RENGAA RENGAA -11
ரெங்கா ரெங்கா -11
11-40 க்கு மாடசாமி டூட்டி ஆஃபீசரை பார்த்து தனது ரிட்டர்ன் பயணத்தை ஞாயிறு இரவு ராக்போட் ட்ரெயினுக்கு வாங்கிக்கொண்டார். அதிகாரி மாடசாமியிடம் ரொம்ப தேங்க்ஸ் சண்டே நைட் ட்ரெயின் வேண்டாம் வேண்டாம் னு ஓடறா எப்பிடி சமாளிக்க போற ன் னு கவலையா இருந்தது நீங்க சண்டே கேட்டது எனக்கு ரொம்ப ரிலீஃப் அப்பாடான்னு இருக்கு என்றார் [விழுப்புரம் நரசிம்மன் ] நேரம் காலம் சரியாய் இருக்கும் போது எது செய்தாலும் எல்லாருக்கும் பெரிசா தோணும் என்று மாடசாமி மனசில் நினைக்க மாசா வைத்தேடிக்கொண்டு ரா .சா வர , வாங்கோ ராமசாமி சார் என்றார் நரசிம்மன் [அவர் முன்னர் திருச்சி ஜங்க்ஷனில் இருந்தவர்]. ராமசாமிக்கு திரும்பிய பக்கமெல்லாம் நட்பு வட்டம். நரசிம்மனுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர் .
12 35 க்கு ஐயர் மெஸ்ஸில் மூவரும் நுழைய இப்போது ஐயரும் அவர் மகனும் அன்புடன் வரவேற்று , க ரெ வைப்பார்த்து பரீட்சை பாஸ் பண்ணிட்டேங்களா என்று ஐயர் மகன் விசாரிக்க க ரெ , ஓ என்று தலை ஆட்டினான். இன்னிக்கு காலி ப்ளவர் ப்ரை , மற்றும் மிளகு ரசம் [ஊரெல்லாம் வைரஸ் ஜுரம், அதுக்கா கவே இது ] இந்த சார் புதுசா இருக்கார் உங்க சொந்த அண்ணாவா ? என்று ராமசாமி குறித்து வினவ , மாடசாமி எங்க அண்ணா , குரு , வழிகாட்டி எல்லாம் னு சொல்லலாம் என்றார். இன்னிக்கு மெஸ்ஸுக்கு கூட்டம் லேட்டா தான் வரும் எல்லாம் நங்கநல்லூர் உத்சவம் பாக்க போயிருக்கும் 2.30 க்கு மேல தான் வரும் . அப்புறம் இன்னிக்கு சாயங்காலம் கடை லீவு , நீங்க வேற எங்கயாவது பாத்துக்கறேளா இல்ல உங்களுக்கு மட்டும் ஏதாவது பண்ணி தர சொல்லட்டுமா என்றார் பெரியவர். புதுசா மனுஷா வர நாள் ல இப்பிடி நேர் ரதே னு எனக்கே வருத்தமா இருக்கு. சம்பளக்காராளுக்கு இன்னிக்கு லீவு விடறதாக தீர்மானிச்சாச்சு , அவனவன் கிளம்பத்தயாரா ரெடியா இருக்கான். 3.30- 4 மணியோட சவாரி விட்ருவாங்கள் என்றார் அய்யர்..
மாடசாமி சொன்னார் ஒன்னும் வேணாம் சாமி , இவனுக்கு இன்டர்வ்யூ 2.00 மணிக்கு [ரயில்வே ஆஃபீஸ் ல ] அவனுக்கு உங்க கையால சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க. அப்படியா சரி நானே பரிமாற ரே ன் . ஆங் சொல்ல மறந்துட்டேனே கல்கத்தா லே ந்து நம்ப சொந்தக்காரன் சுந்தரம் வந்திருக்கான். சாப்பாடு கொண்டுவரச்சொல்லிருக்கான் , நான் தான் போகணும் [மெல்லிய குரலில் அவன்தான் இன்டர்வ்யூ கமிட்டி ச்சேர்மன்] - நான் ஒரு வார்த்தை காதுல போட்டுடறன் -யோக்கியதை சரியா இருந்தா உதவி பண்ணுடா னு சொல்லிட்டா த் தட்டாம பாத்துருவான்]. எல்லாம் மலைக்கோட்டை பிள்ளையார் சித்தம் இல்லேன்னா எனக்கு தெரிஞ்சவா எல்லாம் ஒரே காரிய நிமித்தமா இங்க எப்படி வர முடியும் ? என்று போட்டோவில் இருந்த பிள்ளையார் மற்றும் அகிலாண்டேஸ்வரி படங்களில் பார்த்து கண்ணீர் மல்க கை கூப்பினார் அய்யர். இதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம் , ஆயிரம் பேர் என்னென்னவோ ப்ராட் பண்றான் நான் வெறும் ஹெல்ப் தான் கேக்கப்போறன் அதுவும் எனக்கில்லை , சினேகிதாளுக்கு -அதுல எந்த அதர்மமும் இல்லை. என்று மிகுந்த அக்கறையுடன் பரிமாறினார் அய்யர்.
சாப்பிட்டு விட்டு உரிய தொகையைக்கொடுத்துவிட்டு புறப்பட ஆயத்தமாயினர். அப்போது அம்பீ என்று க. ரெ வை அழைத்து அவன் பெயரை கேட்டு குறித்துக்கொண்டு ரயில்வே ஆபீஸ் அதிகாரிகளுக்கு பெரிய டிபன் காரியர்களில் உணவு எடுத்துக்கொண்டு 2 சிப்பந்திகளுடன் கிளம்பினார் அய்யர். போகும் முன் க ரெ வை நன்னா இருடா கொழந்தே என்று வாயார வாழ்த்தினார் . " நன்னா இருடா கொழந்தே' என்ற வார்த்தைகள் அம்புஜத்தை நினைவு படுத்தியது இருவருக்கு.
2. 40 க்கு கஸ்தூரி ரெங்கன் அழைக்கப்பட்டான் இந்திய ரயில்வே யின் உயர் அதிகாரிகள் 4 பேர் மற்றும் இடை நிலை அதிகாரிகள் 4 பேர் , சென்னை கோட்ட நிர்வாகிகள் மூவர் [தமிழ் மட்டும் அறிந்த வர்களுக்கு உதவியாக ] அநேகமாக கேள்விகளுக்கெல்லாம் உரிய பதில் சொன்னான் க. ரெ . உனது ஆங்கில பேச்சு ஆற்றலை மேம்படுத்திக்கொள் என்றார் உயர் மட்ட அதிகாரி சுந்தரம்.. அவர் க ரெங்கனை நன்றாக அளந்து வைத்துக்கொண்டார். ஏகமனதாக அநேகருக்கு இந்தப்பையனை தேர்வு செய்யலாம் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது . SHOULD WE CALL HIM AGAIN TOMORROW ? என்று அதிகாரிகளுக்குள் பேசிக்கொண்டனர். . அப்போது சுந்தரம் [சேர்மன்] சொன்னார். “The boy is eminently suitable ; but as a committee "we should not be accused of partiality or favouritism , we will duly screen all the best eligible candidates” . So, we will ask him to face the 'hands on ' session tomorrow ".
OK என்றனர் ஏனையோர் .சென்னை கோட்ட அதிகரி தங்கவேலு "தம்பீ நீங்க காலை 11.00 மணிக்கு ஒரு சிறிய ட்ரெயினிங் செக் அப் அட்டெண்ட் பண்ணுங்க என்றார்
சரி சார் என்று வணங்கி விடை பெற்றான் கஸ்தூரி ரெங்கன் சுந்தரம் அவனை ஏற இறங்க பார்த்தார். வணங்கி விடை கொடுத்து அனுப்பினார் சுந்தரம்.
4.00 மணிக்கு ரூமுக்கு வந்து நடந்தவற்றை இரண்டு சாமிகளுக்கும் தெரிவித்தான் கஸ்தூரி ரெங்கன்,
மணி 4. 15 ஏண்டா என்னமோ ஜீராபோளி , ராயர் மெஸ் ஸுனு என்னை கிளப்பினயே இப்ப மூச்சு காட்ட மாட்டேங்கறே நீ எத்தன் டா டேய் என்றார் ராமசாமி. “ நானாடா எத்தன் , நீ எமகாதகன் டா “. -- மாடசாமி
இப்ப என்ன ஜீரா போளி தானே போவோம் வா என்றார் மாசா. அதெல்லாம் இல்ல , ராயர் மெஸ் அது தான் எனக்கு போகணும். . அதென்ன ராயர் மெஸ் முக்கியமா , போளி முக்கியமா என்றார் மாசா
ரா சா " போளி , கீளி ளெல்லாம் ராயருங்கள அடிச்சுக்க முடியாதுடா என்றரர் . அப்பிடியா என்றார் மாடசாமி. ரா சா கேட்டார் “.ஒனக்கு ஞாபகம் இருக்கா நம்ம க்ளாஸ் ல ராகவேந்திரன் ரகோத்தமன் என்று 2 பேர் இருந்தானே ? ராகவேந்திரன் தெரியுது இன்னொர்த்தன் ? என்றார் மாசா . வாயில முன் வருசையிலேயே 20 பல்லோட இருப்பானேடா அவன் தான் டா ரகோத்தமன் . அவனுக ரெண்டு பேரும் சரியான போளிப் பண்டாரங்கடா . சும்மா விளையாட்டா போளி குடுறா னு கேட்டால் இத்துனூண்டு பிச்சு குடுத்தாண்டா , என்ன டேஸ்டு அம்மாடியோவ், இப்ப நெனச்சாலும் ஆசையா இருக்குடா என்றார் ராமசாமி . அடுத்த 20 நிமிடங்களில் 4.40 க்கு மைலாப்பூர் ராயர் மெஸ்ஸில் மூவரும் ஆஜர் .
ராயர் --ஜீரா போளி தரட்டுமா என்றார் . குடுங்கோ என்றார் ராமசாமி. அது என்ன நெய்யா தேனா , இரண்டுமா அப்படி ஒரு சுவை தலைக்கு 4 போளியை உள்ளே தள்ளி விரலை நக்கினர்.. ஒரு தட்டில் ராயர் புது மிக்ஸ்சர் தந்தார் அற்புதமான சுவை. இந்த கடையை எப்பிடிடா பிடிச்ச என்றார் ராமசாமி.
உன்ன மாதிரி எங்க பாட்ச் அய்யருங்க இங்க வாங்க சார் னு அடிக்கடி கூட்டிக்கிட்டு வந்து நான் இப்ப உங்கள கூட்டிகிட்டு வந்திருக்கேன். பின்னர் காபி அருந்தி மன நிறைவுடன் நாளைக்கும் வரலாமா என்று ராமசாமி மாடசாமியைக் கேட்க, சார் நாளைக்கு காலம்பரையோட லீவு சார் சன் டே இல்லையா என்றார் ராயர். ராமசாமி முகம் வாடியது . நாளைக்கு வேற ஒரு இடம் போவோம் டா என்றார் மாடசாமி .
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment