Thursday, September 4, 2025

Good but less known -7

 Good but less known -7                     

நல்ல ஆனால் அறியப்படாதவை-7

நெஞ்சத்தில் இருப்பது [வாழ்க்கை வாழ்வதற்க்கே -1964] கண்ணதாசன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் ,சுசீலா.

அந்நாட்களிலேயே நளினமான ஏற்ற இறக்கங்கள் கொண்ட டூயட் , மற்றும் என்று அவ்வப்போது ஒலிக்கும் காதல் உள்ள உணர்வு என ஒரு நல்ல பாடல் ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=L4_qYrsNQgA nenjaththil iruppadhu vaazhkai vaazhva kd vr pbs ps

ஓடம் கடலோரம் [கண்மணி ராஜா -1974]  கண்ணதாசன் ,எம் எஸ் வி , எஸ் பி பாலசுப்ரமணியன் , சுசீலா

பாலுவுக்கென்றே,  எம் எஸ் வி வடிவமைத்த விசேஷ குழைவு நெளிவு மற்றும் கம்பீர ஏற்ற இறக்கம் நிறைந்த பாடல். அந்நாளில் பரவலாக பலரும் வானொலியில் கேட்டு ரசித்த பாடல் காட்சி. இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=tJ--P_lRXXk  odam kadaloram kanmani raja 1974 msv spb ps

மனமே முருகனின் [ மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966]  எம் எஸ் வி, [ராதா]ஜயலக்ஷ்மி

காதலிக்க நேரமில்லை , வெண்ணிற ஆடை பாடல்களின் பிடியில் சிக்கி இசை மேற்குநோக்கி பயணித்த காலத்தில் 1966 இல் வந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில், எம் எஸ் வியின் இசையில்  அமைந்த சிறிய ஆனால் சீரிய பாரம்பரிய  ராக அமைப்பு கொண்ட மனமே முருகனின் மயில் வாகனம் [-ராதா] ஜெயலட்சுமி குரலில்.வெகு நேர்த்தியான விரைவான ஆலாபனைகள் பாடலின் சிறப்பு . இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc MANAME MURUGANIN [RADHA] JAYALAKSHMI  MSV

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966]   துள்ளித்துள்ளி விளையாட  வாலி,  எம் எஸ் வி சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல் ஆர் ஈஸ்வரி

அதே படத்தில் நடிகையர் பட்டாளம் பங்கு கொண்ட விறுவிறுப்பான பாடல் , குரல்களும் விரைவான ராக பயணமும் அனுசரித்த இசையும் ஒன்றிணைந்த ஒரு விசேஷ கலவை இப்பாடல், ஆனால்சிய நடிகைகளின் ஆடையையும் ஆட்டத்தையும் கவனியுங்கள் ஜிபோற்றுவாம் என்பது எது என சொல்லாமலே விளங்கும் பாடலுக்கு இணைப்பு

https://www.youtube.com/watch?v=WmSEM7ikSQ8 thullithulli vilaiyaada –motor sundaram pillai 1966 kd msv soolamangalam ps, lre

Wednesday, September 3, 2025

KANNADAASAN SPECIAL

 KANNADAASAN SPECIAL                               

கவியரசு கண்ணதாசன்   சிறப்பு பதிவு.

தேர்ந் தெடுத்த சில விசேஷ பாடல்களைக்கொண்டு சுபஸ்ரீ குழுவினர் வழங்கிய மேடை நிகழ்ச்சியில், கவிஞரின் பல பரிமாணங்கள் பேசப்படுகின்றன . ஊன்றி கவனித்து தகவல்களை உணர்ந்திட இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=79bMlpXrge4&list=RD79bMlpXrge4&start_radio=1

நன்றி

அன்பன் ராமன் 

Tuesday, September 2, 2025

LET US PERCEIVE THE SONG -36

 LET US PERCEIVE THE SONG -36          

பாடலை உணர்வோம் -36

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே [புதையல் -1957-58]

கவிஞர் ஆத்மநாதன், இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல்கள் சி ஸ் ஜெயராமன் , பி சுசீலா

சுமார் 67 வயதான பாடல், இன்றளவும் விமர்சர்கள் வியந்து நோக்கும் பாடல் இது. நான் அறிந்தவரை அதுநாள் வரை தமிழில் உலாவந்த டூயட் வகை பாடல்களின் அமைப்பு, வேறு வகை அமைப்பில் இருக்க, குரல் வீச்சு , கருவிகளின் தொகுப்பு, அங்காங்கே தென்படும் slowdown என்னும் அடங்கி ஒலித்த பாவம் என்று இப்பாடல் எட்டிய பரிமாணம் முற்றிலும் வேறு

அவ்வளவு ஏன் இசை குறித்து எதுவும் அறியாத நான் இப்பாடலில் கட்டுண்டு இனம் புரியாத ஈர்ப்பை உணர்ந்தேன். இதுதான் நான் முதல்முதலில் செவிமடுத்துக்கேட்ட  பாடல், பின்னாளில் அறிந்து கொண்டேன் இது எம் எஸ் வி என்ற இசை ஜால மூர்த்தியின் கற்பனையில் உதித்து தமிழகமெங்கும் முழங்கிய விந்தை என்பதை.  

 இதன் பின்னர் எம் எஸ் வி திரும்பிப்பார்க்கவே இல்லை [MSV NEVER LOOKED BACK] தமிழகம் தான் அவரை திரும்பித்திரும்பி வியந்து பார்த்தது..

ஒரு முறை கேட்டுவிட்டால் மனதில் தொற்றிக்கொண்டு தொடர்ந்து உள்ளத்தில் ரீங்கரிக்கும் மகத்தான திறனும் வசீகரமும் இப்பாடலின்  முத்திரைகள்.

அதிலும் ராக மாற்றங்கள் ஒரு புறம் இருக்க , ஒரே சொல்லை மாறி மாறி ஆண் /பெண் பாடும் பிரதிபலிப்பு உத்தி துவங்கியது இந்தப்பாடலில் தான் என்று  தோன்றுகிறது

நல்ல பாடல்கள் வாய்த்தால் படம் பெரும் வெற்றி அடையும் என்பதை நிறுவிய படம் புதையல்

பாடலில் இசைஅமைப்பினால் ஏற்படும் METAMORPHOSIS [உரு மாற்றம்] எவ்வளவு வியாபகம் கொண்டது என்பதை சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னமே பறைசாற்றிய இசை அமைப்பு.

பலரும் இப்பாடல் 10 உடன் 11 என்பதாக நினைக்க, விமர்சகர்கள் தொடர்ந்து மயங்கிக்கிடப்பதை கவனித்தால் புரியும், இதில் எண்ணற்ற இசை விந்தைகளை எப்போதோ கட்டமைத்து கட்டவிழ்த்து விட்டனர் மெல்லிசை மன்னர்கள் என்பது ஒரு முக்கிய புள்ளி.

அன்றைய சினிமா இசையில் திருப்பு முனை என்ற இடத்தில் நிச்சயம் "புதையல்" இடம்பெறும்.

பாடலை  பலமுறை கேளுங்கள், வயலின் ஆதிக்கம் குழலின் திடீர் தோற்றம் , குழைவு மற்றும் மீண்டும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் இசைக்கோலம் அனைத்தும் தென்படும்.

https://www.youtube.com/watch?v=V4Q84H6nVoY vinnodum pudhaiyal -1957

maayavanathan  vr , cs j p s

ஒரு சில இசைக்குழுவினர் மட்டுமே தொடத்துணியும் பாடல். இதோ கோபால் சப்தஸ்வரங்கள் வழங்கிய பாடல்.

https://www.youtube.com/watch?v=Be2if9LHQcQ gopal sapthaswaram

இவன் இப்படித்தான் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பான் என்று நினைப்போரே, இதே பாடலை சுபஸ்ரீ குழுவின் QFR பதிப்பில் மேலும் பல நுணுக்கங்கள் பேசப்படுகின்றனவே, அவர்களும் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பவர்கள் தானா?  யோசியுங்கள் அவர்கள் சொல்வதையும் பாடலையும் கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=a4p-5fGtn4s&list=RDa4p- 5fGtn4s&start_radio=1 vinnodum qfr

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்

நன்றி

அன்பன் ராமன்

Good but less known -7

  Good but less known -7                       நல்ல ஆனால் அறியப்படாதவை-7 நெஞ்சத்தில் இருப்பது [ வாழ்க்கை வாழ்வதற்க்கே -1964] கண்ணத...