Saturday, December 30, 2023

VADAAPPAA KANNAA

 VADAAPPAA KANNAA

வாடாப்பா -கண்ணா

ஸ்கூட்டரில் ஏறி ராமசாமியும் சுப்பிரமணி யும் சுமார் -4 நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தனர், ராமசாமி சுப்பிரமணிய னை அம்ஜத்துக்கு அறிமுகம் "குண்டூர்லேர்ந்து ஆபிஸ் வேலையா வந்திருக்கார் என்று சொல்லி க்கொண்டிருக்கும் போதே தரையில் விழுந்து இருவரையும் கண்ணீர் பொங்க நமஸ்கரித்தவனை வாய் நிறைய "வாடாப்பா கண்ணா" ஏன் அழற என்றாள் அம்ஜம் . உங்களைப்போல பெரியண்ணா -அண்ணி எனக்கு வாய்ச்சிருந்தா நாங்களும் சந்தோசமா காலம் தள்ளி இருப்போம் - அனுமார் எங்களுக்கு அதைகொடுக்கல, இப்பவாவது உங்களப்பார்க்கிற வாய்ப்பை கொடுத்திருக்காரே என்று நினைச்சேன், கண்ணு பொங்கிருச்ச்சு வேற நான்  அழுவல்ல என்றான் . அம்மா என்று அம்ஜத்தை அழைத்து -பழத்தை கொடுத்துவிட்டு, வீட்டுல நீங்க இருக்கீங்கன்னு எனக்கு தோணல்ல -அதுதான் பூ வாங்காம வந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசலில் கோவிந்தசாமி -அம்மா-- பூ என்றழைக்க சுப்பிரமணி பாய்ந்து ஓடி 1 முழம் மல்லிகைச்சரம் வாங்கி வந்து -அம்மா இன்னிக்கி வெள்ளிக்கிழமை -லட்சுமி மாதிரி இருக்கீங்க, இதை வெச்சுக்கிட்டு நாங்க நல்ல இருக்கணும் னு வாயார வாழ்த்துங்கம்மா என்று கை கூப்பி வணங்கினான். அவன் வார்த்தைக்கு கட்டுண்டவள் போல், தலையில் பூச்சூடி, நன்னா இருடா கண்ணா - பெருமாள் உங்களுக்கு நல்லதே செய்வார் -ஏன் கவலைப்படறே என்று அட்சதை சேர்த்து -ஆசிர்வதித்தனர் -ரா சா -தம்பதியினர்.

மாடி ரூம் க்ளீன் பண்ணி தானே இருக்கு என்று ரா சா கேட்க,                         மத்தியானமே ரெடி, பேன், பானைல தீர்த்தம், கட்டில், ரஜாய், 2 பில்லோ       1 பெரிய சோலாப்பூர் போர்வை ரெடி.  ம் மத்த குளியல் வகையறாவும் மாடில இருக்கு, கண்ணனுக்கு தானே கேக்கறேள் -எல்லாம் ரெடி -ஓடிடாதேங்கோ -காபியை சாப்பிட்டுட்டு போங்கோ என்னால மாடி எற சிரமம் -ஆர்த்ரைட்டிஸ் - வந்திண்டு இருக்கோ என்னவோ, வில்வ கஷாயம் ஆரம்பிச்சுட வேண்டியது தான் -'குருவாயூரப்பா' என்றாள் அம்ஜம்

மாடியில் நல்ல காற்றோட்டம், fan வேண்டாம் போல் இருக்கே சார் என்றான் சுப்பிரமணி , வேண்டாம் ஆனா ஜன்னலை மூடிவெக்கலைனா கொசு வரும் . அதுக்குதான் fan தேவைப்படும் என்றார் ராம சாமி. சரி அவன் என் வரலை என்று கஸ்தூரி ரெங்கன் பற்றி கேட்டார் ரா சா. அது சார் அடுத்த மாசம் ஆடிட் வருது ,அதுனால கணக்கி ல் எந்த குறையும் வராம  பி கே சார் செக் பண்றார் -டெய்லி காலை 8 மணி -இரவு 8 மணி வரை சண்டே தவிர எல்லா நாளும் .ஏன்னா பி கே சார் ஆடிட் போனா கிண்டி கிழங்கை எடுத்துருவார். அதுனால அவரை மாட்டி விடணும் னு எல்லா க்ரூப்பும் நினைக்கும் அவர் எத்தன், இவனுங்களாலே பிடிக்க முடியாது ; ஆனாலும் சின்ன பிடி கிடைச்சாமொத்தக்கும்பலும் இவரை கவிழ்க்க தயாரா இருப்பாங்க. அது சாருக்கே நல்லா  தெரியும் . போன வாரம் கஸ்தூரி சார் ஒரு 400 பக்கம் ஆடிட் பண்ணியிருந்தார் ஆனா அரை மணில மூணு தப்பு கண்டுபிடிச்சு எப்பிடி சரி செய்யணும் னு சாப்பிட விடாம 2 மணி நேரம் சொல்லிக்கொடுத்தார். கஸ்தூரி சார் ரொம்ப பயந்துட்டார் , எவ்வளவு வேகமா தப்பை பிடிச்சுடறார் என்று கதி கலங்கி நைட்ல கூட சரியா தூங்கலை . காலை 4 மணிக்கு தூங்கி, 7.00 மணிக்கு முழிச்சு எழுந்து குளிச்சு டிபன் முடிச்சு ஆபிஸ் போனா அரை மணி தான் சாப்பாடு டயம், அதுனால எல்லாரும் அலரிப்பொடச்ச்ச்சுக்கிட்டு    ஓடுவாங்க. இது ஆடிட்முடியற வரைக்கும் யாரும் நகர முடியாது -கொன்னுருவாரு. ஆனாஅடிட் முடிஞ்சப்புறம் மேலிடத்திலிருந்து அவ்வளவு பாராட்டு வரும்  எல்லாருக்கும் பெரிய பார்ட்டி தருவார், என்னையும் கூப்பிடுவார்.நான் ஆடிட்டுக்கு ஒண்ணுமே செய்ய லயே சார் னு கேட்டேன், இங்க வந்து நொய் நொய்னு தொந்தரவு பண்ணாம இருந்த இல்லியா அதுக்கு தான் னு சொல்லி -நல்லா சாப்பிடு னு சொன்னாரு சார். அவர்கிட்ட வேலை கத்துக்கிட்டா யாராலயும் அசைக்க முடியாது சார். எத்தினி பேர் ஆந்திராவில் இருக்கவங்க சாரைப்பார்த்தா தெய்வம் மாதிரி கும்பிடுவாங்க. அந்த சாருக்கு மாடசாமி சாரை ரொம்பப்பிடிக்கும் அடிக்கடி சொல்லுவார் நேர்மைன்னா மாடசாமி தான்யா னு சொல்லி பெருமைப்படுவார். நானும் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன்னு நெனக்கிறேன் -பி கே சார்கிட்ட ஒண்டிக்கிட்டு கௌரவமா வாழறேன். இப்ப கூட ஸ்டேஷன் சூப்பிரண்டு சார் கிட்ட பேசி ஸ்பெஷல் பாஸ் வாங்கி தான் என்னை அனுப்பியிருக்கார் . அவர் வேலையைகரெக்ட்டா செஞ்சா எந்த பிரச்சினையும் வராது. நானே கஸ்தூரி சார் கிட்ட நெறைய சொல்லி இங்கயே இருங்கனு நிறுத்தி இருக்கேன் இல்லேன்னா மெட்றாஸ் போறேன் னு கிளம்பினார் -அப்புறம் உங்க வருமானத்துல அங்க வாழ முடியாது சொல்லி இப்ப கொஞ்சம் ஒழுங்கா இருக்காரு. என்றான் சுப்பிரமணி.

இரவு ரா சா உதவியில் கோயில் தரிசனம், இரவு அப்பம், அடை நெய் மிளகாய்ப்பொடி சுப்பிரமணி சுவைத்து மகிழ்ந்தான். அம்ஜம் சமயலைப்  பாராட்டி, உங்கள மாதிரி சமைக்கிற பொண்ண தான் கட்டிக்கணும் இல்லலேன்னா சுத்த வேஸ்ட் என்றான் சுப்பிரமணி. அம்ஜம் ராமசாமியை, ஓரக்கண்ணால் என்ன சுவாமி காதுல விழுந்ததா என்பது போல் பார்த்தவள் -அதிர்ந்தாள்; ஏனெனில் காது என்ன கண்ணும் நொள்ளை என்பதுபோல் ஒன்றுமே நடவாத து போல் அமைதி காத்து கழுகு பழிவாங்கி விட்டது          [ eaagle vulture -God knows] என்று காலையில் கிண்டல் பேசியதற்கு.

தொடரும்

அன்பன் ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...