Wednesday, December 11, 2024

ANGER AND EGO -3

 ANGER  AND  EGO -3                             

கொந்தளிப்பும் அகம்பாவமும்-3

இதுவரை நாம் குறிப்பிட்டு பேசும் நிகழ்வுகள் அனைத்திற்கும் அடிப்படை DISCIPLINE என்ற ஒற்றை சொல் உணர்த்தும் தனிமனித ஒழுக்கம் என்பதை நாம் யாவரும் விரைவில் உணர்தல் நன்று; இன்றேல் இயற்கை உணரவைத்துவிடும். இயற்கை நமக்கு போதிக்கத்துவங்கிவிட்டால், மனிதர்கள் போல் வேண்டியவர் வேண்டாதவர், தெரிந்தவர், என வேறுபாடின்றி அனைவரையும் துயரவெள்ளத்தில் ஆழ்த்தும். அதில் இருந்தே நாம் பாடம் பெறலாம். என்னவெனில், கடமை தவறியவன் அவனுக்கு துணை நின்றவன் அனைவரையும் வெகு இயல்பாக கையாண்டு, சொத்து பதவி, அதிகாரம் எதுவும் எதற்கும் கூட வராது என்று இறுதி நிமிட உணர்தலை கொடுத்து, மொத்தமாக அழித்துவிடும். அதற்கு முன் பல தருணங்களில், எச்சரிக்கை நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு வித மாயையில் சிக்கி, எவ்வளவு செலவு ஆனாலும் ஆகச்சிறந்த மருத்துவம் நம்மை காப்பாற்றி விடும் அதற்கான செல்வம் என் வசம் இருக்கிறது என்று அகம்பாவம் கொண்டு ஏதேதோ செய்ய, எவரேனும் சற்று கவனம் என்று சொன்னால் அவர் மீது கோபம் கொண்டு அவருக்கு இன்னல் தருவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் தற்கால நிலையில் எதையும் புரிந்துகொள்ள துடிப்பான மூளை இயக்கமும், பரிவான மனித நேயமும் ஏட்டளவில் இருக்க இவர்கள் துயரில் ஆழ்ந்து அழிவது உறுதி.

நீ என்ன ஏதேதோ பேசுகிறாய் என்போர் இந்த சூழலை கவனியுங்கள். தவறு செய்த மாணவனை கண்டித்த ஆசிரியர் முழுமையாக வீடு திரும்புவாரா என்ற உத்திரவாதம் இல்லை. வெறும் வாய்வழி அறிவுரைத்தவர் ஆசிரியர் என்று தெரிந்தால் "ஆ வாத்திப்பயலுக்கு என்ன திமிர், என் மகனை [மகளை] கண்டிக்க இவன் யார் என்று படை திரட்டிக்கொண்டு அவரை சலித்து எடுத்துவிடுவது சமகால நிகழ்வு.. இன்னும் சிலர், அவர் என்னை ஜாதி ரீதியில் பேசினார் என்று பழி சுமத்துவர் , அப்படி பழி            சுமத்தினால் போதும், எல்லையற்ற இன்னல்களை சந்திக்க நேரும்.

 2 கட்டுக்கடங்கா குடியினால் கல்லீரல் சல்லடையாய் செல்லரித்து, மருத்துவமனையில் இறந்தவனின் உறவினர்கள் மருத்துவமனை, மருத்துவர்கள்,செவிலியர் என அனைவரையும் தாக்குவது; பேருந்தில் பயணசீட்டு வாங்கச்சொல்லி வற்புறுத்தும் நடத்துனரை கூட்டமாக தாக்குவது, மிகவும் சுவையான உணவு என்று விரும்பும் கடையில் விரும்பிய உணவை [பெரும்பாலும் பிரியாணி ] வயிறு புடைக்கத்தின்று விட்டு , பணம் தராமல் பார்சல் கேட்டு கடையை சூறையாடுவது   இவை யாவும் தனி நபர் ஒழுக்கமின்மையின் வெளிப்பாடுகள். இதைகட்டுப்படுத்த வேண்டிய எந்த அதிகார மையமும் .சுதந்திரமாக இயங்கும் ஆற்றலை இழந்து பல காலம் ஆயிற்று.

ஏன்? பதவிக்கு வந்த பலர், பதவியைப்பிடித்த வரலாறு அத்தகையது. அவர்கள் எவருக்கோ ஊழியம் செய்வார்கள், சட்டத்திற்கோ சமூகத்திற்கோ உண்மையாய் இயங்க மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் இயங்க தன்னலமின்மை மட்டும் போதாது, அசைக்கவொண்ணா ஒழுக்ககோட்பாடுகள் கொண்டு தம்மை வடிவமைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே, சட்டத்தை செயல்படுத்த இயலும். ஏனையோர் சட்டத்தை வளைப்பர். இதை நாம் அவ்வப்போது அன்றாட வாழ்வில் கண்கூடாக .காண்கிறோம்.

இது போன்ற கையாலாகாத  அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கி விதண்டா வாதம் பேசுவது இப்போது பரவி விட்ட அவலம் . உங்களுக்கு நன்கு தெரிந்த இரு அதிகாரிகளை நினைவு கொள்ளுங்கள் . ஒருவர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் உயர் பதவி வகித்தவர்; மரற்றவர் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர். இவர்களும் இதே மண்ணில் கடமையை செவ்வனே நிறைவேற்றி, அரசியல்வாதிகளை அலற விட்டனரே -அது எப்படி சாத்தியமாயிற்று? வேறொன்றுமில்லை , அவர்கள் பதவிசுகம் தரும் வெகுமதிகளையும் , அரசியல் வாதிகளின் ஆதரவையும் விட பதவியின் மாண் பினைக்கா ப்பதும்,, குற்றவாளி யாராயினும் சட்டத்தின் பிடியை இறுக்கி குற்றவாளிகளை மூச்சுத்திணற வைக்கும் நேர்மையும் நடைமுறையும் அறிந்தவர்கள். எனவே சுதந்திரமாக இயங்க இயலாமைக்கு காரணம் தேடுபவர்கள் பலரும் ,ஏதோ சலுகைகளுக்காக சமரசம் செய்துகொள்பவர்கள். அவர்கள்  தலைமை என்னும் அரசியல் தலைமையின் விரல் அசைவுக்கு காத்திருப்போர். கூழைக்கும்பிடு போட்டு சுகம் தேடும் முதுகெலும்பற்ற நோயாளிகள். அவர்கள் பனி மூப்பு பெற்ற விநாடியிலேயே அனைத்தையும் இழந்து பொலிவிழந்து தலை கவிழ்ந்து வாழ்பவர்கள்.

இவற்றுள் எந்த வடிவம் ஆயினும் எந்த பதவி எனினும் , தன்னிறைவு என்னும் செயல் திறன் அற்றவர்கள் . எனவே எந்த வினாடியும் பலிகடா ஆகும் வாய்ப்பு உடையவர்கள். மேலும் எந்த நொடியிலும் இது போல் பலிகடா வாழ்வுக்கு மனதளவில் தாயார் நிலையை எட்டிவிட்டவர்கள்.கல்வி அறிவில்லாத அரசியல் வாதிக்கு சாமரம் வீசி, வாழ்வில் முன்னேற்றம் காண துடிப்பவர்கள். உயர் அதிகாரிகள் இவர்கள் மீது விமர்சனம் வைத்தாலும் ஹி ஹீ ஹி என்று ஆட்டுக்குட்டி போல அடங்கி ஒடுங்கி வாழும் கலை பயின்றவர்கள்.. மொத்தத்தில் சுயமரியாதையை ஈடேதும் இன்றி அடமானம் வைத்தவர்கள். இவர்கள் வீரவசனம் பேசுவார் . தகுதி திறமை குறித்து பேச , மனம் இல்லாதவர்கள். மாறாக  தொழில் நுணுக்கங்களை அறிந்தோர் போல  வாதிடுவர்., எது எவ்வாறாயினும் கூனிகுறுகி வாழ்தல் ஒரு தனித்திறன் என உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். எப்படியோ மார்க் வாங்கினால்  எதையும் அடைந்துவிடலாம் என வாதிடுவர். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள திராணி அற்றவர்கள். மார்க்கே மார்க்கம் என்று குறுக்கு வழி  அணுகுமுறைகளை கடைப்பிடிக்க தயங்காதோர்.ஆனால் .பொருள்குவிந்து விட, ஒரு மிதவை நிலையில் வாழ்பவர்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை விட, பிற முறைகளில் முன்னேற துடிப்பவர்கள். அவர்களிடம் கோபமும், தான் என்ற அகம்பாவமும் விரவிக்கிடக்க       இவர்களுக்கு செயல் திறன் வெகு குறைவே. ஆனால் இவர்களை நல்  வழிப்படுத்துதல் கடினம் ஏனெனில் குறுக்கு வழிமுறைகள் எப்போதும் இவர்களை பீடிக்க இவர்களால் உழைப்பின் பாதைக்கு திரும்புதல் எளிதன்று. முன்னேறும்  குறுக்குவழி முறைகளை    நன்கு அறிவர்.   . இவர்களிடம் பிறர் --கல்வியோ, செயல் முறையோ அறிதல் சாத்தியமன்று.  இத்துணை வக்கிரங்களுக்கும் தாய் அகம்பாவம் என்னும் மன நிலை ; இது மிகவும் தீமை விளைவிக்கக்கூடியது.

தொடரும்

நன்றி அன்பன் ராமன் 

 

1 comment:

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...