Thursday, April 6, 2023

RENGAA RENGAA- 10

 RENGAA RENGAA- 10

ரெங்கா ரெங்கா -10

நினைத்தபடி வெள்ளி இரவு ராக்போட் வண்டியில் புறப்பட்டது ரயில்வே கோஷ்டி. மாடசாமி டிக்கட் செக் பண்ணிட்டு வரேன் என்று கிளம்ப , ராமசாமி டேய் போர் அடிக்குதுடா என்றார்.

மாடசாமி சொன்னார் இதோ அந்த சீட் என்னோட கருப்பு கோட் இருக்கு அதை எடுத்து மாட்டிக்க , நீயும் என்னோட டிக்கட் டிக்கட் என்று கத்திகிட்டே வா, அதுக்குள்ள சீரங்கம் வந்துரும் உங்கூர் மாமிகள் வருவாங்க உனக்கு தான் எல்லாம் அத்துப்படியே அந்த மாமிங் களோடஅரட்டை அடிச்சுக்கிட்டே வா , அவன் பார் [ ரெ ] தூங்கிட்டான் -நீ போர் அடிக்குதுங்கற என்று ராமசாமியை கிண்டல் அடித்தார் மாடசாமி .  இந்த இடத்துல 4 சீட் பிடிச்சு போட்டிருக்கேன் நம்ப 3 பேர் தான் இருக்கோம் உனக்கு கை குறையுதுன்னா ஒரு மாமியைப்பிடிச்சு ஒரு சீட்ல இடம் குடுத்து அரட்டை அடி நான் வந்தூர் ரென் என்றார் மா சா. டேய் வேணாம் வேணாம் மாமிக்குப்பதிலா நான் வரேன் னு மாமா வந்து நம்பள அறுப்பான் இந்த வேலையே வேண்டாம் நீ போயிட்டு வா நான் தூங்கறேன் என்றார் ராமசாமி . அப்படி வா வழிக்கு நான் போயிட்டு கட கடனு வேலைய முடிச்சுட்டு வரேன் . எல்லாம் ஸ்ட்ரெயிட் டிக்கட் தான் சீரங்கத்தோட வேலை முடிஞ்சுடும் நானும் தூங்க வந்துருவேன் நல்ல தூங்கு எவனாவது ஏதாவது கேட்டா என் பேரை சொல்லு செதறி ஓடிருவான் , தூங்கு வந்துர்றேன் என்று பேப்பர்களுடன் கிளம்பி மள னு சுறுசுறுப்பா வேலையில் இறங்கினார் மாடசாமி .  மா சாவின் சுறுசுறுப்பே தனி அழகு. சீரங்கம் தாண்டி 12 நிமிடங்களில் எல்லா செக்கிங்கும் முடித்துவிட்டு பைலை பெட்டியில் போட்டு பூட்டி விட்டு , தூங்காமல் கிடந்த ராமசாமியை இந்தாடா சூடா பால் சாப்பிடு என்று flask இல் இருந்து ஊற்றிக்கொடுத்தார் மா சா. ஏதுடா பால் என்றார் ராமசாமி . தில்லைநகர்ல ஒருத்தர் நைட் ஷாப் வெச்சிருக்கார் பால் சூப்பரா தருவார் சாப்பிட்டு பார் என்றார் மாசா ,டேய் நிஜமாவே சூப்பரா இருக்குடா பால், தேங்க்ஸ் என்று ராமசாமி நண்பனின் பாசத்தை எண்ணி மகிழ்ந்தார். மா சாவும் பால் அருந்தி பிளாஸ்க்கை கழுவி வைத்து விளக்கை அணைத்து கதவினைப்பூட்டி படுத்துவிட்டார்.

செங்கல்பட் வரும் நேரம் கண் விழித்தார் மாடசாமி . தெரியாத்தனமாக இருவர் செங்கல் பட்டில் வண்டி ஏறினர். வாங்கடா இங்க எங்க ஏர்றீங்க என்று மாடசாமி பிடித்து எடுங்கடா டிக்கட் பாப்போம் என்றார். மலங்க மலங்க விழித்தவங்களை ஆளுக்கு 2 அறை விட்டு பெட்டியில் இருந்து இறங்க வைத்தார் மாசா. இப்படித்தான் ரிசர்வேஷன் பகுதியில ஏறி பாசஞ்சர் பெட்டியைத்தூக்கிக்கிட்டு தாம்பரத்துல இறங்கி ஓடிரு வானுங்க என்று பயணிகளிடம் எச்சரித்தார் மாசா. . தாம்பரத்தில் பெரும் கூட்டம் இறங்கியது , இன்னோர் கூட்டம் மாம்பலத்தில் இறங்கியதும் நுங்கம்பாக்கம் பகுதியில் இருவரையும் எழுப்பி , பல் துலக்கச்சொல்லி தானும் பல் துலக்கி எழும்பூர் நிலையத்தில் இறங்கி மாடியில் சூப்பர் ரூம் பிடித்து உடமைகளை வைத்து விட்டு எதிர்ப்புறம் வசந்த பவனில் சூடாக காபி அருந்தி பின் மூவரும் வெந்நீர் குளியல் முடித்தனர் தம்பி அந்த ரயில்வே ஆடரைக்கையிலஎடுத்துக்க என்றார் மாசா.  கீழே இறங்கியதும் தனது ஆஸ்தான ஆட்டோவை பிடித்து மாடசாமி " தம்பி இந்த பீச் ரோட்லயே போய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப்போ ; சாமி பாத்துட்டு ராதா மாமி மெஸ்ஸுக்கு போவோம் நீயும் வா என்றார் மாடசாமி.

பார்த்தசாரதி கோயிலில் முதல் வாயில் தாண்டியதும் குப்பு பட்டர்போல் ஒருவர்  தென் பட்டார் ராமசாமிக்கு. “சுவாமி --தேவரீருக்கு குப்புபட்டர் னு தானே திருநாமம்” என்று ராமசாமி வினவ , பட்டர்க்ஷமிக்கணும் தேவள் யார்னு பிரஸ்தாபிக்கலாமோ?  என்றார்.

அடியேன் சுந்தராச்சாரி சுவாமி பௌத்ரன்” என்றார் ராமசாமி. ‘ஸ்வாமிக்கு ஸ்ரீரங்கமா?” என்றார் பட்டர். ஆமாம் என்றார் ராமசாமி இப்ப ஞாபகம் வரது; தேவரீர் பாட்டனார் அடியேனோட பெரிய தமயனுக்கு மாமனார் ; சரி சுவாமி திருமேனி பாங்கா?  என்று பட்டர் கேட்க , “பரம சௌக்கியம்” என்று ராமசாமி பதில் சொல்ல மாடசாமி     யு ம் கஸ்தூரி ரெங்கனு ம் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நின்றனர் வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தமிழ் கண்டு. .

பெருமாள் சேவை ஆயடுத்தா? என்றார் பட்டர். ‘இனிமே தான் தேவரீர் அனுகிரஹத்துல ஆகணும்” என்றார் ராமசாமி. . ‘பேஷா’ என்றார் பட்டர். .

மாசா , ராமசாமி காதில் கிசுகிசுக்க ரயில்வே கவரை பட்டரிடம் தந்து ராமசாமி சொன்னார். "இந்த பிள்ளையாண்டானுக்கு ரயில்வே வேலைக்கு இன்டர்வ்யூ வந்திருக்கு பார்த்தசாரதி அனுகிரஹத்துல வேலை காயமாகணும் , மூலவர் திருவடி அனுக்கிரஹம் சித்திக்க, சுவாமி உபாயம் பண்ணித்தரணும் னு அடியோங்கள் விஞ்ஞாபனம்”இந்த லெட்டர் மூலவர் திருவடி ஆக்ஞை  சித்திச்சு கிடைக்கப்பண்ணணும்" என்றார் ராமசாமி.

'ரொம்ப சந்தோஷம் , இதோ திருவடில சேத்துட்டு அர்ச்சனை பண்ணித்தரேன் என்றார் பட்டர்.. ராமசாமி பவ்யமாக தலை குனிந்து நின்றார்.                                     [மாடசாமி ஐயோ இவன் பலே கில்லாடி பட்டரையே ஒரு வினாடில வளைச்சுப்போட்டுட்டானே , பொம்பளைங்கள் ல்லாம் ஈஸியா பிடுச்சுடுவான் இவன் என்று மனதில் வியந்தார்].                                                                                         தீர்க்கமான அர்ச்சனை , ஸ்தலபுராணம் சொல்லி பார்த்தசாரதி மீசையை தெளிவுபடுத்த தீபம் காட்டி சிறப்பான சேவை செய்வித்தார். ரயில்வே லெட்டரை பையனிடம் பஞ்சாதி சொல்லி கையில் கொடுத்தார் பட்டர்.                                      தட்டில் 100/-ரூபாய் சம்பாவனை செய்தார் ராசா. பட்டர் வாசல் வரை வந்து வழி அனுப்பிவைத்தார்.

ஆட்டோவில் ராதா மாமி மெஸ்ஸுக்கு விரைந்தனர் மணி காலை 7.50 . பொங்கல் வடை சூடாகவும் ருசியான சட்டினி சாம்பாருடன் சுவைத்து மன நிறைவு பெற்றனர் நால்வரும்  ஆட்டோ டிரைவர் உட்பட. பேசாம டி டி இருந்திருக்கலாம் போலிருக்கே இப்படி ஊர் ஊரா வித விதமா சாப்பிட என்றார் ராமசாமி. அடுத்த இடம் மயிலை வெங்கடேச பெருமாள் கோயில் . அங்கும் நல்ல சேவை. மணி 9.20 . சரவண பவனில் காபி முடித்து 10.20 மணிக்கு ரூம் திரும்பினர். 12.30 மணிக்கு ஐயர் மெஸ்ஸுல போய் சாப்பிடுவோம். தம்பி நல்ல கவனமா இன்டர்வ்யூ பண்ணு இப்ப தூங்குவோம் என்றார் மாடசாமி.

தொடரும்      அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...