LET US PERCEIVE THE SONG -40 இனிய சரஸ்வதி பூஜை
நல் வாழ்த்துக்கள்
பாடலை உணர்வோம் -40
உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
[அவளுக்கென்று
ஓர்
மனம்
-1971]
பாடல் என்பதையும்
தாண்டி
இது
போன்ற
காட்சியும்
கவிதையும்
இசையும்
நடிப்பும்
இயக்கமும்
ஒளிப்பதிவும்
தமிழ்
சினிமாவில்
வருமா
? என்றால்
உடனே
கோபம்
கொப்பளிக்க
குமுறுகிறர்கள்.
இன்றைய டெக்
னாலஜியின் முன்னே அன்றைய
ஒளிப்பதிவா?
என்கின்றனர்.
எனது
வாதம்
அதுவல்ல.
காமெரா
காட்சியின்
சோகத்தை
எப்படி
படம்
பிடித்தது?
டெக்னாலஜி அழகு
சேர்க்கும்
அழுகையை
வெளிப்படுத்தாது
அதுவும்
வண்ணப்படத்தில்..
“அவளுக்கென்று ஓர் மனம்” படத்தில் பாரதி படும் துயரை ஆழ்ந்த்து உணர்த்திய காமெரா தொழில் நுணுக்கம் எளிதில் விளக்கவோ விளங்கவோ எளிதன்று. காட்சியில் இயக்குனரை மட்டுமல்ல அவரது ஆளுமையையும் வெகுநேர்த்தியாக காட்சிப்படுத்திய யூ ராஜகோபால் பெரும் பாராட்டுக்குரியவர். இந்தப்பாடல் காட்சியின் சிறப்பே சோகத்தில் சுகம் என்பது தான். சோகமும் சுகமும் காற்றில் படரும் கீதம் மட்டும் அல்ல காட்சியில் இருக்கும் வெறுமை.
வண்ணப்படத்தில்
வெறுமையை
கொணர
எவ்வளவு
முயற்சி
வேண்டும்?
பாடலின்
துவக்கக்காட்சி
முதல்
அந்த
வெறுமையே
துணையாக
தொடரும்
நிலையிலும்
உரிமையாய்
பாடும்
பெண்
பாரதி.
காட்சியை
ஊன்றி
கவனித்தால்
மட்டுமே
நடிப்பும்
இயக்கமும்
புரிந்துள்ள
சாதனை
புலப்படும். சோகம் நிறைந்த முகம் முன்னணியில்
இருக்க குதூகலித்து ப்பாடி பாரதி ஓடிவரும்
துவக்க "ஷாட்டை" கவனியுங்கள் கமெராவில் "ஓவர்லாப்" செய்திருந்தாலன்றி இப்படி ஒரு காட்சி எடுத்திருக்கவே இயலாது. எவ்வளவு
நுட்பம்?
சரி, பாடலில்
கவியரசர்
சொல்வது
என்ன?
பூடக
உணர்த்துதல்
என்ற
உத்தி
வெகுவாக
இப்பாடலில்
பயன்படுத்தப்பட்டுள்ளது
.
உள்ளம் குதூகலிக்க பாடுகிறாள் [ஒரு தலைக்காதல்] அவன் பாடவே இல்லை ஆனாலும் காதலிப்பவன் போல மென் உணர்வு காட்டுகிறான் ஆண்.
உவகையில்
பெண்
பாடினாலும்
ஆங்காங்கே
, மெய்ப்படாத
காதல் என்பதை சொல்லாடலில்
கொணர்ந்த
கவிஞன்.
அவ்வகையில்
"விழுந்த"
சொற்கள் இங்கே சாய்வெழுத்துகளில்
குறித்துள்ளேன்.
உறவினி ல்
விளையாடி
வரும்
கனவுகள்
பலகோடி
[காதல்
கனவாகப்போவதை
உணர்த்தும்
உத்தி]
வெள்ளம் செல்லும்
வேகம்
எந்தன்
உள்ளம் சென்றது
[மனம்
தறிகெட்டு
ஓடுவதை
சொல்லும்
உத்தி]
வேகம் வந்த
நேரம்
இன்ப
இல்லம்
கண்டது [அதீத
கற்பனையில்
இல்லத்தரசியாக
மிதக்கிறாள்
எனும்
பூடகம்
]
பாடலின் பிற்
பகுதியில்
ஊடல் கொண்ட
பெண்மை
அங்கே
தனியே நின்றது
[அவளையறியாமல் வந்த
சொல்
"தனியே
நின்றது" என
காதல்
எங்கு
போ
ய்
நிற்கும்
என்று
உணர்த்தும்
பூடகம்.
]
கூடல் கொள்ள
மன்னன்
உள்ளம்
அருகே
வந்தது [இதுவும்
ஆணின்
மனப்போக்கு
என்ன
என்று
சொல்லும்
உத்தி
]
இறுதியாக
என்னடி விளையாட்டு
என்று
சொன்னவன்
மொழி
கேட்டு
ஆசையில்
விழுந்தேன்
அங்கே
ஆ அ .......காலையில் கனவுகள் எங்கே?
இரவில் கனவு--- விடிந்ததும் பனிபோல்
விலகியதை
சொல்லி
அவள்
நிலையை
பேசிய
கவியரசு
கண்ணதாசன்
.
காட்சியோடு ஒன்றி
கவி
புனைந்த
கவிஞன்
-அவனை
எங்கே
தேடுவது?
பாடலில் ட்யூன்
மேலோட்டமாக
பார்த்தல்
குதூகலம்
ஆனால்
உள்ளூர
இழையோடும்
சோகம்
என்ற
இரு
உணர்வுகளையும்
பின்னிப்பிணைந்த
பாடலின்
போக்கு
எம்
எஸ்
வி
காட்டிய
கற்பனை.
அதற்கேற்ப
இசைக்கருவிகளின்
தொகுப்பும்
இயக்கமும்.
இப்பாடலில்
இருப்பது
வேறோர்
பாடலில்
காண்பதரிது.
இறுதிசரணத்தில்
மங்கள
இசை
வழங்கி
அவளின் உள்ளக்கிளர்ச்சியை இசையில்
காட்டியுள்ளார்.
ஆனால்
ஒவ்வொரு
வரியிலும்
சோகம்
இழையோட
எப்படி
ஓர்
கற்பனை.
அதற்கு
தனது
முழு
பங்களிப்பையும்
வழங்கிய
ஜானகி
ஒரு
விந்தை.
இவ்வனைத்தையும் திரையில்
மிளிர
வைத்த
ஒளிப்பதிவும்
[யூ.ராஜகோபால்] இயக்கமும் [ஸ்ரீதர்]
காட்சிப்படுத்திய
செழுமையை
பர்த்து
தான்
புரிந்துகொள்ள
வேண்டும்.
கொடைக்கானலில் எப்படியோ
பசுமையை
தவிர்த்து
படப்பிடிப்பு,
எங்கும்
ஒரே
வெறுமை
. ஆம், காட்சியில் எங்குமே
மனிதர்களோ
, மலர்களோ
இல்லை
நீண்ட
நெடிய
வெட்ட
வெளி
[GOLF LINKS -கொடைக்கானல்
] படகு
சவாரியின்
காட்சியிலும்
தனிமையும்
வெறுமையும்
என்றே
காட்சிப்
படுத்தியுள்ளனர்.
மூன்றெழுத்து
ஆளுமைகளால்
உருவாகி
உயர்ந்த
பாடல்,
பாரதி
ஜெமினி
, ஜானகி
, எம்
எஸ்
வி
ஸ்ரீதர்
என்று
பட்டியல்
நீளம்.
இது போன்ற
காட்சி
அமைக்க
பெரும்
தன்னம்பிக்கையும்
உழைப்பும்
தேவை
அவை
இப்பாடலில்
பெரிதும்
அமைந்துள்ளதை
உணரலாம்.
பாடலுக்கு இணைப்பு
இதோ
Unnidathil ennai
kodutrhthen AOM 1971 [KD.MSV, SJ
https://www.youtube.com/watch?v=FJTNa7E2aEE
a o m 1971 kd msv sj
இப்பாடலை வேறு
விதமாக
அலசும்
சுபஸ்ரீ
அவர்களின் குழுவினர் வழங்கியுள்ள
பாடலும்
விளக்கமும்
. இணைப்பு
கீழே
. https://www.youtube.com/watch?v=ZDqXXZ-5Bzk&list=RDZDqXXZ-5Bzk&start_radio=1
qfr
*********
No comments:
Post a Comment