Sunday, September 28, 2025

BOOK CHOICE

 BOOK CHOICE

நூல் தேர்வு

பள்ளிப்பருவத்தில் புத்தகத்தேர்வு என்ற தேவை பெரும்பாலும் எழுவதில்லை. ஆனால் பட்ட / பட்டமேற்படிப்பு நிலை யில் கண்டிப்பாக ஆகச்சிறந்த நூல்களைக்கொண்டே ஒவ்வொருவரும் தம்மை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் எல்லோரும் செய்கிறார்களா என்று முணுமுணுக்க வேண்டாம். அப்படி செய்தோருக்கும்  அல்லாதோருக்கும் தோன்றும் இடை வெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமையை ஒத்ததே . நான் பேசும் அநேக கருத்துகள் எது சிறந்தது என்ற நோக்கில் தானே அன்றி என்ன நடக்கிறது என்பதைப்பற்றி அல்ல.

 நடப்பதை த்தான் பார்க்கிறோமே.

 உயர் கல்வியில் மிகப்பெரும் ஆராய்ச்சி பட்டம் பெற்ற பிறகும் கருத்துகளையும் ஆய்வு விளக்கங்களையும் வகுப்பறையில் முழங்க வேண்டிய விரிவுரையாளர்கள், நோட்ஸ் என்னும் சாதாரண குறிப்புகளை நம்பி வாழ்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

உரிய வழிமுறைகளில் பயிலாமல், உயரிய விளக்கங்களை அறியாமல் ஆசிரியப்பணிக்கு [இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை என்ற மனோ நிலையில்] வந்தாயிற்று. வகுப்பறையில் தன்னை விட கல்வி தகுதி குறைந்தோரிடம் ஹி ஹி ஹி என்று அசடு வழிவதில் உள்ள அவலத்தை மூடி மறைத்துக்கொண்டு உள்ளூர புழுங்கிக்கொண்டு கடன் வாங்கியவன் போல வாயைத்திறக்காமல் தலையைக்கவிழ்ந்துகொண்டு போய் வருவதை விட வேறெதுவும் செய்ய இயலாது.

இந்நிலையே எனக்கு போதும் என்போருக்கல்ல எனது விளக்கங்கள். நல்ல விவரங்களை தேடித்தொகுத்து ஆசிரிய வாழ்வில் உச்சம் தொட எண்ணுவோர் செய்ய வேண்டியவை யாவை, அவற்றை முறையாகப்பெறட்டும் .என்ற அடிப்படையில் தான் கருத்துகளைப்பதிவிடுகிறேன்.

 சரி, கல்லூரி / பல்கலை நிலை கல்விக்கான நூல் குறித்த மேல் விளக்கங்கள் பற்றி பார்ப்போம்.

அவ்வப்போது புதிதுபுதிதாக வரும் நூல்களை தரம் பிரித்து உணர வழிமுறைகள்.

1 நூல் ஆசிரியரின் சமுதாய ஏற்பு [மாணவர்களிடையே அவர் குறித்த மதிப்பீடு] அநேக நூலாசிரியர்களை நாம் அறிந்திட வாய்ப்பில்லை.. ஆசிரியர் குறிப்பில் இருந்தும் பெரிதாக அறிந்திட வாய்ப்பில்லை. ஏனெனில் எல்லோரும் இந்திரன் /சந்திரன் என்று குறிப்பெழுதி விடுகிறார்கள். போகட்டும் ஒரு சில பகுதிகளை படித்துப்பாருங்கள். எழுத்து நடை சீராக முன்னேறுகிறதா அன்றி தொடர்பில்லாமல் துணுக்கு தோரணம் போல்   BITS and PIECES அமைப்பில் இருந்தால் நிச்சயம் பயன் தராது.

2 பதிப்பகத்தார் [PUBLISHERS ]

இந்திய நிறுவனங்களில் கூட உலகமேடையில் அறியப்பெற்ற நூல் வெளியீட்டாளர்கள் உளர்.

 அவர்கள் நல்ல தரமான எழுத்துகளை வெளியிட்டு தம் அடையாளத்தை காப்பாற்றிக்கொள்வர். நல்ல பதிப்பாளர் வெளியிடும் நூல்களை நம்பி வாங்கலாம். விலை சற்று அதிகம் இருக்கும். ஆனால் அச்சுப்பிழை, ஸ்பெல்லிங் இலக்கணப்பிழை இருக்காது. அப்படி யாராவது பிழையான MANUSCRIPT [எழுத்துப்பிரதி ] அனுப்பினால் நிச்சயம் ஏற்காமல் திருப்பி அனுப்பிவிடுவார்.

நல்ல தரமான எழுத்தாயினும் கூட புகழ் பெற்ற SUBJECT EXPERTS இருவரின் கருத்து/பரிந்துரை நன்றாக இருந்தால் நூலை பதிவிடுவார்கள்.   அதுவே [PUBLISHER NAME] ஒரு நூலுக்கு மறைமுக சான்று என்றே கொள்ளலாம்.   

3 ஏற்புடைமை [ACCEPTANCE ]

நூலினை ஏதேனும் பல்கலைக்கழங்களின் பரிந்துரைப்பட்டியலில் இருப்பதாக தெரிந்தால் நூல் சரியானதாக இருக்கும். ஆனால் ஒன்று ஒரு பல்கலையில் மட்டுமே என்றால் யோசிக்க வேண்டும் [சிபாரிசு இருந்திருக்கலாம்] ] 3, 4 பல்கலைகளில் நூல் ஏற்கப்பட்டிருந்தால் நிலைமை வேறு -தரம் குறித்த ஐயம் அதிகம் வேண்டாம் .

4 REPRINT /REVISED EDITIONS

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரு பதிப்பு அல்லது மேம்படுத்தப்பட்டோ வெளி வந்தால் அது பெரிதும் விரும்பப்படுகிறது என்று கொள்ளலாம்.

இன்னும் சில முக்கிய விவரங்களை வரும் பதிவில் காண்போம்

 நன்றி

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...