலுக்கியது. “நான் இங்கதான்டா செக்ஷன்    . இருக்கேன்” -ராமசாமி .                                                  டேய் தெரியுண்டா என்றது ஆஜானு.

ஆஜானு ஒரே மகிழ்ச்சியில் வாடா போய் காபி சாப்பிடுவோம் என்றது. [ ரெ , ராமசாமி பயங்கரமான ஆசாமி என்று புரிந்து கொண்டான்].

ஆஜானு, வேதாந்தம், ராமசாமி எல்லாரும் கிளாஸ்மெட்ஸ். போனமாசம் வேதாந்தத்தை பாத்தேண்டா -சூப்பர் பொண்ண கல்யாணம் பண்ணிருக்காண்டா என்று யதார்த்தமாக பேசினான் ஆஜானு

ஆஜானுநான் தான் காபி சப்ளை வேற ஏதாவது சாப்புடறயா” என்று நட்பு மங்காமல் கேட்டான்.” ஒண்ணு ம் வேணாண்டா .-உன்ன பார்த்ததே தெய்வத்தை ப்பார்த்தாமாதிரி இருக்குடா” -ராமசாமி .                                                                                                         சரி என்ன விஷயம் என்றான் ஆஜானு                                                                                                       தெளிவாக சொன்னார் ராமசாமிஇந்த பையன் சென்னையில recruitment போர்டு எக்ஸாம் எழுதணும். நாளைக்கு உனக்கு பல்லவன் டூட்டி இருக்கு. இவனைக்கொஞ்சம் கூட்டிட்டுப்போயேன்ஏன்னா    ரிசர்வேஷன்    இல்ல.

“கைல டிக்கட் இருக்குல்ல” ? -ஆஜானு  ;  ON  DUTY பாஸ் இருக்கு”. -'ராமசாமி ,

 பின்ன என்ன நான் கூட்டிட்டு போறேன் எங்க தாம்பரமா? ஆஜானு.                                       கழுகு பயந்து போய் டேய்டே ய் டேய்  எழும்பூர்  ரா . அவனுக்கு வசதி இல்லை கொஞ்சம் பாத்து எங்கயாவது தங்க வை. சாப்பாடு அவன் பாத்துப்பான்.

ஆஜானு 'நல்ல ஐயர் மெஸ் ஸ்டேஷன்பக்கத்திலேயே இருக்கு கூட்டிட்டு போறேன் , நானே அங்கதான் சாப்பிடறேன் ஐயர் திருவானைக்காவல் வெங்கடேஸ்வரன். வயத்துக்கு  கெடுதல் பண்ணாது. நான் பாத்துக்கறேன். காலைல இங்க வரீங்களா   இல்ல சீரங்கத்துல பிக் அப் பண்ணிக்கவா?. ரிட்டர்ன் ஞாயிறு  NIGHT          ரா க்போர்ட் என்னோட பெர்த் லேயே வரட்டும் .என்றார் ஆஜானு .

“அப்புறம் HEAD OFFICE  லெட்டர் குடுக்கணும்” -கழுகு.                                                                  அதெல்லாம் நான் பாத்துக்கறேண்டா கவலையே படாத ஜமாச்சுடுவோம்.  தாங்க்ஸ்  என்று விடை பெறப்போகுமுன் ,                                                                                    ஆஜானு "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா உன்னால தான் செய்ய முடியும் ;அப்புறமா எல்லா தகவலும் தரேன் இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம் "     அதுக்கென்ன உனக்கு செய்யாம இருப்பேனா ?-கழுகு.                                                       மறுநாள் காலை . ரெ சென்னைக்கு பயணித்தான் புஸ்தி மீசை மாடசாமியுடன் . 

தொடரும்   அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...