OLD
MOVIE SONGS -8
PIANO FOR IMPACT +SINGING STYLES
பியானோ
தாக்கம்
ஊக்கம்
ஏக்கம்,
பாடும்
முறை
பியானோ எத்துணை
பாடல்களை
வலுவாகத்தூக்கி
நிறுத்தியிருக்கிறது
எம்
எஸ்
வி
யின்
கற்பனையில்.
பின் வரும்
பாடல்களை
ஆழ்ந்து
கவனியுங்கள்.
நம்மில்
பலரும்
பாடலில்
வரும்
குரலின்
பின்னால்
பயணிக்கிறோமே
அன்றி,
அதில்
தூவப்பட்டுள்ள
மென்மையான
தேங்காய்ப்பூ
சுவை
[இசை
வடிவில்]
நம்
புலன்களை
ஈர்க்கவில்லை
-காரணம்
நாம்
பாடல்
வரிகள்/
சொல்
இதில்
மட்டுமே
கவனம்
செலுத்துகிறோம்.
அவற்றோடு இழைந்து
மற்றும்
இயைந்து
வரும்
மிக
ரம்மியமான
இசைக்கருவிகளின்
ஒலிகள்
தான்
இசை
அமைப்பாளரின்
அச்சு
அசல்
அக்மார்க்
முத்திரை.
. நமக்கு
ஆர்வம்,
நடிக/
நடிகையரை
பார்ப்பதில்
தான்.
அதனால்
தான்
ஒவ்வொரு
பாடலையும்
அந்த
நடிகர்
பாட்டு
இந்த
நடிகர்
பாட்டு
என
முற்றுப்புள்ளி
வைத்துவிட்டு
, அப்பாடலுக்கு
உழைத்த
எண்ணற்ற
CREATORS குறித்து
ஆர்வமோ
அக்கறையோ
இன்றி
வாழ்ந்துவிட்டதனால்
, இவைகுறித்த
கட்டுரைகள்
/வீடியோ
வுடன்
கேட்டுவிட்டு
, இதெல்லாம்
தெரியாது
என்றுமெல்ல
முனகும் வாக்கு மூலம்
வியப்பை
மட்டுமல்ல
சிலநேரங்களில்
கோபத்தையம் கிளறுகிறது. இப்படியோர்
கூட்டம்
மலிந்து
கிடக்க
ஆங்காங்கே
பல்வேறு
தனி
நபர்கள்
ஐயோ இந்த
பாடலில்
சந்தூர்
இசைத்தவர்
யார்
, ஷெனாய்
ஒலிக்கிறதே
யார்
பங்களிப்பு
, அப்பப்
பா
இப்படி
ஒரு
போங்கோ
வாசிப்பா
யார்
அவர்
, இவர்கள்
குறித்து
இன்னமும்
தேடலில்
இயங்கிக்கொண்டே
தலை
நரைத்து
, அதனால்
ஒவ்வொரு
பாடலையும்
அக்கு
வேறாக
ஆணி
வேறாக
கட்டுரை
/விவாதம்
என்று
பலர்
இருக்கின்றனர்.
அவர்களின்தேடல்
தான்
பல
உண்மைகளை
வெளிச்சம்
போட்டு
, உழைப்பாளிகளின்
பெயரையாவது
நம்மை
அறிய
வைத்துக்கொண்டிருக்கிறது.
எனவே
அன்பர்களே,
பாடலை
ரசிப்பதென்பது
, உணவை
மகிழ்ந்து
சுவைப்பதற்கு
சற்றும்
குறைந்ததல்ல.
. குறைந்தபட்சம்
இந்த
தொடரில்
வரும்
பாடல்
பதிவுகளை
வெகு
நுணுக்கமாக
க்கேளுங்கள்
திரை இசை [அதாவது
பழைய
இசை
வகை]
என்பது
கேலிக்கூத்தல்ல என்பது தெளிவாகும்.
தொடர்ந்து படியுங்கள்
பியானோவை ஒரு
மேற்கத்திய
இசைக்கருவி
என்பதாகத் தானே நாம்
அறிவோம்? ஆனால், அதை
பல்வேறு
உணர்வகளுக்கு
அடிநாதமாக
பயன்
படுத்தி
சாதனை
படைத்தவர்
எம்
எஸ்
வி
எனில்
மு
ற்றிலும்
உண்மை.
பாட்டொன்று கேட்டேன்
[பாச
மலர்]
கண்ணதாசன்,
வி
ரா,
குரல்:
ஜமுனா
ராணி
பாடலில் குதூகலத்தை,
குவியல்
குவியலாகத்தரும்
கவிதை;
எனவே
பியானோவில்
இசை
மழை
பொழிந்துள்ளனர்
மன்னர்கள்
வி-ரா.
அதே நேரத்தில்,
கவிஞர்
வினோத
விளையாட்டினை
நிகழ்த்திய
பாடலும்
இதுவே.
ஆம்
ஒவ்வொன்றையும்
சொல்லிவிட்டு, இல்லை இல்லை
என்று
மறுதளிக்கும்
உத்தியை
வெறெந்தப்பாடலிலும்
இவ்வளவு
சுவையாக அமைத்ததில்லை /
.அமைந்ததில்லை.
ஒவ்வொரு
மறுப்பிலும்
உள்ளூர
ஒரு
ஏக்கமும்
போலியான
' குரலால்
அழைக்கவில்லை'
'சிரித்தார்
-சிரிக்கவில்லை' ‘யாரோடும் பேசவில்லை’
போன்ற
அனைத்துமே
வெளிப்படை
மன
நிலையிலிருந்து
விலகிய
நடைமுறை
. அது
பெண்
மனம்;
அந்நிகழ்விற்கு முக்கியமான
ஆண்,
குதூகலமாக
பியானோவில்
இசைப்பதை
பயன்படுத்தி
பாடலுக்கு
மெருகேற்றியுள்ளனர்.
கூடவே
பெண்கள்
குழுவாக
பாடி
நடனம்
ஆடுவது, மற்றுமோர் அழகூட்டல்
; பல்லவியின்
துவக்க
வரியில்
இறுதியில்
'ஹோய்
'என்ற
உற்சாகத்தின்
வெளிப்பாடு
என
பாடல்
நெடுகிலும்
ரசிப்பதற்கு
ஏராளமான
இடங்கள்
உள.
கேட்டு
ரசிக்க
இணைப்பு
https://www.youtube.com/watch?v=2NpinW8K3QI PATTONDRU KETEN HO
பியானோப்பாடல் ஒன்று
சொல்
என்றால்,
தடங்கல்,
தயக்கமில்லாமல்
பலரும்
சொல்வர்—
"உன்னை ஒன்று
கேட்பேன்"
[புதிய
பறவை]
கண்ணதாசன்,
வி
ரா,
பி
சுசீலா
, மற்றும்
ஏராளமான
கோரஸ்
குரல்கள்
, நடனக்குழு
என
பிரமிப்பூட்டும்
பாடல்.
காட்சியில் வசீகரமும்
நளினமும்
உண்டு
விரசம்
இல்லை,
நாராசமில்லை,
நவரசம்
உண்டு.
கேட்கக்கேட்க
தெவிட்டாத
பாடல்.
பியானோவில்
துவங்கினாலும்
, எண்ணற்ற
மேற்கத்திய
கருவிகள்,
அவற்றின்
இனிமையான
ஒருங்கிணைப்பு
என
சொல்லிக்கொண்டே
போனாலும்
, எப்போதும்
எழும்
கேள்வி
இவ்வளவு
இசைக்கருவிகளா
ஒரே
பாடலில்
, அவற்றின்
ஒருங்கிணைப்பு
அவ்வளவு
எளிதானதா
என்ன,
அதுவும்
எந்தக்காலத்தில் [1964 இல்] 60 ஆண்டுகளுக்கு
முன்
எந்தவித
வசதியும்
சாதனங்களும்
இல்லாதநிலையில் சாதனை இருந்தது.
. இசை
ஒருங்கிணைத்தோர்
-கோவர்தனம்
-ஹென்றி
டேனியல்
- மிக
நேர்த்தியாக
செயல்
பட்டுள்ளனர்,
அதுவும்
வெறும்
மோனோ
ரெக்கார்டிங்
வசதிகளில்;
அதுவன்றோ
ஆக்கபூர்வ
உழைப்பு
? நாயகியின் உடையில்
ஒரு
கண்ணியம்,
முக்கால்
கை
ரவிக்கை: இப்போது அணியச்சொன்னால்
மூக்கால்
அழுவார்கள்,
அந்த
உடை
அடி
வயிறு
வரை
இறங்கி
மரியாதைக்குரிய
அமைப்பல்லவா.
உடனே,
அவர்கள்
கட்டுப்பெட்டி
என்று
விமரிசனம்
செய்வோரே-
நவநாகரீக
ஸ்கொயர்
வாச்
- கவனித்தீர்களா?
எதில் பழமை?
சரி ஆர்கஸ்ட்ரேஷனை
நாங்கள்
தான்
உபயோகித்தோம்
என்று
புலம்புவோரே
புதிய
பறவை
மட்டும்
அல்ல
1964இல்
வந்த
அத்துணை
படங்களிலும்
இருந்த
பிரம்மாண்ட
இடை
இசை
இன்றளவும்
தலை
தூக்கி
நிற்பது
தெரியவில்லையா?.
கேட்டு
ரசிக்க
இணைப்பு
https://www.google.com/search?q=UNNAI+ONRU+KETPEN+I++video+song+download&newwindow=1&sca_esv=757e01b514b177ca&sxsrf=ADLYWIIsUmFo_uk9PuCbdayf4fVjj2Rwag%3A1729174518142&ei=9hsRZ9mlCJGOseMPgrrJaQ&ved=0ahUKEwjZ-KGHzZWJAx UNNAI ONRU KETPEN
இதோ ஒரு
தனி
நபர்
நடனப்பாடல்
- அதற்கும்
பியானோ வைத்தவர் எம்
எஸ்
வி
மலரென்ற முகம்
ஒன்று
[காதலிக்க
நேரமில்லை
-1964] கண்ணதாசன்
வி
ரா,
எல்
ஆர்
ஈஸ்வரி,
எம்
எஸ்
ராஜு
வெகு சீரான
ஓட்டமும்
துள்ளலும்
கொண்ட
பாடல்,
நாயகிக்கு
எல்
ஆர்
ஈஸ்வரி
குரல்
கொடுக்க,
படத்தில்
சினிமா
டைரக்டராக
வரும்
நாகேஷிற்கு
மேற்கத்திய
வகை
யூக்ளிங்
தந்து
வியப்பில்
ஆழ்த்தியவர்
, எம்
எஸ்
வி
இசைக்குழுவின் மாண்டலி ன்
கலைஞர்
,மறைந்தக
திரு
எம்
எஸ்
ராஜு.
குரல் கட்டுப்பாட்டை
கவனித்தால்
யாரோ
ஹாலிவுட்
கலைஞர்
போல்
தோன்றும்.
இதுவும்
ஒரு
1964ம்
வருடத்தின்
மகோன்னதம்,
பாடலின்
இடை
இசையில்
பியானோவின்
சுகமான
பயணம்
ரசிக்க
இணைப்பு
https://www.google.com/search?q=MALARENRA+MUGAMONRU+SIRIKKATTUM+VIDEO+SONG&oq=MALARENRA+MUGAMONRU+SIRIKKATTUM+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigA
YOUGHLING + LALALALA LULLA LA
மீண்டும் ஒரு
பியானோ
கீதம்
மாறுபட்ட
அமைப்பில்,
இதிலும்
பியானோவின்
விளையாட்டாக
தனி
ரகம்
; பலரும்
பலமுறை
கேட்டு
வியந்த
பாடல்
என்ன என்ன
வார்த்தைகளோ
[வெண்ணிற
ஆடை-1965]
கண்ணதாசன்
, வி
ரா,
பிசுசீலா
.
பாடல் நெடுகிலும்
குரலுடன்
கைகோர்த்தாலும்
இடை
இசையில்
தனித்துவம்
காட்டிய
பியானோ
இசை
. காட்சி
அமைப்பில்
கம்பீரமும்
செல்வச்செழிப்பும்
பாடலின்
தனிச்சிறப்பு.
எனினும்
எம்
எஸ்
வி
விஸ்வரூபம்
காட்டிய
பல
பாடல்களில்
இதுவும்
ஒன்று.
கேட்டு
மகிழ
இணைப்பு
https://www.google.com/search?q=enna+enna+vaarththaigalo+video+song+download&newwindow=1&sca_esv=757e01b514b177ca&sxsrf=ADLYWIIaTlo7USZohsN5XhGeikf-cJZ4Rg%3A1729172607446&ei=fxQRZ9TyGpuL4-EPmuSRqQk&oq=ENNA+ENNA+VAARTHT
ENNA ENNA VENNIRA ADAI 1965
பிற உத்திகள்
வரும்
நாட்களில்.
நன்றி
அன்பன் ராமன்