WHY IS CINEMA INFIRM ?-3
சினிமா ஏன் தள்ளாடுகிறது?-3
ஒன்றை சரியாகப்புரிந்துகொண்டால் , சினிமா தள்ளாடாமல் வேறென்ன செய்யும் என்ற வினாவே எஞ்சி நிற்கும் .ஏனெனில் அது மிகவும் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டு , நேரவிரயம் தவிர்க்கப்பட்டு, குறித்த காலத்தில் படம் அரங்குகளுக்கு வருவதை உறுதி செய்தால் தான் சரிவிலிருந்து மீள முடியும். மேலும் ஆளுமை மிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்,இனியும் இங்கு பணிபுரிதல் கடினம் என்றுணர்ந்து ஈட்டிய பொருளை ஈட்டிக்காரனுக்கு தரக்கூடாது என்று தீர்க்கமான முடிவெடுத்து, அனாவசிய ஆடம்பரங்களையும், திறப்புவிழாக்களையும் தந்தால் மீள்வது துர்லபம் என்று உணர்ந்து , நல்ல சீராக இயங்கக்கூடிய தொழில்களில் முதலீடு செய்து விளம்பரமின்றி வாழ்கின்றனர். இதற்கிடையே சினிமா என்பது செல்வத்தில் திளை க்கவும்,, 5 ஸ்டார் உணவும் , மங்கையரும் என்று நம்பிய சில இள ரத்த திடீர் பணக்காரர்களும் , திரைரத்துறையில் முளைத்து , செலவினங்களின் தேவையும் கட்டுப்பாடும் அறியாமல் தயாரிப்புத்தொழிலில் இறங்கி, தகுதி நிர்ணயம் செய்யும் திறனும் இல்லாமல், பணத்தை வாரி இறைத்து, கோண முக மனிதர்கள் வெற்றி ஈட்டித்தருவார்கள் என்று நம்பி, நளினம் இல்லாமல், மீசை முறுக்கும் ஆண்களை நாயகர்களாக்கி, , படத்துக்குப்படம் அதிக ஊதியம், அதீத உணவு என்று செலவு செய்து, 5 படங்களின் பட்ஜெட்டில் முக்கால் படம் நிற்க மேலும் வட்டிக்கு வாங்கி, விழி பிதுங்கி தனி ஊசல் ஆனவர்கள் எண்ணற்றோர். அவர்கள் செத்த மீன்களாக கரை ஒதுங்க, நாயகர்கள் மேலும் மேலும் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள ,ஈ ஈ ஈ என்று பல்லிளிக்கும் தயாரிப்பாளர் இருக்கும் வரை, கடனும் கவலையும் மேலோங்கி, , பணத்தை மீட்டெடுக்க அரைகுறை ஆபாசங்கள், மலிவான நடனங்கள் என்று மேலும் மேலும் தரத்தை சீரழித்து , தாரத்தின் மாங்கலியத்தை அடகு வைத்து , படம் எடுப்பவர்களால் ரசனை கெடுவதையும், நடிகனின் ஆதிக்கத்ததை தடுக்கவும் இயலாது. இவற்றையெல்லாம் விட படு கேவலமான வகைகளில் பணத்தை இழப்பதும் அன்றாட நிகழ்வு . கோடிகளில் புரளும் நடிக, நடிகையர் யாருக்கேனும் , மாதம் 19-20, 000/- ஊதியம் தரும் முறையாகத்தேர்வு செய்யப்பட ஏதோ ஒரு பதவியில் அமர்ந்து பணியாற்றும் திறன் உண்டா என்பதை ஆய்ந்து உணர்ந்தாலே என்ன பராக்கிரமத்திற்கு இப்படி கோடிகளில் ஊதியம்,கார், பங்களா மங்கையர் கும்பல் என்று இவர்கள் மீது முதலீடுசெய்யப்படுகிறது என்று எண்ணிப்பார்க்கத்தோன்றும் . ஊதியப்பணியில் 4 மணி நேரம் கூட தாக்குப்பிடி க்க இயலாதவர்கள் இங்கே கோலோச்சுகின்றனர். சினிமா தடுமாறாமல் என்ன செய்யும் ? இந்த அழகில் சினிமா உறு[தி]ப்படுவது கண்ணுக்கெட்டிய விளிம்பு வரை தெரியவில்லை.. ஒரு அடிப்படை விதி : முடி திருத்தும் தொழில் உள்ளிட்ட எந்தத்தொழிலுக்கும் தொழில் சார்ந்த ஆளுமை அவசியம் சினிமா மற்றும் அரசியல் இரண்டிற்கும் கல்வி, குடும்ப கெளரவம், சொல்தவறாமை இவை இடையூறுகளே. பொய் , பித்தலாட்டம், கேளிக்கை , விருந்து மகளிர் கூட்டம் என இவையே முக்கிய தகுதிகள். எனவே தகுதி அற்ற செல்வந்தனிடம் கூத்து கும்மாளம் இவை தவிர வேறென்ன நிலைப்படும். வெகு விரைவில் ஓட்டாண்டிகளாக ஊருக்கும் திரும்ப இயலாமல் வாழவும் வழியின்றி மரக்கிளையில் தொங்குவதே , துயருக்கு விடை என்றெண்ணி உலாவரும் புற்றீசல்கள் தான் தயாரிப்பாளர்கள். சினிமா தடுமாறாமல் என்ன செய்யும்.?
மேலும் பார்ப்போம் அன்பன் ராமன்
சொல்தவறாமைக்கு சின்னப்பாதேவர்
ReplyDeleteதொழில் சார்ந்த ஆளுமைக்கு பாலச்சந்தர் , ஶ்ரீதர் ,பாலுமகேந்ரா போன்றோர் இருந்தால் சினிமா துறை நலிவடையக்காரணம் இல்லை
வெங்கட்ராமன்