Saturday, March 4, 2023

SAMIs COME TOGETHER -4

 SAMIs COME TOGETHER -4

சாமிகள் சங்கமம் -4

இப்போது இரவு 8.10

ராமசாமி மாடசாமிக்கு போன் செய்து 'டேய் அந்த லேடி கிட்ட பேசிட்டேன் ஸ்மூத்தாக முடிச்சுடலாம்னு ரொம்ப தெம்பு குடுத்திருக்காங்கடா ; மற்றபடி நீ தயார் பண்ண வேண்டிய எல்லாத்தையும் செவ்வாய் மாலைக்குள் கொடு எல்லாம் வரிசையா நடக்கும் , நல்லா மீசையை முறுக்கிக்கோ என்றார் ரா. சா

"போடா போ  மீசையை முறுக்கறதா --நானே இங்க கதி கலங்கி உக்காந்திருக்கேன்" -மாடசாமி

என்னடா ஆச்சு உனக்கு ? ராமசாமி

"நீ பாட்டுக்கு அந்த ப்ரொபசர் அம்மாவை , தங்கச்சிய கூட்டிக்கிட்டு வர மாதிரி கோயிலுக்கு வரவெச்சுட்ட ; யூனிவெர்சிட்டில யாரைக்கேட்டாலும் அந்த அம்மா பேரை சொன்னா கிடு கிடு னு நடுங்கறாண்டா. நீ எப்பிடிடா சர்வ சாதாரணமா எல்லாரையும் ஆட்டி வெக்கற , நீ மஹா எத்தன்  டா  "என்றார் மாடசாமி

'நீயும்தான் பலபேரையும் நடுங்க வெக்கற .அன்னிக்கு என் ஒய்ப் காபி கொண்டுவா ன்னா ஐயோ நான் வரல்ல அந்த மீசையைப்பாத்தாலே கதி கலங்குது -அம்மாடி பயம் னு வெருண்டு கன்னுக்குட்டி மாதிரி ஓடறா" என்றார் ராமசாமி

 "வெருண்டு ஒடுவாங்க , நீ சொன்ன எடத்துல எல்லாரும் நிக்கறாங்களே அது தாண்டா பெரிய விஷயம் . எப்படியோ உன்னை மாதிரி நண்பர்கள் வாய்ச்சதாலே கவுரவமான இடத்துக்கு வந்துட்டேன் எங்க சொந்தங்களுக்கும் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்றேன் , வெறும் மீசையை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியாதுடா , ட்ரெய்ன்ல வர ரௌடிப் பசங்கள அரட்டி  உருட்டறதுக்குத்தாண்டா இந்த மீசை.  எனக்கு மட்டும் உங்களைப்போல இருக்கணும்னு ஆசை இல்லையா  ஏதோ தொழிலுக்கு போடற வேஷம் டா வேற ஒண்ணும் இல்லடா . உனக்கு எப்பிடி நன்றி செலுத்தப்போறேன் னு தெரியல்லடா , சீக்கிரம் எல்லா பேப்பரையும் ரெடி பண்ணிட்டு கொண்டு வரேன்"                                                                                                                         என்று போனிலேயே நன்றி சொன்னார் மா டசாமி

மணி 8.30 அம்ஜம் ஊஞ்சலிலேயே சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் . பூனை மாதிரி ராமசாமி மெல்ல கிச்சனில் புகுந்து தேடி பிடித்து சப்பாத்தியையும் காலிஃளார் குருமா வையும் ஒரு பிடி பிடிக்க போன் ஒலித்தது ;மணி 8.40                 சார் சுபத்திரா என்றது குரல். ஏன் இன்னிக்கு நீ சொரத்தாவே பேசல்ல என்றார் ரா.சா

அதுக்கு தான் சார் நானே இப்ப கூப்பிடுறேன் ; நான் ஏதோ ஒப்புக்கு பதில் சொன்னதாக நீங்க நினைத்திருக்கலாம்                                                                                                   ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழல். அதுனால என்னுடைய பேச்சு எழுத்து நடமாட்டம் எல்லாத்தையும் கவனிச்சு என் மேல குற்றம் சுமத்தி கவர்னர் ஆபீஸ் க்கு மகஜர் அனுப்ப துடியாத்துடிக்கிறாங்க. வேற ஒண்ணு ம் இல்ல சார் இந்த TRADITIONAL ART COURSE , GOVT .OF INDIA மேற்பார்வைல சிறப்பா நடக்குது அதுல மச்சினிக்கு சீட் , ஓர்படிக்கு ஸ்காலர்ஷிப் நீங்க வாங்கித்தாங்க னு ஏகப்பட்ட பிரஷர். அதெல்லாம் எதுவும் முடியாது உங்களால ஆனதைப்பாருங்க , தப்பான அட்மிஷன் போட்டா எல்லாரும் மாட்டிக்கிட்டு அலையனும் சம்பளம் பென்ஷன் எதுவும் வராதுன்னு கறாரா சொல்லிட்டேன்.

அதுனால எங்கயாவது மாட்டுவேனான்னு அலையறாங்க அதுனால தான் வீட்டுக்கோ , யூனிவெர்சிட்டிக்கோ வரவேண்டான்னு சொல்றேன். ஆட்டோமேட்டிக் செலக்ஷன் பசங்களுக்கு நல்ல உதவித்தொகை , நல்ல மார்க் + SPONSOR னா அமௌன்ட் குறையும்.  ஸ்காலர்ஷிப் இல்லாம கூட SPONSOR வாங்கலாம் ஆனா defence academy ஒத்துக்கணும் நம்மூர் அரசியல் வாதியெல்லாம் கிட்டயே வரமுடியாது அதுனால கடுப்புல சும்மா கம்பளைண்ட் எழுதிக்கிட்டே இருக்காங்க .Enquiry வெச்சா எதுவும் உருப்படியா பேசத்தெரியாது .சும்மா வாழ்க , ஒழிக னு கூச்சல் போடத்தான் தெரியும். ஆனால் நல்ல ஸ்டூடண்ட்ஸ் க்கு சரியான சப்போர்ட் .

அந்தப்பொண்ணுக்கு தேவையான மெரிட் இருக்கு ஸ்காலர்ஷிப்ப்பே கூட கிடைக்கும் . இதெல்லாம் நம்ப மண்டபத்துல பேச வேண்டாம்னு இப்ப பேசறேன். மன்னிச்சுக்கோங்க என்று விளக்க ராமசாமி,          சுபி பயங்கர ஆளுமை மிக்கவள் என்றுணர்ந்து நன்றி தெரிவித்தார்.                       

தொடரும்           அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...