GOOD- BUT LESS KNOWN -5
நல்ல ஆனால் அறியப்படாதவை-5
நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
பி
பி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா.
அச்சு அசலாக பாடல் எங்கும் எம் எஸ் வியின் ஆளுமை மிளிர்கிறது கவனியுங்கள். எடுத்த எடுப்பிலேயே ராக ஆலாபனையில்
தொடங்கி இடை வெளியே இல்லாமல் பயணித்த அற்புதம். பல்லவி, சரணம்
இரண்டுக்கும் பேதம் இல்லை ஏன் ?.
பாடலின் மையக்கருத்துக்கு உயிர் ஊட்டிய உத்தி. ஆம் பின் வரும் சரணத்தில் காவிரி என்றும் கடல் இது என்றும் பேதம் இல்லையம்மா என்ற உயிர் நாதத்திற்கு வலு சேர்க்க பாடல் முற்றிலும் ஒரே ராகத்தில் சீராக பயணிக்கிறது. அதே போல் இசையிலும் ஒரே அமைப்பே என்ற உயிரோ ட்டமான செயல் பாடு - கேட்டு உணர இணைப்பு இதோ
NAAN
PAADIYA PAADAL MANNAVAN KETTAAN https://www.youtube.com/watch?v=qC_IXGS9SFY
ஆத்தோரம் மணல் எடுத்து [வாழ்க்கை வாழ்வதற்கே ]கண்ணதாசன், வி, ரா, லதா , ரமாமணி
வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் அமைந்த குழந்தைப்பருவ குதூகல ப்பாடல் , கவி அரசரின் சொற்கள் மெல்லிசை மன்னர்களின் மெருகேற்றலில் அன்றைய சிறுமிகள் லதா, ராமாமணி இருவரும் பாடி வெற்றி கண்ட பாடல். . எவ்வளவு இயல்பாக சொல்லும் இசையும்? கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=Q_zPCT32aJ4
AATHORAM
MANALEDUTHTHU KD V R ,LATHA RAMAAMANI
சில ஆண்டுகள் முன், ரமாமணியின் நேர்காணல் MMFA அன்பர்களுக்காக திரு விஜயகிரிஷ்ணன் அவர்களுடன்
,ரசிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=4wy-RTMiscM RAMAMANI INTERCIEW with Vijay
Krishnan
குழந்தைப்பருவ பாடல் பின்னாளில் சோகமாக
ஒலித்த பெரியவர்கள் பாடல் குரல்கள் பி
பி ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலா . கேட்டு
உணர இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=1YDO0HELCY4&list=RD1YDO0HELCY4&start_radio=1
aathoram
[PATHOS] PBS PS
No comments:
Post a Comment