Thursday, March 2, 2023

SAMIs COME TOGETHER -3

 SAMIs COME TOGETHER -3

சாமிகள் சங்கமம் -3

ராமசாமி, வேதாந்தம் போன் நம்பரை எங்கோ வைத்து விட்டார்.                                                                      சுபி க்கு போன் செய்து வித்யா மாலினி நம்பர் வாங்கிக்கொண்டார். இரவு 7.15 க்கு போன் செய்து வித்யாவிடம் பேச முயன்ற ராமசாமிக்கு உடல் வியர்த்தது, என்ன பேசுவதென்றே புரியவில்லை, குரலில் ஒரு நடுக்கம் , வேதாந்தம் இருக்காரா -நான் சீரங்கம் ராமசாமி பேசறேன் SORRY TO DISTURB  YOU  AT THIS TIME என்று நடுங்கியவாறே பேச வித்யா பயந்து விட்டாள் ;

என்ன சார் உடம்பு சரியில்லையா ஏன் ரொம்ப தயங்கிபேசறேள் ? நான் உங்க தங்கை மாதிரி சும்மா சொல்லுங்கோ -அவர் 3 நாள் ஹரியானா போயிருக்கார் புதன் ராத்திரி வருவார் ஏதாவது சொல்லணு மா எனக்கு சொன்னா  நான் போன்லேயே சொல்லிடறேன் அவர் ஒன்ணு ம் நெனச்சுக்க மாட்டார்” என்று தெம்பூட்டினாள் . இப்போது ராமசாமிக்கு மேலும் தயக்கம் அதிக மாயிற்று -பல காரணங்கள்.

இது வரை யாரிடமும் இவ்வளவு பெரிய உதவி கேட்டதில்லை , பிற பலர்க்கும் உதவியிருந்தாலும் தனக்கென்று பேசியதில்லை [வித்யா  வை பொறுத்தவரை] மாடசாமி முற்றிலும்  புதிய முகம் அவருக்கென்று பேசுவது அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடுமோ என்று உள்ளூர கவலை ராமசாமியை வாட்டியது] . வேறு வழியில்லை பெருமாள் மீது பாரத்தை வைத்துவிட்டு பேசினார் ரா.சா .

அம்மா கோவிச்சுக்கப்படாது வேற வழியில்லாம ஒரு நண்பனுக்காக யாசகம் கேக்கறேன் , தப்புன்னா  மன்னிச்சுடுங்கோ -தண்டிச்சுடாதீங்கோஎன்று பூர்வபீடிகை வைத்து துவங்கினார். ராசா.

“சார் ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்கோ எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு உங்கள தண்டிக்கறது தெய்வத்துக்கே முடியாத காரியம் , நீங்க செஞ்ச உதவிக்கு எந்த வகையிலும் எங்களால ஈடு கட்ட முடியல , உங்கள தண்டிக்கணும்னு நினைச்சாலே 7 ஜென்மத்துக்கு பாவம் வந்துடும் , PLEASE  FEEL  FREE என்னால ஆன உதவியை நிச்சயம் செய்றேன்என்று உறுதி அளித்தாள் . ஆயினும் ராமசாமி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கோரிக்கை வைத்தார்.. “இங்க யூனிவர்சிட்டி Traditional Art  PG ஒரு பெண்குழந்தைக்கு நீங்க sponsor பண்ணித்தர முடியுமா னு  கேக்க வந்தேன். என் யோக்கியதைக்கு இதெல்லாம் நான் பேசக்கூடாது தான், ஆனாலும்  நண்பனுக்காக  கேக்கறேன் -கஷ்டம்னா வேண்டாம் உங்க பதவி கௌரவம் என்னால பாதிக்கக்கூடாது , அதுனாலதான் முதல்லயே மன்னிப்பு கேட்டுட்டேன் தெரியாத்தனமா உங்களுக்கு என்னால அபவாதம் வந்துடுமோனு பயமா இருக்கு. நீங்க ரொம்ப முக்கிய பதவில இருக்கேள் னு சுபத்திரா சொன்னா அதுனால உங்களாலே  கைகூடும்னு நம்பிக்கை வெச்சு பேசறேன்” என்றார் ராமசாமி .

கட கட கட என்று போன்லேயே சிரித்தாள் லேசர் வித்யா.                                            ஐயோ அண்ணா இது ரொம்ப சாதாரண விஷயம் இதுக்கு போய் மன்னிப்பு அது இதுனு பேசி எனக்கு எவ்வளவு அழுகை வந்தது தெரியுமா? முதல் தடவையா எங்க அண்ணா பேசறேள்னு சந்தோஷப்பட்டவளை என்ன பாடு படுத்திட்டேள்  , இனிமே அப்படி பேசாதீங்கோ ரொம்ப வேதனையா இருக்கு "என்றாள்  வித்யா

ராமசாமிஇல்லம்மா நீங்க ரொம்ப பெரிய அதிகாரி நான் சாதாரண ரயில்வே ஊழியன் எல்லை உணர்ந்து பேசினேன் அது தப்பா? -வருத்தமோ கோபமோ வேண்டாம்” என்றார்  ரா. சா

“அதிகாரி அது இது எல்லாம் எதுக்கு?  உங்களுக்கு , friend பொண்ணுக்கு SPONSOR   பண்ணனும் அவ்வளவு தானே . பண்ணலாம் ஒரு கஷ்டமும் இல்ல ; சுபத்திராவுக்கே இதெல்லாம் தெரியுமே அவா சொல்லலியா” என்று கேட்டாள் வித்யா மாலினி.

“அவ சொன்னா ஆனா உங்கள ஒரு வார்த்தை கேட்டு அப்புறம் அப்ளை பண்றது நல்லது இல்லையா அதுதான்” என்றார் ரா. சா

அப்ளை பண்ணுங்கோ ஆனால் நன்னா யோசிச்சு சொல்லுங்கோ ஏன்னா ,sponsor பண்ணினா scholarship கிடைக்காமல்  அல்லது amount  குறைவாக போய் விடலாம். MERIT செலக்ட் ஆயிட்டா நல்ல பயன்பெற வாய்ப்பு இருக்கும்; நான் ஒண்ணு  பண்றேன் ; SPONSORSHIP போட்டு வெக்கறேன் , தேவைப்பட்டா USE பண்ணிக்கலாம், மெரிட் கோட்டால வந்துட்டா ள் னா sponsor பண்ணாம விட்டுடலாம். அதுனால உங்க FRIEND கிட்ட POSITIVE சொல்லுங்கோ.    குட் லக்” என்றாள்

“அம்மா அந்த  FRIEND வேதாந்தக்கும் CLASSMATE தான் என்று சொல்லி 'மாடசாமி' ன்னா  வேதாந்தக்கு நன்னா தெரியும்”.. என்றார் ராமசாமி

“எனக்கே தெரியுமே அவரை. ரயில்வே பிரம்மாண்ட மீசை TTE தானே. நாங்க போன தடவை TRICHY  வரச்சே அவரிவரோட பேசினார் ;நல்ல டைப் -ROUGH EXTERIOR , SOFT and SUPPLE  by  heart”    என்று பாராட்டினாள்.

 பெருமாள் மீது பாரத்தைப்போட்டு செய்ய வேண்டியதை செய்து விட்டது கழுகு

தொடரும்           அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...