Friday, August 30, 2024

SALEM SUNDARI-44

 SALEM SUNDARI-44

சேலம் சுந்தரி- -44

இதில் முடிந்ததை எல்லாம் டிக் அடி என்றார் . சுமார் 28, 29 நிறைவடைந்திருந்தது.

மீதி 10-12  என்னவென்றே சுந்தரிக்கு பிடிபடவே இல்லை. சரி ஒரு மினிட் என்று கேன்டீன் சதாசிவத்தைகூப்பிட்டு இந்தா என்றழைத்து ., அவற்றின் பக்கத்தில் அளவு குறித்தார் .உதாரணம் , மாலை -6, பட்டுப்பாய்  2,  சந்தனம் குங்குமம் , கல்கண்டு, பேலா, தட்டு, பன்னீர் சொம்பு [முதல் நாள்] என்று குறிப்புகள் எழுதி , இத கேப்ரியல் செக்ஷன்ல போய் 3 காபி போட்டு கையோட கொண்டு வா. என்றார்.

சே சு: “ சார் எங்க செக்ஷனிலேயே ஜிராக்ஸ் இருக்கு சார். என்றாள். முறைத்துப்பார்த்து ராமசாமி "தெரியும் அங்க கண்குத்தி இருக்கு அதுவும் தெரியும், மறந்துடாதே என்று சு ரெ  வை நினைவு கூர்ந்தார்.

அப்பா எவ்வளவு உஷாரா இருக்காரு [நமக்கு ஒரு எழவும் நினைவுக்கே வரமாட்டேங்குது. அங்கபோய் காபி  எடுத்து அவரு ஆயுசுக்கும் உனக்கு ஆபீஸ் என்ன சொந்தவேலை  பாக்குற இடமானு போக வர கேட்டுக்கிட்டே அவமானப்படுத்துவாரு. நல்லவேளை ஆஞ்சநேயா, சார் வடிவத்துல என்னைகாப்பாத்திட்ட என்று மனதிற்குள் வேண்டினாள். இதோ 3 காபி வந்துவிட்டது. ராசா, மாச, சே சு -ஆளுக்கொரு காப்பி தனித்தனியே. கையில் வைத்துக்கொண்டு போகும் போது வரும் போது வாங்கக்கூடிய பொருளாக தென்பட்டால் வாங்கி வைத்துக்கொண்டால் கல்யாண சமயத்தில் அலையவேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எதிரே வந்தவனை ராஜாமணி இங்க வா , ஊருக்கு போவியா?

வாராவாரம் போறேன்

இந்த வாரம்?

இன்னிக்கு சாயந்திரம் போறேன் .

சரிஒருஜோடி பட்டுப்பாய் எவ்வளவு ? ரூ 450/- சார். டே கொஞ்சம் கொறச்சுக்கடா . இல்லசார் நானே வாங்கித்தான் தரேன் கொறச்சா .கோரை சரியாருக்காது, நீங்கவேணா  வாங்க பாய் முடயற இடத்துக்கே கூட்டிக்கிட்டு போறேன் . பாருங்க.நான் சொல்றது புரியும். சரிடா ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா என்றார். சொல்லுங்க சார் உங்களுக்கு இல்லாததா என்றான் ராஜாமணி

சுந்தரி-- உன் தங்கை மாப்பிளை பேர் ரெண்டையும் கரெக்ட் ஸ்பெல்லிங் எழுது. VISALAKSHI -SUBRAMANIAN என்று எழுதிக்கொடுத்தாள். ரெண்டு பாய் லயும்  பேர் போட்டு வாங்கித்தா ஆனா 450/- தான்.

சரி சார் நான் முடிச்சுத்தறேன்.

நல்ல கோரைக்கு தான் இந்த ரூபாய், ஆமா இப்பவே சொல்லிட்டேன் என்றார் கறாராக ராமசாமி.

ஆமா சார் நல்ல கோரை பேரோட ஒரு ஜோடி பாய் 450/- ரூவா, சரிதானே சார். என்றான் ராஜாமணி..

 மணி 12.05. . செக்ஷன் திரும்பி வேலைகளை கவனித்தனர்.

ஐயோ இந்த ராமசாமி எல்லா விவரமும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு என்னமா வேலைகளை முடிக்கிறார். அன்னக்கி வெறும் பாய் ஜோடி 430/- னு பக்கத்துவீட்டம்மா வாங்கிட்டு வந்தாங்கனு விசாலாட்சி சொன்னாளே என்று உள்ளூர வியந்தாள்.

ராமசாமியா? கொக்கா? இல்லை, இல்லை கழுகா? கொக்கா?  பதில் சொல்ல முடியாது.

அடுத்த புதன் மாலை 3.00 மணி , ராஜாமணி இரெண்டு பட்டுப்பாய்களுடன் ராமசாமி சார் செக்ஷன் நோக்கி வர எதிர்ப்பட்ட ராமசாமி , இங்க மாடசாமி செக்ஷன்ல போய் கொடுக்கணும் என்று அழைத்துச்சென்றார். மேலே சு  ரெவும், மாடசாமியும் பேசிக்கொண்டிருந்தனர் , சுந்தரி கடிதங்களை தயார் செய்து மெயில் அனுப்பிக்கொண்டிருந்தாள் . ராசாமியைப்பார்த்ததும் வாங்க சார் என்று கைகூப்பி வரவேற்றார் சுப்புரெத்தினம் .

லெட் டர்களை முடித்து  அனுப்பி விட்டு நிமிர்ந்தாள் சுந்தரி. எதிரே விரித்த பாய் நல்ல டிசைனில் விசாலாட்சி-சுப்பிரமணியன் பெயர்கள் நெய்யப்பட்டு நேர்த்தியாக இருந்தது. நல்லா இருக்கு என அனைவரும் பாராட்டினார். .

உடனே சுந்தரி இரண்டு 500/- நோட்டுகள் தந்தாள். பாய் க்கு 450/- +500/- போனவாரம் குக் சேஷாத்திரி க்கு பாதி அட்வான்ஸ் நீங்க கொடுத்த 500/- என்று விளக்கினாள். பாய்க்கு ராஜாமணி 450/- பெற்றுக்கொண்டார் மீதி           50/- க்கு காபி என்று ராமசாமி அறிவித்தார் .

சுந்தரி சரி சார் என்றாள்.

பாயை நேர்த்தியாக சுருட்டி கட்டி வைத்தார் மாடசாமி.  நீங்க கண்டோன்மெண்ட் தானே தியோடர் கிட்ட சொல்றேன் உங்க வீட்டுக்கு கொண்டாந்துருவான் என்று அவரே அவ்வாறே ஏற்பாடு செய்தார் மாடசாமி

தொடரும்

நன்றி      அன்பன் ராமன்

3 comments:

  1. காசி யாத்திரைக்கு குடையும்
    wallking stickம் மறக்க வேண்டாம்.
    சரி மாப்பிள்ளை தோழன் யாரு?

    ReplyDelete
  2. குடையும் கைத்தடியும் இருக்கட்டும் . மாப்பிள்ளை தோழன் நீங்களோ ,நானோ , நண்பர்களோ இல்லை கஸ்தூரிரெங்கன் உட்கார்ந்தால் , ராமசாமி, அவன் காலை உடைத்துவிடுவார்.பெரிய சிக்கலை உண்டாக்கி விட்டீர்களே ஸ்வாமி .

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...