PEER RAGGING
நட்புகளின் கிண்டல்
இந்த சொல் சரிதானா என தெரியவில்லை ஆனால் இதன் பொருள் சொல்லாமலே புரியும் எனவே peer ragging என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வளம் இது என நம்புகிறேன். ஆம், தமிழ் சினிமாவில் குறிப்பாக 50களுக்குப்பின் கூட்டமாக சேர்ந்து கொண்டு ஒருவனையோ ஒருத்தியையோ ஏளனம் செய்வது அல்லது இரு பிரிவாக ஆண் -பெண் கூட்டம் எதிர் அணியை வம்பிழுப்பது கேலி பேசுவது போன்ற காட்சிகள் இருந்தன. அவற்றில் வாதங்கள் எதிர்வாதங்கள் மிகவும் வீரியமாக ஆனால் நாசூக்காக [பண்பு விலகாமல்] இருக்கும் . அவற்றில் கவிஞனின் கற்பனை மேலோங்கும் எனவே அதற்கு இணையான இசையும் தேவைப்படும். அப்படி பல சூழல்களில் அமைந்த பாடல்கள்
மேற்கண்ட தலைப்பில் இடம் பெரும் [வியாழன் பகுதியாக] இடம் பெறும்
மயங்குகிறாள் ஒரு மாது [பாச மலர் 1961], கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பி சுசீலா
காட்சி: அண்ணனை மணந்த நங்கையை teasing என்ற நையாண்டி முறையில்
கேலிபேசும் நாத்தனார். அந்தப்பெண்ணின் முதலிரவை
சாக்காக க்கொண்டு அமைந்த யாப்பு. 'மயங்குகிறாள் ஒரு மாது என துவங்கி அவள் தடுமாறுவதாக
" தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது " என்று முதலிரவு தாக்கம் குறித்து
பேசுகிறாள் உணர்வுகளை அடக்கிக்கொள்வதை " காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்"
அதற்கு பீடிகையாக 'தோழியர் கதை சொல்லித்தரவில்லையா , துணிவில்லையா, பயம் விட வில்லையா,நாழிகை
செல்வதும் நினைவில்லையா? என்று கேள்விமேல்
கேள்வி கேட்டு திணறடிக்கிறாள் -நாத்தி.
அது மட்டுமா பாடலின் ஒவ்வொரு
சொல்லுக்கும் சாவித்ரி காட்டியுள்ள முகபாவம் -நடிப்பிலக்கண தொகுப்பு என்றால் மிகை அல்ல.
பாருங்கள் ஒவ்வொரு நொடியிலும் வாய்ப்பினை தவற விடாமல் திறமையை பதிவிட்டுள்ளார் நடிகையர்
திலகம் -எப்பேர் பட்ட கலைஞர்களை கொண்டிருந்தோம் -மனம் சற்று தளர்ந்துதான் போகிறது.
காட்சியில், புதுமணப்பெண்ணாக எம் என் ராஜம், கணவனாக சிவாஜி கணேசன்.
பாடலின் அமைப்பும் இயக்கமும் வெகு சுறுசுறுப்பு ; சிதார் துணை யில் பாடல் பயணிக்கிறது. அந்த அறையில் இருந்த தங்கையின்
போட்டோவை சிவாஜி கணேசன் சுவற்றுப்பக்கம் திருப்பி வைப்பார் .
அதனை குறிப்பிட்ட கவிஞர்
திரு வைரமுத்து “நண்பர்களே சிங்கம் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? இந்தப்பாடலில்
பாருங்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் . பாடலுக்கு இணைப்பு இதோ
AVAL MELLA SIRITHTHAAL
அவள் மெல்ல சிரித்தாள் [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
பி
சுசீலா
இது வேறு வகையான கிண்டல்.
ஒரு தோழி கோஷ்டி சேர்த்துக்கொண்டு இன்னொரு மணப்பெண் நிலையில் இருக்கும் பெண்ணை சீண்டி வம்பிழுக்கிறாள். கவியரசருக்கு, இது போன்ற களங்கள் மிகுந்த ஊக்கம் தருவன. மனிதர் விளையாடி இருக்கிறார்.
ராதை என்றும் கண்ணன் என்றும் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி அவர்களின் ஊடல் பாடல் உரசல்களை அரசல் புரசலாக
கவிதையாக்கி பொழிந்துள்ளார். எளிமையான சொற்கள் ஆனால் வலிமையான உணர்வுகள் என்று பாடல் படகு போல் மிதக்கிறது. சொற்கள் அப்படி ;
எம் எஸ் வி கண்ணன் பாடல் என்றதும் குழலை முதன்மைப்படுத்தி இசையை பின்னியுள்ளார். துவக்கத்திலேயே குழல் ஒலிக்கிறது ஆனால் இடை இசை பகுதிகள் இரண்டிலும் நெடிது நீண்ட விரைவான மற்றும் விரிவான குழல் வாசிப்பு [கலைஞர் நஞ்சப்ப ரெட்டியார்]. எத்துணை முறை கேட்டாலும் சுவையும் இனிமையும் குன்றாத வளமான பாடல். கேட்டு மகிழ இணைப்பு
பாட்டொன்று தருவார் [சர்வர் சுந்தரம் -1965 ] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,பி சுசீலா குழுவினர்
ஒரு மணப்பெண் நிலையில் இருப்பவளை தோழியர் கூடி கேலிபேசி கும்மாளமிடும் பாடல் . தோழியர் குழாம் அதிகம் என்பதால் பெண் குரல்கள் அதிகம். அதிலும் விறுவிறுப்பு குன்றாமல் பாடலை செலுத்த பியானோ பயன்படுத்தப்பட்டுள்ளது மாண்டலி ன் , ட்ரம் , போங்கோ பின்னிப்பின்னி சுழன்ற பாடல் , கிறக்கம் தரும்
கூ ட்டிசை மற்றும் சீரான தாள நடை அனைத்தும் கிண்டலும் கும்மாளமும் துள்ளிய துல்லிய இசை அமைப்பு கேட்டு மகிழ இணைப்பு
PATTONRU
THARUVAAR Y T SRINIVASAN BALAKUMAR*
·
Use
this link
தூது செல்ல ஒரு தோழி [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி
, பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி
ஒளிந்து மறைந்து, காதலனின் கடிதத்தை படித்துக்கொண்டிருந்தவள் தோழியிடம் சிக்கிவிட, பிறகென்ன பாடலும் கிண்டலும் பறந்து சுழல காட்சி அமைந்துள்ளது. துடிப்பான பாடலுக்கு நுணுக்கமான மாண்டலின் வாசிப்பு, கூடவே மென்மையான ட்ரம் தாளம் . பாடலில் இலக்கிய சொற்கள் அதிகம், இடையணி , மேகலை , கோவலன் காவிரிக்கரை என்றெல்லாம் வர்ணனைகள் ; பாடலின் டெம்போ என்னும் முறுக்கினை ஏற்படுத்திய சரோட் எழுப்பும் மூட் ஏற்றும் ஒலி இரண்டு இடை இசை பகுதிகளில் அமைய பாடல் தனி அமைப்பில். போட்டிபோட்டு சுசீலாவும் ஈஸ்வரியும் களமாடிய பாடல் இது.
கேட்டு மகிழ இணைப்பு இதோ
THOODU
SELLA [PACHAI VILAKKU -1964] KD V R PS LRE
https://www.youtube.com/watch?v=ZZYBeXYSXAA ADI PODI THAAMARAI NENJAM KD MSV PS LRE
தொடரும் அன்பன் ராமன்
Dr. KVenkataraman says
ReplyDeletereal ragging isமயங்குகிறாள் ஒரு மாது