Tuesday, February 28, 2023

SAMIs COME TOGETHER -2

 SAMIs COME TOGETHER -2

சாமிகள் சங்கமம் -2

சனி இரவு 7. 40 க்கு ராமசாமி போன் செய்தார் சுபி என்னும் சுபத்திரா வுக்கு

 நானே வரணும் னு நெனச்சேன் என்ன சார் விசேஷம் என்றாள் சுபி . விஷயத்தை  ராமசாமி சொன்னதும் அதிர்ந்தாள் சுபி. சார் போன்ல யோ வீட்டு;லயோ பேச வேண்டாம் சார் உங்க நண்பருடன்  பொது டம் - ஏதாவது கோயில் வளாகத்துக்கு வாங்க மூவரும் மீட் பண்ணலாம் . நாளை ஞாயிறு மாலை 3.00 க்குப்பின் தயவு செய்து கன்பர்ம் பண்ணுங்க பேசுவோம் என்றாள் சுபத்திரா . என்னடா இவ பிகு பண்றா என்று நினைத்தார் ராமசாமி . சரி காரியம் ஆகணும்னா அவங்க சொல்படி செஞ்சாதான் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுத்தார்.

டேய் மாடசாமி நாளை 3-15 மணிக்கு வீட்டுக்கு வா நீ சொன்ன மேட்டர் பற்றி ஏற்பாடு செஞ்சுண்டிருக்கேன் கண்டிப்பா வந்துடு என்று கட்டளையாகவே சொல்லிவிட்டார் ராமசாமி . மாடசாமி OK என்று சம்மதம் தெரிவித்தார். சுபி க்கு 3.30 ஞாயிறு கோயில் தாயார் சன்னதி பகுதியில் சந்திக்கலாம் என்று தெரிவிக்க அவளும் சரி என ஒப்புக்கொண்டாள் .

குறித்த நேரத்தில் மா சா  ரா சா , சுபி  தாயார் சன்னதி மண்டபத்தில் சந்தித்தனர் . சுபி ராமசாமிக்கு வணக்கம் சொல்லி நிமிர்ந்ததும் MEET  Prof . SUBHADHRA என்று ராமசாமி தெரிவிக்க , மாடசாமி கூனிக்குறுகி மிகுந்த பவ்யமாக உடலை வளைத்து ஏதோ சமயத்தலைவரை வணங்குவது போல் மிகப்பணிவாக வணக்கம் தெரிவித்தார். சுபத்திரா ஏன் இவ்வளவு அடக்க ஒடுக்கம் என்று வியந்தாள்.                                                                   மாடசாமி மனதில் "இந்த ராமசாமி    வ்வளவு  பெரிய ப்ரொபஸரை கோயிலுக்கு அழைத்து வந்துவிட்டானே என்னை ஏதாவது தப்பாக எண்ணிவிடப்போகிறார் ப்ரொபஸர்" என்று கலங்கினான்.

எங்காவது உக்காரலாமே என்றாள் சுபி   ' ' என்றார் ரா சா .மா சா மட்டும் ஒருவித கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தார் . சும்மா உக்காருங்க சார் நாமெல்லாம் FRIENDS . ராமசாமி சார் எங்க அண்ணன் மாதிரி , நீங்களும் அப்படியே தான் எனக்கு என்றாள்  சுபி. மாடசாமி சற்று தெளிவும் அமைதியும் பெற்று ராமசாமி அருகில் அமர சுபி " விஷயத்தை சொல்லுங்க” என்றாள். மாடசாமி தயங்க , ராமசாமி சுருக்கமாகஇவன் மருமாள் [அக்கா பெண் ] TRADITIONAL ஆர்ட்ஸ் உங்க யூனிவெர்சிட்டில படிக்கணுமாம் , உன் உதவி தேவை” என்றார். சுபிஎல்லா பர்டிகுலர்ஸ் AGE , DOB , COMMUNITY CERTIFICATE , PARENTS ' ANNUAL INCOME CERTIFICATE, PHOTO COPIES FORM FEE [400/-] குடுங்க எல்லாம் காதும் காதும் வெச்ச மாதிரி செய்யணும் BEFORE கமிங் WEDNES DAY . வெளியிலே மூச்சு விடாதீங்க. நான் FORM  + BOOK ரெண்டும் அனுப்பறேன் நீங்க யாரும் வீட்டுக்கோ யூனிவெர்சிட்டிக்கோ வர வேண்டாம் ஏனென்றால் நான் யாருக்கும் influence seat அனுமதிக்க மாட்டேன் அதனாலே நான் எங்க மாட்டுவேன் னு காத்துக்கிட்டிருக்காங்க. இவங்களை சமாளிக்க எனக்கு தெரியும், சரி பொண்ணு என்ன முடிச்சிருக்கா” ? சுபி

மாசா : B .Sc  Chemistry + Diploma in French  Diploma in  German +பரத நாட்டியம் + SILAMBAM Grade - III

சுபி : நல்ல ELIGIBILITY இருக்கு எண்ட்ரன்ஸ் ALL INDIA LEVEL எழுதணும் நான் அனுப்பும் புக் இருக்கும் டீ டைல்ஸ் நல்ல படிக்க சொல்லுங்க . டைரக்ட் செலக்ஷன் கெடச்சா SCHOLARSHIP சுளையா 50 000/- [P/A] கிடைக்கும் இல்லேன்னா SPONSORSHIP SEAT  போடலாம் SCHOLARSHIP குறையும் அல்லது NIL கூட ஆகலாம் ஆனா SEAT ALLOT ஆகும்.

எனக்கு SPONSOR  யாரையும் தெரியாதே என்றார் மாசா . உங்களுக்கு தெரியாட்டி என்ன இதோ நம்ம அண்ணன் ராமசாமி சார் ஒரு வார்த்தை சொன்னா அவ்வளவு தான் மறுநாளே SPONSOR ஆயிடுவா அந்தப்பொண்ணு , ஆங் அவ பேர் என்ன என்றாள் சுபி - 'கௌரி கல்யாணி ' என்றார்  மாடசாமி.

பாக்கி எல்லாம் புதன் நைட் ராமசாமி சாருக்கு வந்துடும் மிச்சத்தை போக போக பாத்துக்கலாம் . தாயார் சன்னதியில் பேசி இருக்கோம் நல்லதே நடக்கும் . இன்னோர் தரம் மீட் பண்ணனும்னா வேற இடம் பாப்போம் அது தான் SAFE என்றாள் சுபி

என்னம்மா சொல்ற -sponsor அது இதுனு எனக்கு எப்படிம்மா தெரியும் என்று ராமசாமி நடுங்க .சார் எங்கிட்டயே சொல்றீங்களா ? நீங்க வேதாந்தம் சார் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா வேலை முடிஞ்சுடும் சார் -சுபி.

வேதாந்தம் என்ன செய்யமுடியும் ? -ராமசாமி            சார் நீங்க ஒண்ணு அவரா செய்வார் அவர் ஒய்ப் செய்வாங்க என்றாள் சுபி . ரா சாஅப்படியா என்று வியந்தார்     . சார் அந்த அம்மாவுக்கு டெல்லில எவ்வளவு செல்வாக்கு இருக்குனு நினைக்கறீங்க சும்மா அப்பிடின்னு தலையை அசைச்சாங்கன்னா PMO officers எல்லாரும் கட்டுப்படுவாங்க . இந்த scholarship -- defence அகாடமி/ NIA கட்டுப்பாட்டுல இருக்கு defence அகாடமி அம்மா ஒரு முக்கிய தலைவி -ஆமாம் அதுனால நீங்க சொன்னா முடிஞ்சாச்சுனு அர்த்தம். நான்                 [யூனிவர்சிட்டி நாமினி]   சொல்லக்கூடாது ஆனா opinion கேப்பாங்க கொடுக்கலாம்னு ஆதென்டிகேஷன் சொல்லிட்டா முடிச்சுடுவாங்க நீங்கபேசிப்பாருங்க   எல்லா டீடைல்ஸ்சும் கிடைக்கும் .

ஏய் நம்ப வேதாந்தம் ஒய்ப் பா அவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்காங்க என்று மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டார் மாடசாமி . ரா.சா "ஆமாம்" என தலை அசைத்தார்

சரி தெளிவா அதையும் விசாரிச்சுடறேன் , என்றுசுபி யிடம் சொல்லிவிட்டு, மாடசாமியிடம்  நீ அவங்க கேட்டதெல்லாம் ரெடி பண்ணி செவ்வாய்க்கிழமை கொண்டு வா மிச்சத்தை படிப்படியா முடிச்சுடலாம் எல்லாம் பெருமாள் பார்த்துப்பார் என்று ரா சா சொல்லி அனைவரும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

தொடரும்    ராமன் 

No comments:

Post a Comment

IS IT A MEAN ITEM? ASS / DONKEY

  IS IT A MEAN    ITEM?   ASS / DONKEY     As and when convenient, we use the term Ass or Donkey as the case may be. In either case the an...