Monday, April 10, 2023

RENGAA RENGAA -12

RENGAA RENGAA -12

ரெங்கா ரெங்கா – 12

ஞாயிறு காலை 5. 40 க்கு குளித்து விட்டு பஸ்ஸில் மூவரும் அடையார் பத்மநாபசுவாமி தரிசிக்க கிளம்பினார். 6.30 க்கு, அடையார் ஜங்க்ஷனில் பரமேஸ்வர ஐயர் தள்ளு வண்டியில் காபி வியாபாரம்.

மாட சாமி முகம் கண்டதும் இப்பல்லாம் வரதே இல்ல மறந்துட்டேள் என்றார் பரமேஸ்வர ஐயர் . அற்புதமான காபி சுடச்சுட கள்ளிச்சொட்டு காபி வகை , மூவரும் மெய் மறந்து காபி அருந்தினர் 3 X  12 = 36 ரூபாய் தாங்கோ என்றார் ஐயர்.

ராமசாமிடேய் இன்னொரு காபி சாப்புடுவோம் டா” என்றார். சரி என்றார் மாடசாமி . ஆனால் இரண்டாவது காபியை ராமசாமி வாங்கித்தந்தார்.

 மாசா " சாமி காலைல டிபன் எங்க நல்லா இருக்கும் என்றார். இதென்ன கேள்வி? நானே சுந்தராம்பாள் மெஸ் னு வெச்சுருக்கேனே -நல்ல குவாலிட்டிக்கு நான் பொறுப்பு. கடை பத்மநாப ஸ்வாமி கோயில் பின் தெருவுல இருக்கு . 7. 30 க்கு ஆரம்பம் , காபி கடை ஆனதும் நானும் அங்க வந்துடுவேன் கண்டிப்பா வாங்கோ என்றார் பரமேஸ்வர ஐயர் [ இது தாண்டா கும்பிடப்போன தெய்வம் குறு க்க வந்ததுங்கறது என்றார் ராமசாமி ]

திருவனந்தபுரம் போலவே மூன்று வாசல் , நீண்ட நெடும் மூர்த்தி பத்மநாபன் . மனம் நிறைந்த சேவை . ராமசாமிக்கு கோபம் கொப்பளித்தது "கோயிலுக்கு அரை ட்ராயர் மாட்டிக்கிட்டு சாக்கடை அள்றவன் மாதிரி வாரான் கேட்டா அடையார்லயே நாங்க 4 தலை முறையா இருக்கோம்பான் -தரித்திரப்பயலுக" என்று கொதித்தார் ராமசாமி . "சென்னையே ஒரு அரை ட்ராயர் பட்டணம் டா "என்றார் மாடசாமி

நல்ல சேவைக்குப்பின் ஐயர் மெஸ்சிலும் சேவை   [இடியாப்பம் + தேங்காய்ப்பால் +ஏலக்காய் ] தேவாம்ருதமாக ருசித்தனர். மாடசாமி இப்போது பெரும் தலைவன் போல் தெரிந்தார் நண்பர்களுக்கு. டேஸ்ட் பிடிச்சிருக்கா என்றார் ஐயர். பிடிச்சுருக்காவா எங்களுக்கு சேவை மேல பைத்தியம் பிடிச்சிருக்கு என்றார் ராமசாமி . ஐயர் மகிழ்ந்தார்.

சாமி அப்ப நாங்க கிளம்பறோம் என்றார் மாடசாமி ; நல்லது எப்பெல்லாம் முடியறதோ வாங்கோ, உங்கள மாதிரி பழைய கஸ்டமர்கள் இருந்தா எங்களுக்கும் வியாபாரத்துக்கும் நல்லது என்று கை கூப்பி விடை கொடுத்தார் பரமேஸ்வர ஐயர்.   வா போலாம் என்று கிளம்ப கஸ்தூரி ரெங்கனுக்கு ஒரு சிறிய சபலம் . சார் இங்கேயிருந்து அண்ணா நகர் கிட்டக்கயா என்றான் மாடசாமியிடம். மாடசாமி சொன்னார்   ரா. சாவிடம் டேய் உச்சி இவன் என்ன கேக்கறான் பாத்தியா அதுக்குத்தான் நீயும் வாடா னு ஒன்னை இழுத்துக்கிட்டு வந்தேன் -இப்பிடி ஏடா கூடமா எதையாவது பண்ணிப்பிடுவான்னு தான்என்றார் மாடசாமி  .

 ராமசாமிக்கு பளிச் என்று புரிந்துவிட்டது. காலை ஒடைச்சுடுவேன் நேர இன்டெர்வியூ , ரூம், எங்களோட தான் நீ இருக்கணும், ஓர்படி ஒண்ண றைப்படினு  எங்கயாவது கிளம்பின ட்ரெய் ன் லே ர் ந்து தள்ளி விட்டுருவேன் . எத்தனை தடவ சொல்லிருக்கேன் சுய மரியாதையை காப்பாத்திக்கோ னு. போன மாசம் ஸ்ரீரங்கம் வந்தாங்களே  உங்கள எட்டிப்பாத்தானுகளா , பூரா அயோக்கியக்கூட்டம் , மச்சினி குச்சினி னு அலையாத , நல்ல பொண்கள் தானா மாட்டும் அவசரப்படாதே என்றார் ராமசாமி . கஸ்தூரி ரெங்கன் வெலவெலத்துப்போனான் .

போன மாசம் வந்தார்களா -சீரங்கத்துக்கா என்றான் ரெ .

ராமசாமி சொன்னார் ஒரூ 40 நாள் முன்னால உங்க அப்பா வழியில ஒரு பூணல் அம்மாமண்டபம் கல்யாண மண்டபத்துல நடந்தது ஒனக்கு தெரியாது . 2 நாள் இருந்தாங்க ஒங்கள திரும்பி கூட பாக்கல.    நாங்க லேசா அசந்தா .    நீ,   அண்ணா நகர்னு ஆரம்பிக்கற . இன்னொரு தரம் இதப்பாத்தேன் ஒன்ன  நகர முடியாம காலை ஒடச்சுடுவேன் -நிச்சயம் செய்வேண்டா என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொடரும் அன்பன்  ராமன் 

1 comment:

  1. அரை டிராயர் போட்டுவரும் பெரிய மனுஷாளைக்கண்டாலே என் கண்கள் உறுத்தும்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...