Wednesday, February 8, 2023

IF TIME ARRIVES

 IF TIME ARRIVES

வேளை வந்தால்

குதிரையா லேசரா  [சக்தி பெரிதா சிவன் பெரிதா வுக்கு அடுத்த கேள்வியாக உருவெடுத்தது G -20 நிகழ்வுகள் குறிப்பாக வித்யாவின் மேற்பார்வையில் நடந்தேறிய கலை நிகழ்ச்சிகள் யாவையும் சிறப்பாக இருந்ததா உளவுத்துறை தகவல் திரட்டி இருந்தது. பிறஅமைப்புகளின்  செய்திகள் நம்பகத்தன்மையை இழந்து பல மாதங்கள் ஆனது உளவுப்பிரிவிற்கும் நன்கு தெரியும். எனவே அவர்களே மிக ரகசிய கள ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் வித்யா மேடம் ஒருங்கிணைப்பாளர் என்பதால் இவைவித்யாவின் பார்வைக்கும் வந்தன . மிகுந்த மனநிறைவுடன்  வலம் வந்தாள் வித்யா மாலினி. பரபரப்பாக செயல் பட்டு கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் கௌரவமான பண முடிப்பும், இதர செலவினங்களுக்கான ஊக்கத்தொகை +ஊர் திரும்ப .விமான டிக்கட் பெற்றுத்தந்து , அதிகாலை ஹோட்டலில் இருந்துவிமான நிலையம் செல்ல பெரிய வாகனம் + டிரைவர் ஏற்பாடு செய்துவிட்டாள் .

சூப்பர் சக்ஸஸ் என்று கணவனிடம் தெரிவித்தாள் மாலை 3.40க்கு.

 வேதாந்தம் சொன்னான் 'உங்களுக்கு எல்லாம் மூளையே வேலை செய்யாதுடி . இவாளுக்கு , ஒரு மரியாதை பண்ணனும்னு ஒனக்கு தோணவே இல்லையா? சரியான லூசுடீ  நீ என்று கடிந்து கொண்டான். எனக்கு ஏன் இதெல்லாம் தோணவே இல்ல என்று உள்ளூர வருந்தினாள் .

கோவிச்சுக்காதேங்கோ மரியாதையை  எப்படி பண்றது -கொஞ்சம் சொல்லித்தாங்களேன் என்றாள்       பைத்தியம் -அவங்க எத்தனை பேர் ?

 25 பேர் , சரி எத்தனை DRIVERS ? 2 பேர்   சரி இப்ப 25+2+ நம்ப 3  = 30 பேர் . ராத்திரி 8.00 மணிக்கு நல்ல பார்ட்டி .சவுத் இந்தியன் சொசைட்டி சுந்தரமய்யர்ட்ட சொன்னா டாண் னு 8.00 மணிக்கு சூப்பர்  விருந்து கொண்டுவந்துடுவார். எல்லாரையும் இப்பவே ரூம்ல போய் மூட்டை முடிச்சு எல்லாம் பேக் பண்ணிட்டு 6.30 மணிக்கு நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு- பர்சனலா கூப்புடு ரொம்ப சந்தோஷப்படுவா.

மேலதிகாரிகளை கவனிக்கத்தெரியறது , இவாளா கண்டுக்கமாட்டோம்க்கறோம் பார்த்தியா அது சரியில்ல  எந்த மேலதிகாரியாவது கரகம் /சிலம்பம் ஆடுவானா -போடி லூசு என்றான் .வித்யா அழுதுகொண்டே சிரித்தாள் லூசுப்பட்டத்தை நினைத்து.

பார்ட்டிக்கு [விருந்து] வேதாந்தமே பேசி, அருமையான விருந்து வேண்டும் என்று சொல்லிவிட்டான். சுந்தரமய்யர் "சார்ன் சித்தம் அடியேன் பாக்யம் நல்ல A CLASS ஐட்டங்கள் தராம்  என்றார் பாலக்காட்டுத்தமிழில்.

முகத்தை செம்மைப்படுத்திக்கொண்டு , மாலை 6.15- 6.30 க்குள் அவசியம் வீட்டிற்கு வந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்று விருந்துக்கு அழைத்தாள் வித்யா மாலினி.   ட்ரை வர்களிடமும் சொல்லி விட்டாள், உடனே ரூம் போய் மூட்டைகளை கட்டி வைத்து விட்டு வேறு ஆடைகள் உடுத்தி வேலுச்சாமி உதவியுடன் வித்யா மேடம் வீட்டை 6.20 க்கு அடைந்தனர். குட்டி பத்ரி பூனைபோல் ஓரமாக நின்றான் , சுபி அவனை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து அவனுடன் சுபி,  மணிகண்டன் இருவரும் விளையாடினர்.

பெரியகலைஞர்கள் வேதாந்தம் சாரு டன் அன்பாக /அடக்கமாக பேசினர். அய்யா தமிழ் நாடுங்களா என்றான் செல்வ கணேசன் -ஆமாம் சீரங்கம் , அம்மா ? அவங்க மாயவரம் ஆனா வளர்ந்தது சென்னையில என்றான் வேதாந்தம்.  மீனாச்சி,   வித்யாவை நீங்க புதுக்கோட்டைக்கு வாங்க மேடம் , புவனேஸ்வரி அம்மன் கோயில், சித்தன்ன வாசல் ஓவியங்கள்,குடுமியான் மலை இயற்கை அழகு எல்லாம் கூட்டிக்கிட்டு போறேன் வித்யா வியந்தாள் எவ்வளவு பாசம் காட்டுகிறார்கள்.  நமக்கு இவ்வளவு வர மா ட்டேன் என்கிறது -கண்டிப்பா லூசுதான் நான் -அவர் சரியாதான் சொல்லிருக்கார் என்று நினைத்துக்கொண்டாள் . நல்ல அரட்டை .

7.50 க்கு நான் சுந்தரமய்யர் வந்திருக்கேன் எங்க வரணம் என்று போன் வேதாந்தத்திற்கு. .2ND FLOOR வராந்தாவுக்கு  என்றான் வே து. நல்ல விசாலமான வெராண்டா  டேபிளில் 32 பேர்  சாப்பிட இடம் உண்டு.

உண்மையிலேயே மிகச்சிறப்பான விருந்து,ரசித்து ருசித்து உண்டனர்.

வேது -வித்யா நன்றி சொல்ல ,

செல்வகணேசன்அம்மா எங்களெல்லாம் யாருங்க இப்படி சமமா வெச்சு விருந்து போடுவாங்க , கோயில்ல கரகம் பிடிச்சாக்கூட ஒருமூலைல உக்காத்தி இலையை போட்டு சாப்பாடு வெப்பாங்க. எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகமுங்க .உங்க தலைமுறையே நல்லா இருக்கணுமுங்க எனக்குப்பேச வரலீங்க என்று உண்மையிலேயே வருந்தினான், நா தழு தழுத்தான்.

டெல்லிக்கு வந்தா இங்க வாங்கோ என்று வே து சொல்லி  விடை கொடுத்தது அனுப்பினார். காலை FLIGHT ல் மன நிறைவோடு ஊர் திரும்பினார் அனைவரும்.

தொடரும் அன்பன் ராமன் .

1 comment:

  1. பாலக்காட்டு சுந்தரமய்யர் சமையல்னா கேட்கணுமா. பேஷ்பேஷ
    ஐட்டங்கள நன்னாத்தான் இருக்கும்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...