Saturday, February 18, 2023

ரெங்கா ரெங்கா -4

 ரெங்கா ரெங்கா -4

காலை 11. 50 பல்லவன் எக்ஸ்பிரஸ் எழும்பூர் பிளாட்பாரம் 4 ல் தட தட வென நுழைந்தது.          D-8 பெட்டியில் இருந்து மாடசாமி லாவகமாக ஓடியபடியே இறங்கி , ஏய் வண்டி நின்னதும் இறங்கு என்று . வை எச்சரித்தான்.. ரெ அப்படியே செய்தான். இங்கேயே நில் கூட்டத்துல எங்கேயும் போயிடாத இந்த பெரிய போர்ட் கீழ நில், நான் 10 நிமிஷத்துல வந்து கூட்டிட்டு போறேன் என்று அடர்ந்த மீசையை முறுக்கினான் மாடசாமி . .ரெ   மிரண்டு பார்த்தான். ஒரே கூட்டம் , எங்கும் தலைகள்,. ஊழியர்கள், லக்கேஜ் வண்டிகள்  , போர்ட் பார்க்க கூட்டம் என்று வித விதமான நபர்கள். கஸ்தூரிரெங்கன் இந்த ஊர்ல பரீட்சை எழுதணுமா என்று ஆந்தை போல் விழித்தான். சொன்னபடியே மாடசாமி 10  நிமிடத்தில் .வந்தார் கருப்பு கோட் இல்லாமல்.

சார் கோட் என்றான் . ரெ . அது    மேல இருக்கு , சரி  பையோட வா என்று சொல்ல, ரெ வெளி கேட் பக்கம் நடக்க , தம்பி இங்க வா என்று மாடிப்படி வழியே மேல் தளம் போய் , அங்கிருந்த செல்வேந்திரனிடம், டேய் இவனுக்கும் எனக்கும் ஒரே ரூம்,  2 பெட் , ஹாட் வாட்டர் வசதி உள்ள ரூமாக என்று மாடசாமி சொன்னார்.

சார்  நம்பர்  15 போடறேன் ஓரமா இருக்கும் , நீங்க அப்படியே கீழ போய் வரலாம் என்றான். செல்வேந்திரன் . ரெ பக்கம் திரும்பி , இவன் நம்ப ஊர் தான் திருவளர் சோலை , இவன் சீரங்கம் என்று அறிமுகம் செய்வித்தார் மா.சா .

சார் இந்த லெட்டரை H  O குடுக்கணும் என்றான் ரெ . அவனை மிக எளிதில் உள்ளே அழைத்துச்சென்று சுப்பரின்டென்டென்ட் காசிம் இடம் திருச்சி லெட்டர் என்று கொடுத்து விட்டு ENDORSEMENT கடிதம் வாங்கி ரெ விடம் தந்தார் மாடசாமி

உடமைகளை ரூமில் வைத்துவிட்டு,   வா சாப்பிடப்போகலாம் என்று .ரெ வுடன் கீழிறங்கி ஸ்டேஷன் பக்கவாட்டில் திரும்பி வெங்கடேஸ்வரய்யர் மெஸ் எனும் இடத்தை அடைந்தனர். வாங்கோ வாங்கோ என்று மாடசாமி மற்றும் ரெ இருவரையும் வரவேற்றான் சுவாமிநாதன்..

உண்மையிலேயே அளவான ஆனால் வளமான சாப்பாடு , நெய் அப்பளம் , கூட்டு பொரியல் குறைவின்றி. .ரெ திருப்தியாக சாப்பிட்டான் . அவன் எண்ணாமலேயே மனத்திரையில் ராமசாமி வந்து போனார், மா டசாமியோ இங்கேயே ப்ரத்யக்ஷம். வயிறு நிரம்பியவன் காட்டும் நன்றி அலாதியானது.

மா சா, பீடா  வாங்கிக்கொண்டார். மேலே ரூமுக்கு வந்தனர். தம்பி மணி இப்ப  

1. 40,   4 மணி வரை படி இல்ல தூங்கு , வைகை போயாச்சு இனிமே சத்தம் இருக்காது . 4.30 மணிக்கு மேல மயிலாப்பூர் போய் கபாலீஸ்வர் கும்பிடலாம்.    நீ ஐயங்காரோ   பரவால்ல கும்பிடு அப்புறம் வெங்கடேச பெருமாள்கோயில்  பக்கத்திலேயே இருக்கு போய் வரலாம். அண்ணா நகர் அது இதுனு கெளம்பாத , அப்புறம் ராமசாமி என்னையும் பிச்சுப்போட்டுருவான் என்று எச்சரித்தார்  புஸ்தி மீசை மாடசாமி[ இது எப்படி? ஒரே புதிர் அல்லவா]. அந்த இடை வேளையில் மாடசாமி ஓய்வெடுக்க , ரெ மீண்டும் பாடங்களை சரியாக தயார் செய்து கொண்டான்.  மாலை 4. 15 மணிக்கு மாடசாமி முகம் கழுவிக்கொண்டு போலாமா என்றார் . சரி என்று ரெ அவருடன் கிளம்பினான்.. ஒரு தெரிந்த ஆட்டோவில்  இருவரும் லஸ் கார்னர் வரை சென்றனர் . அங்கிருந்து பொடி நடையாக  மைலாப்பூர் வந்தனர். ஜே ஜே ஜே என்று மாமிகள் கூட்டம் , வகை வகையான மடிசார் , நிலக்கரி  முதல் பம்பிளி மாஸ் சுளை போன்ற உடல் நிறம் படைத்த  மாமிகள் கலர் கலராக , மாட வீதி மார்க்கெட்டில்., கபாலி, கற்பகாம்பாள் தரிசனம் செய்து , விறுவிறு என்று வெங்கடேசப்பெருமாள் சேவித்தனர். பக்கத்தில் சுந்தரம் மெஸ்ஸில் மிளகாய் பஜ்ஜி காப்பி என்று மாடசாமி ரெ வை நன்கு கவனித்துக்கொண்டார். ரெ உண்மையிலேயே மகிழ்ந்தான்.

இப்ப ரூமுக்கு போனா  போர் அடிக்கும் என்று நேரே கிழக்காக நடந்து சாந்தோம் பீச் வந்தனர். கொள்ளிடம் தான் மிகப்பெரிது என்று நம்பிக்கொண்டிருந்த கஸ்தூரிரெங்கன் , ஐயோ என்று வியந்தான் நீர்ப்பரப்பைப்பார்த்து. 

மணலி ல் அமர்ந்து  7. 20PM வரை இளைப்பாறினார். . அங்கிருந்து மேற்கில் நடந்து லஸ் சில் பஸ் பிடித்து எழும்பூர் வந்தனர். . இரவு அய்யர் மெஸ்ஸில்           அடை -ஒரு வெட்டு வெட்டினர். பின்னர் ஆவின் பால் . எல்லாம் மாடசாமி பார்த்துக்கொண்டார். இரவு நல்ல உறக்கம் இருவரும் ,

காலை வெந்நீர் குளியல், ஐயர் மெஸ்ஸில் பூரி கிழங்கு வடை காபி.. மாடசாமியே ரெ வை பரீட்சை ஹாலுக்கு அழைத்துச்சென்று உரிய இடத்தில் அமர வைத்தார்  .முடிந்ததும் ரூமுக்கு வந்துடு என்றார் மா சா.   சரி என்றான் . ரெ

உண்மையிலேயே பரிட்சையில் சக்கைப்போடு போட்டுவிட்டான் கஸ்தூரி ரெங்கன் , மிகச்சிறப்பாக எழுதினான் . [ஏனோஅப்போது அவனுக்கு  ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்று வேதாந்தம் தம்பதியிடம் சேவித்து விண்ணப்பித்துக்கொண்டது நினைவுக்கு வந்தது மானசீகமாக அவர்களை நமஸ்கரித்தான். உயர்ந்த எண்ணத்துடன் வழங்கப்படும் ஆசிகள் நிச்சயம் நற்பலன் தரும்].

மாடசாமி எங்கோ வெளியே போய்விட்டு 3. 30 மணிக்கு திரும்பினார். பரீட்சை நன்றாக எழுதியதை சொல்லி அவருக்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்தான். நெகிழ்ந்து போனார் மாடசாமி [ ஏன் சில பிராம்மண பையன்கள் சில ஒழுக்கங்களைக்கடைப்பிடித்து முன்னேறுகின்றனர் என்பது புரிந்தாற்போல் தோன்றியது மாடசாமி க்கு].  தம்பி சாயங்காலம் 7- 9 ஒரு கல்யாண ரிசெப்ஷன் இங்க தான்  பக்கத்துல அங்க போய்  சாப்பிடுவோம் என்றார் மா சா.  நல்ல படியாக அனைத்தையும் முடித்துக்கொண்டு இரவு ராக் போர்ட் வண்டியி ல் மா சா வின் கருணையில் ஊர் திரும்பி மீண்டும் அவருக்கு நன்றி தெரிவித்து சீரங்கத்தில் விடை பெற்று வீடு திரும்பினான்கஸ்தூரி ரெங்கன்.

தொடரும் அன்பன் ராமன்   

1 comment:

  1. அடுத்த தடவை நானும் சென்னை வந்தால் வெங்கடேஸ்வரையர் மெஸ்ஸில் ஒரு வெட்டு வெட்டிடுவோமில்லா
    வெங்கட்ராமன்
    பாலையா நியாபகம் வருது

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...