Tuesday, September 23, 2025

LET US PERCEIVE THE SONG -39

 LET US PERCEIVE THE SONG -39

பாடலை உணர்வோம் -39

மல்லிகை என் மன்னன் மயங்கும் [தீர்க்க சுமங்கலி -1974] வாலி, எம் எஸ் வி, வாணி ஜெயராம்

ஒவ்வொரு பாடலின் வெற்றிக்குப்பின்னும் ஏதோ ஒரு அமைப்பு ரீதியிலான காரணம் மேலோங் கி நிற்கும்.. ஆவை அநேகமாக பின் வரும் ஏதோ ஒன்றினுள் அடங்கும்

காட்சி அமைப்பு ,  கலைஞர்களின் ஜோடிப்பொருத்தம்,

திரையில் முன்னணி கலைஞர்களின் பங்களிப்பு

அழகான வெளிப்புற ப்படப்பிடிப்பு, பாடலில் சொல்லாடல்

இசை அமைப்பில் மாறுபட்ட நளினம்.

இவற்றில் எதுவுமே இல்லாமல் மாபெரும் வெற்றி ஈட்டிய பாடல்

'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் 1974 ல் வந்த 'தீர்க்க சுமங்கலி ' படத்தில் இடம் பெற்றது . எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 1973 செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிறு மாலை சென்னை வானொலியில் இப்பாடல் முதலில் வெளிவந்தது. அடுத்து இரண்டொரு தினங்களிலேயே இலங்கை வானொலி , விவிதபாரதி நிகழ்ச்சிகளில் தினமும் இடம் பெற்று ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெண் குரல் -வாணி ஜெயராம்.

என்னவோ தெரியவில்லை பாடலைக்கேட்ட முதல் நாளே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண் டும்      ஒரு வசீகரப்பாடல் இது எனில் பிழை அல்ல. நான்மட்டும் அல்ல பலரும் இதே கருத்தை ஒலிக்க , இப்பாடல் ஒரு craze என்ற நிலையை சுமார் 10 தினங்களுக்குள் எட்டியது. முன் பின் அறியாத குரல் முதல் பாடலிலேயே சிகரம் தொடுவது ஒரு அபூர்வ நிகழ்வு தான். அவ்வகையில் வாணி ஜெயராமும், எஸ் பி பாலசுப்ரமணியமும் முத்திரை பதித்தவர்கள். இருவரும் எம் எஸ் வியின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். அது போன்ற குரல்கள் கிடைத்தால் எம் எஸ் வி வெகு சிறப்பாகப்பயன் படுத்துவார்.  இப்பாடலிலலும்  அதையே தான் செய்தார் எம் எஸ் வி .

பாடலின் துவக்க இசையிலேயே ஒரு வினோதமான ஒலிக்கலவையாக கருவிகள் ஒலிக்கக்கேட்கலாம் , சுமார் 5 , 6 கருவிகள் குழல் என ஒரு சிறுபட்டாளம் களமிறங்க துவக்கத்திலேயே பாடல் களை  கட்டிவிடுகிறது.

உடனே பெண் குரல் முதல் சொல்லை மட்டுமே ஒலிக்கிறது அதுவே மல்.....லிகை என்று சில நொடிகள் 'ல் ' என்ற ஒலியிலேயே அதிர,  ஒரு புதுமை மலரக்காணலாம். எம் எஸ் வியின் இசையிலேயே எத்துணையோ மல்லிகை உண்டு ஆனால் இது மாறுபட்ட மல்லிகை ஆம் துவக்க சொல்லிலேயே ஆட்டத்தை துவங்குவது பாடலின் பரிமாணத்தை உயர்த்தும் என்பது எம் எஸ்வியின் பார்முலா. அடுத்த மூன்று  சொற்களையும் அதிகம் இடை வெளி இன்றி 'என் மன்னன் மயங்கும் ' என்று பாடி  பொன்னா ... மலரல்லவா ' என்று இழுத்து பாடும் போது பாடலின் சுவை பன்மடங் கு அதிகரிக்க, பாடல் நம்மைப்பீடிக்கிறது , நமக்கு பாடல் பிடிக்கிறது

அதிக சுவையை ஏற்றிய பின், தளர விடலாமா? தொடர்கிறது ட்யூன் என்னும் விந்தை புரியும் வித்தை

எந்  நேரமும் உன்    ... ஸை  போல்  பெண் பா... வை நான்

 பூ ..........சூடிக்கொள்ளவோ ...      மல் ...லிகை என்று பல்லவியிலேயே நுணுக்கம் மிகுந்த சுவையான ட்யூன் அமைப்பு . ஒவ்வொரு இடை இசை துவங்கும் போதும் கிட்டார் மென்மையாக அதிர  பாடலை வழியநடத்துவதென்னவோ வித்தியாசமாக  இசைக்கப்பெற்ற சற்று விரைவான குழல் இயக்கம் தான். ஒவ்வொரு சரணத்திலும் ஏற்றமும் இறக்கமும் எதிர்நோக்காத தருணங்களில் கம்பீரமாக நுழைய இப்பாடல் ஒரு செவிக்கின்பம் எனில் மறுப்பேது?

குரல் வளம் இறைக்கொடை எனினும் பாவ வெளிப்பாடு மனித திறமை அன்றோ. அவ்வகையில் இப்பாடலில் வாணி ஜெயராம் அவர்கள் வெகு நேர்த்தியாக பயணித்து உடனடியாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திறமையாளர் நிலை யை எட்டினார். voice modulation என்னும் குரல் மீது ஆதிக்கம் கொள்ளும் பாங்கு வாணிஜெயராம் அவர்களின் தனித்திறமை என்றே சொல்ல வேண்டும் ஏன் எனில் முதல் பாடலிலேயே ஒரு பாடகி இவ்வளவு வெளிப்படுத்தியுள்ளார் என்றால் அவர் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பது நிரூபணம். கவிஞர் வாலி அதியற்புதமாக வடித்துள்ள கவிதையில்  உணர் வு களும்  சொற்கட்டுகளும் வெகு நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன.

கிட்டார் சித்தார் / வீணை, குழல் போங்கோ / தபலா என மிக குறைந்த கருவிகளை வைத்து இசை அமைத்தே பாடலை உச்சம் தொட வைத்த கவிதை / இசை, குரல் ,பாடும் முறை என்ற வெற்றி ரகசியம் [ப்பாடலின் சிறப்பு

இப்பாடலின் பிற நுணுக்கங்களை சுபஸ்ரீ விளக்க கேட்டு ரசியுங்கள். பின் வரும் இணைப்புகளை கொண்டு பயன் பெறுங்கள்

 https://www.youtube.com/watch?v=hFKSpEzXE_U  MALLIGAI EN MANNAN DHEERGA SUMANGALI 1974 VAALI MSV VJ

https://www.youtube.com/watch?v=JTd-yshqWo0 QFR

vani on stage

https://www.youtube.com/watch?v=fe1mc4OODmI&list=RDfe1mc4OODmI&start_radio=1   VJ ON STAGE

************************************************************************************

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -39

  LET US PERCEIVE THE SONG -39 பாடலை உணர்வோம் -39 மல்லிகை என் மன்னன் மயங்கும் [ தீர்க்க சுமங்கலி -1974] வாலி , எம் எஸ் வி , வாண...