MISSILE FROM TRAIN
ரயிலில் இருந்து ஏவுகணை
என்னது ரயிலில் இருந்து ஏவுகணையா
? என் இருக்கக்கூடாதா? அப்படி ஒரு சாதனையை இந்திய பாதுகாப்பு துறை சென்ற வாரம் அரங்கேற்றியது. ஆம் இப்படி ஒரு திறமைமிக்க போர் முறையை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்
DRDO -இந்திய ராணுவ ஆராய்ச்சியினரின் ஆதரவோடு வடிவமைத்துள்ளது.மட்டுமல்ல வெற்றிகரமாக சோதனை செய்து பல நாட்டினரையும் வியக்க மற்றும் அதிர்ச்சியும் கொள்ள வைத்துள்ளது.
ஏவுகணை அத்தியாயத்தில் இது ஒரு புரட்சி .
என்ன புரட்சியா
? பொதுவாக ஏவுகணைகளைபயன்படுத்த பிரத்தியேக வாகனங்கள் [லாரி /பீரங்கிபோன்ற வாகனங்கள் ] இயக்கப்படும்.
அதிலிருந்து விலகி, சரக்கு ரயில்
[GOODS TRAIN ] போன்ற வாகனங்களில் ஏவுகணைகளை ஏற்றிக்கொண்டு ரயில் மார்க்கமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் இரவோடிரவாக ஏவுகணைகளை DEPLOY செய்ய முடியும். அதாவது எந்த பகுதிக்கும் அனுப்பி ரயிலை போல் போய்க்கொண்டிருக்கும்.
எந்த நின்ற இடத்தில் இருந்தும் தீபாவளி ராக்கெட் போல் விண்ணில் செலுத்துவது மட்டும் அல்ல இலக்குக்கு ஏற்ற வசதியான இடத்தில் இருந்து ஏவுகணை விண்ணில் பாய்ச்சப்படும்.
அதற்கேற்ற வகையில் ரயில் பெட்டிகள் ஹைட்ராலிக் தாங்கிகளால் ஏவுகணை பீய்ச்சும் அமைப்புகளை உரிய கோணத்தில் தூக்கி நிறுத்தும் வசதிகள் கொண்டவை. அதாவது ரயிலை விட்டு ஏவுகணையை எங்கும் சுமந்து செல்ல வேண்டியதில்லை. அதாவது டேங்கர் லாரிக்கு பதில் ரயிலில் இருந்து ராக்கெட் போல் பாயும் ஏவுகணைகள்..
ஒரு ரயிலில் எண்ணற்ற ஏவுகணைகளை தேவையான பெட்டிகளை இணைத்து விரைவாக அனுப்பலாம். ரயிலில் எடுத்து செல்வதால் சாலை நெரிசல் விபத்து கள், மறியல் போன்ற இடையூறுகள் இல்லாமல் பயணிக்கலாம் மேலும் ஏவுகணை தளங்களை கண்காணிப்பது அறவே இயலாத காரியம். பார்த்தால் எதுவும் தெரியாது. ஏதோ சரக்கு ரயில் போவதாக தோன்றும். எங்கோ மறைவான காட்டுப்பகுதியில் நின்றிருக்கும் ரயிலில் இருந்து ஏவுகணைகள் மின்னலெனப்பாயும். இன்றளவில் இவை [AGNI
PRIME] 2000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை திடீரெனத்தகர்த்து விடும். ராடார் கொண்டு தேடிப்பிடிக்க இயலாது.. தேவைக்கேற்ப ரயில் இடம் பெயர்ந்து ஓடி ஒளிந்து விடும் அதற்கு முன் எதிரியின் இலக்கு ஒழிந்து விடும்.
ஏர் பேஸ்
[AIR BASE] NAVAL BASE [நேவல் பேஸ்] என வரையறுக்கப்பட்ட இடத்தில் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கும் புதிய வல்லமையை இந்தியா உருவாக்கி "வாங்க\டா இப்போ
" என்பது போல் எதிரிகளை திக்குமுக்காட செய்து வருகிறது, இது சென்ற வாரத்திய நிகழ்வு .
AGNI PRIME
LAUNCHED FROM TRAIN https://www.youtube.com/watch?v=YMnwP61BFYM
************************************************************
No comments:
Post a Comment